வியாழன், 10 நவம்பர், 2016

உ.பி.யில் பெரியார் விழா கொண்டாடும், உத்தரப்பிரதேச பெரியார் தொண்டர் ஈரோட்டில்



நம் நாட்டில் எங்கெல்லாம் பார்ப் பனியத்தின் விஷக் கொடுக்கு ஒட்ட நறுக்கப்பட வேண்டியிருக்கிறதோ - எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியும் சமூக நீதியின் பரிபாலனமும் தேவையாக இருக்கிறதோ அங்கெல்லாம் பெரியாரியலின், - பெரியார் என்ற ஆளு மையின் இருப்பு தவிர்க்க முடியாததாகி வருகிறது. பகுத்தறிவுப் பகலவனின் ஒளிவீச்சு இன்று நாட்டின் மூலை முடுக் கெல்லாம் பிரகாசித்துக் கொண்டிருக் கிறது என்பது நாம் அறிந்த ஒன்றே.]
வடக்கே, உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதுவும் ஒரு குக்கிராமத்தில் அய்யாவின் ஆறடி உருவச் சிலை கம்பீரமாக நின்றுக் கொண்டிருப்பதையும் சாதீய வல்லாதிக் கத்தின் எதிர்ப்பையும் மீறி அங்கு அய்யா வின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும், அதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு அவருக்கு மரியாதை செய் வதையும் அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரும் தந்தை பெரியாரின் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளவ ருமான அன்பர் ஒருவர் மூலமாக அறிந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளும் அருமையானதொரு சந்தர்ப்பம் சமீபத்தில் எமக்கு வாய்த்தது.
கடந்த டிசம்பர் (2015) 27ஆம் தேதி மாலை ஈரோடு பெரியார் மன்றத்திற்கு வந்த அந்த தோழர், தன்னை விஜய் பகதூர்பால் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஊரில் இருந்து தான் சொந்த வேலையாக  பெங்களூருக்கு வந்ததாகவும் அப்படியே, தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த இல்லத்தைப் பார்த்து விட்டு போவது என்று தீர்மானத்துடன் ஈரோடு வந்ததாகவும் கூறினார். தமிழே சுத்தமாகத் தெரியாத அவர் இந்தியில் தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக் கும்போது அவர் குரலில் அப்படியொரு அபிமானமும் பெருமிதமும்!
உ.பி.யை சேர்ந்த இந்த பெரியார் தொண்டர் நமது விடுதலைக்கு அளித்த பேட்டி:   என் சொந்த ஊர் உ.பி.மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் ரெண்டிகராப்பூர் என்ற கிராமம். பாட்டீ தாலுகாவில் சரையா என்ற கிராமத்தில் அரசு நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரிய ராகப் பணியாற்றி வரும் நான் இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற விருக்கிறேன்.
எங்கள் உ.பி.,மாநிலத்தில் அநேகமாக எல்லோருமே பெரியாரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு கன்சிராம் மற்றும் மாயாவதி ஆகியோர் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.  எனக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் தந்தை பெரியாரை பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் அவா. ஆனால் எனக்குத் தெரிந்து, பெரியாரைப் பற்றியும், பெரியாரின் சிந்தனைகள், தொண்டுகள் போன்றவை குறித்தும் இந்தியில் அய்ந்தாறு புத்தகங்கள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அவரைப் பற்றி இந்தியில் நிறைய நூல்கள் வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
பெரியாரின் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டுள்ள நானும் என் கிராம மக்களும் ஊரில் அவருக்கு சிலை ஒன்றை நிறுவியுள்ளோம். கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்தநாளை எங்கள் ஊரில் வெகு சிறப்பாகக் கொண்டாடினோம். அய்ந்தா யிரத்திற்கும் அதிகமானோர் அதில் கலந்து கொண்டனர். அதனைக் கண்டு பொறுக்க முடியாத ஊர் பார்ப்பனர் களும், தாக்கூர் சத்திரிய சாதிப் பிரிவின ரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத் தாண்டு பெரியாரின் பிறந்த நாளை கொண்டாட விடுவதில்லை என்று வரிந்துக் கட்டிக் கொண்டு செயல்பட் டனர். அம்மேல் சாதிக்காரர்கள் கொடுத்த அழுத்தத்தால் மறு ஆண்டு அதாவது 2014ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நா
ளைக் கொண்டாட காவல் துறை எங்களுக்கு அனுமதி மறுத்தது. அத்தோடு நிற்காமல் ஏதேதோ குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என் மீது உட்பட மொத்தம் 9 பேர் மீது பல்வேறு வழக்குப் பிரிவுகளில் எப்.அய்.ஆர்., பதிவு செய்தது காவல்துறை; அவ்வழக்கு விசா ரணை பிரதாப்கர் நீதிமன்றத்தில் இன்ன மும் நடந்து கொண்டு தானிருக்கிறது. அதுமட்டுமின்றி, கல்வித் துறை என்னை 2 மாத காலத்திற்கு பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) கூட செய்தது.
இதற்கெல்லாம் அசராத நாங்கள் விடாமல் போராடினோம், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தந்தை பெரியாரின் பிறந்தநாளை உற்சாகத்துடன் அதுவும் காவல்துறையின் முறையான அனுமதி யுடன், கொண்டாடினோம். நான்காயிரத் திற்கும் அதிகமான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாறு விஜய பகதூர்பால் பேட்டியில் தெரிவித்தார்.
பெரியார் மன்றம் வந்திருந்த விஜய் பகதூர்பாலுக்கு அய்யா குறித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த சில நூல்களையும், அய்யா வின் உருவச் சிலையையும் கழக அமைப் புச் செயலாளர் த.சண்முகம் அன்பளிப் பாக வழங்கினார்.
நேர்காணல்: த. சண்முகம், ஈரோடு
-விடுதலை ஞா.ம.13.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக