ஞாயிறு, 20 நவம்பர், 2016

நீதிக்கட்சியின் செயலாக்கங்கள்! ந.அ.ரேணுகாதேவி


(நீதிக்கட்சியின் அரும்பணி பற்றியும், பார்ப்பனர் - பார்ப் பனரல்லாதார் போராட்டங்கள் பற்றியும் “தமிழம்” இதழில்
வெளி வந்துள்ள அரிய கட்டு ரையே இது - அவசியம் படிக்க வேண்டியது.               -ஆ.ர்)
முதன் முதலில் இந்து மதம் சிந்து வெளியில் பரவிற்று அது ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கிழக்கு வங் கத்தைத் தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளில் அது பின்னர் பரவிற்று. சாதிப் பிரிவுகளை அது அடிப்படை யாகக் கொண்டிருந்தது.
இந்து மதச் சாதி முறையில், பிரா மணர், சத்திரியர், வைசியர் சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன.
அந்நான்கு பிரிவுகளில் பிராமணர் அல்லது புரோகிதர்கள் தலைமைப் பிரிவினர் ஆயினர். வேதம் எழுதுதல். இறை வணக்கப் பாடல்களைப் பாடுதல், மதச் சடங்குகளைச் செய்தல், தொன்மம் (புராணம்) வரைதல் போன்றவை அவர்கள் தொழிலாகும்.
அதிகாரத்தையும், செல்வத்தையும் உடைய அரசர்களும், அவர்களின் போர் வீரர்களும் சத்திரியர் எனப்படும் இரண் டாம் பிரிவினர் ஆயினர். அவர்கள் கடமை நாட்டைக் காப்பது ஆகும்.
வைசியர் எனப்படுவோர் மூன்றாம் பிரிவினர் ஆயினர். அவர்கள் தொழில் வாணிகம் செய்தலே ஆகும்.
குமுகாயத்தின் பிற தொழிலாளர் யாவரும் சூத்திரர் எனப்பட்டனர். அவர்கள் நான்காம் பிரிவினர் ஆயினர். அவர்கள் தீண்டப்படாதவராக கருதப் பட்ட கீழ் சாதியினராய் விளங்கினர்.
இந்நான்கு பிரிவினர்களும் “சாதி இந்துக்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

புறச்சாதியாரின் அவலநிலை
இவர்களைத் தவிர்த்த ஏனைய மக்கள் புறச் சாதியர்களாய் ஒதுக்கப்பட் டனர். அவர்கள் குத்திரர்களாலும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட் டனர். சாதி இந்துக்கள் வாழும் பகு திக்கு மிகுந்த தொலைவில் அவர்களைக் குடியிருக்கச் செய்தனர் இந்நாளிலும், சிற்றூர்ப் பகுதிகளில் ஊர்ப்புறத்தே அமைந்த சேரிகளில் அவர்கள் வாழ் வதை நாம் காணலாம்.
அவர்களைப் பஞ்சமர்கள் என்றும் அழைப்பதுண்டு. பஞ்சமர்கள் என்றால் அய்ந்தாம் பிரிவினர் என்பது பொரு ளாகும். இறந்து போன விலங்குகள் பிணங்கள் ஆகியவற்றைப் புதைத்தலும், ஊர்ப் பகுதியில் குப்பை கூளங்களை அகற்றித் துப்புரவு செய்தலும், இவைபோன்ற இழி தொழில்களைச் செய்தலும் அவர்கட்குத் தொழிலாயின.
விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர்
சாதி இந்துக்கள் எனப்படும் உயர் குடியினர் வாழும் பகுதிகளின் பொது வீதிகளில் அம்மக்கள் செல்லக் கூடாது எனவும், பொதுக் கிணற்றில் தண்ணிர் எடுக்கக் கூடாது எனவும், சத்திரம் சாவடிகளைப் பயன்படுத்தக்கூடாது எனவும்;
கோயில்களுக்குள் நுழைதல் கூடாது எனவும் தடுக்கப்பட்டனர். அவர்கள் எவ்வகை உரிமையும் அற்ற அடிமைகளையும், விலங்குகளையும் விட மிகக் கீழாக நடத்தப்பட்டனர்.
தென்னிந்தியாவில் பிராமணரல்லா தார் அனைவரையுமே 'குத்திரர்கள்' என்று பிராமணர்கள், அழைத்தனர். 'நசூத்ராய மதிம்தத்யாத்' என்னும் வட மொழிச் செய்யுள் அடியின் பொருள் சூத்திரர்கள் படிக்கக் கூடாது' என்ப தாகும்.
இப்படிப்பட்ட முறைகளின் விளைவு களாலும், குமுகாய உரிமைகள் மறுக்கப் பட்டமையாலும் சூத்திரர்கள் எனப்பட் டோர் கல்வியறிவு பெற முடியாமல் பின்தங்கிப் போனார்கள். மக்களிடையே உயர்வு தாழ்வு உண்டாயிற்று: தாழ் குடியினர் தீண்டத்தகாதவர் என்னும் நிலைகள் ஏற்பட்டன.
தியாகராயரின் விருப்பம் .
இவ்வாறு மக்களிடையே ஏற்பட்ட தீண்டாமையை அறவே ஒழிக்கவும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவும் தியாகராயர் விரும்பினார். நிகராண்மை (Equality) உடன் பிறப்பாண்மை (Fraternity) பிறப்புரிமை (Liberty) என்னும் பண்பியல்புகளை மக்களிடையே மலரச் செய்ய அவர் முயன்றார்; எனவே, இவை நயன்மை (நீதி)க் கட்சியின் தலையாய கொள்கைகளாய் விளங்கின.
சாதி அமைப்புப்படி பிராமண மக்களே கல்வியறிவு பெற்றவராக விளங் கினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தி லும்  அவர்களே ஆங்கிலங் கற்று, பிற இந்திய மக்களுக்குக் கிடைக்க வேண் டிய பட்டம் பதவிகள் அனைத்தையும் தட்டிக் கொண்டனர்.
சென்னை மாநிலத்தில் 1912இல் பிராமண மக்கள் மேலாண்மை எவ் வாறு இருந்தது என்பதைப் பின் வரும் புள்ளி விளக்கத்தால் அறியலாம்.
பிராமணர்களின் ஆதிக்கம்
சென்னை மாநில உள்ளாட்சித் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1) தெ. ஆற்காடு, செங்கற்பட்டுத் தொகுதி: திரு. ஆர். சீனிவாச அய்யங்கார்.
2) தஞ்சை, திருச்சித் தொகுதி. திரு.வி.கே இராமானுச ஆச்சாரியார்
நயன்மைக் கட்சிப் பொன் விழா மலர் பக்கம் 150.
3) மதுரை: இராமநாதபுரம் தொகுதி: திரு.சி.ராமையங்கார்.
(4) கோவை, நீலகிரித் தொகுதி திரு. சி. வெங்கட்ரமண அய்யங்கார்.
(5) சேலம், வட ஆற்காடு தொகுதி: திரு. பி. வி. நரசிம்ம அய்யர்,
6) சென்னை நகர் தொகுதி: திரு. சி. பி. இராமசாமி அய்யர்.
தில்லி நடு அவையில் இடம் பெற்றவர்கள்:
(1) செங்கற்பட்டு மாவட்டம்: திரு எம். கே. ஆச்சாரியார்.
(2) சென்னை: திரு. தி. இரங்காச்சாரி,
உயர் அற மன்றத்தில் இடம் பெற்றிருந்த நடுவர்கள்:
(1) திரு. எ.சு. சுப்பிரமணிய அய்யர்.
(2) திரு. வி கிருஷ்ணசாமி அய்யர். '
(8) திரு. வி. சேசகிரி அய்யர்.
(4) திரு. பி. ஆர். சுந்தரம் அய்யர்.
எல்லா மக்களுக்கும் தொழில்
பொதுவாக்கப்பட வேண்டும்
எனவே கல்வி, பட்டம், பதவி ஆகிய அனைத்தும் எல்லா வகுப்பினர்க்கும் உரியவைகளாக ஆக்கப் படல் வேண் டும் என வெள்ளுடை வேந்தர் தியாக ராயர் எண்ணினார்.
ஆகவே, அவர் 1916 திசம்பரில் பிராமணரல்லாத மக்களுக் கும், அவை மூன்றிலும் ஒத்த உரிமை கிடைப்பதற்கான ஓர் அறிக்கையைத் (Menifesto) தீட்டி வெளியிட்டார். எப்படி கல்வி எல்லா மக்களுக்கும் பொதுவாக்கப்படல் வேண்டுமோ அப்படியே தொழிலும் எல்லா மக்களுக்கும் பொதுவாக்கப் படல் வேண்டும் என்று தியாகராயர் வலி யுறுத்தி வந்தார்.
தியாகராயரின் அன்றைய கல்விக் கண்ணோட்டம் இன்றும் பொருந்துவ தாய் உள்ளது, தொழில், தொழில்: நுணுக்கம் ஆகியவற்றின் பயிற்சி எல்லா இனத்தார்க்கும் விரிவாக்கப்படல்வேன் டும் என்பதில் அக்கறை உள்ளவரா யிருந்தார்.
அது சார்பாக 1904 இல் சென்னையில் நடைபெற்ற தொழிலியல் மாநாட்டில், நம் நாட்டு ஏட்டுக் கல்வியின் பயனில்லாமையை விளக்கிப் பேசினார். நம் கல்வித் திட்டம் நாட்டிற் குச் செல்வம் தேடித் தரக்கூடியதொழில் வல்லுநர்களையும், கலைஞர்களையும் தோற்றுவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஏற்றத்தாழ்வு அகல வழிகண்டார்
கைத்தொழில் செய்வது கீழ்க் குடியினர் வேலை என்று. அந்நாளில் தவறாகக் கருதப்பட்டது. அந்நிலையை மாற்றுவதற்குத் தியாகராயர் எண் ணினார்.  கைத்தொழில் எல்லா வகுப் பினர்க்கும் உரிய தொழிலாகச் சிறந்து விளங்கக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்றார்.
அப்படி மாற்றி அமைத்து வெற்றி கண்டால் மக்களிடையேயுள்ள தாழ்வு நிலைகளும், உயர்வு தாழ்வு மனப்பான்மையும் ஒழியும் என வற்புறுத்தினார்
'படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் ஆகியவற்றால் மட்டுமே ஒரு நாடு முன்னேறிவிடும் என்று எண் ணுவது தவறு இளம் அகவை முதற் கொண்டு, கல்விப் பயிற்சியுடன் ஏதாகிலும் ஒரு தொழிலையும் எல்லா வகுப்பு மாணவர்க்கும்.அளித்தல் வேண்டும்' எனத் தியாகராயர் பன்முறை. வலியுறுத்தியுள்ளார்.
1929 இல் தொடக்கக் கல்விச் சட்டத்தின் மீதான உரையின்போது தியாகராயர், இப்போதுள்ள கல்வி முறை ஒவ்வொரு வகையிலும் பிழை யுள்ளதாகும்.  ஏனெனில், அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியவுடன், அக்கல்வி அவர்களுக்குப் பயன்படுவ தில்லை. அவ்வாறு அவர்களுக்கு அளிக் கப்படும் கல்வி முற்றிலும் பயனற்றுப் போகின்றது; அவர்கள் பள்ளியில் கழித்த ஆண்டுகளும் வீணானவை ஆகின்றன".
பள்ளியில் இளைஞர்கள். ஒரு நாளில் சில மணி நேரமே கற்றல் வேண்டும். சில மணி நேரம் வேலை செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் தாம் செய்யப்போகும் தொழிலை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
தம் இயல்பான தொழிலை விட்டுவிட்டு ஏதாகிலும் ஒரு வேலையை நாடிச் செல்லும் எண்ணத்தை அவர்கள் கொள்ளமாட்டார்கள். அவர்கள், தம் தொழிலை - தாம் கற்ற தொழிலைச் - சரியான முறையில் செய்வதற்கான எண் ணத்தைக் கொள்ளும் படிச்செய்தல் வேண்டும்.'
தொழில் நுட்ப பயிற்சி அவசியம்
"தம் தொழிலைத் தொழில் நுட்பத் தோடு செய்வதற்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்சி அளித்தால் அவர்கள் எதிர் காலத்திற்குப் பயனுள்ளவர்களாக விளங்குவார்கள். அது தான் இளைஞர் களுக்கு அளிக்கும்.
கல்வியின் நோக்க மாகவும் பயனுமாகவும் இருத்தல் வேண் டும். அப்படிச் செய்யாத வரையில், நாம் அளிக்கின்ற கல்வி பிழையானது. என் றும், அதனால் பயன் ஒன்றும் இல்லை என்றும் நான் கூறுவேன்' என்று கூறி யுள்ளார்.
வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறையால் தான் எல்லா வகுப்பினரும் ஒத்த அளவில் அரசுத்துறை அலுவல்கள் பிற துறைத் தொழில்கள் போன்றவற்றைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என நயன்மை (நீதி)க் கட்சி யினர் எண்ணினர்.
அதனால் ஆகஸ்ட் 1921 இல் வகுப்பு வாரி ஒதுக்கீட்டுச் சட்டம் (Communal G.O.) ஒன்றைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினர். அச்சட்டத்தின் விளைவால் தான் எல்லா இன மக் களும் எல்லாத்துறைகளிலும் ஒத்த வாய்ப்புப் பெறலாயினர். பிராமணருக் குக் கிடைக்கப்பட வேண்டிய ஒதுக் கீட்டை இச்சட்டம் வரையறை செய் ததே தவிர, அம்மக்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அது இயற்றப்படவில்லை.
பதவி ஒதுக்கீடு
பிராமணரல்லாதாருக்கு அளிக்கப் பட்ட ஒதுக்கீட்டு முறையால், முன் னாள் படைத் துறை அமைச்சர் திரு. வி.கே.கிருட்டிண மேனன் இராவ் சாகிப் என். சிவராசு போன்ற எட்டுப் பேர்கள் சட்டக் கல்லூரியின் முதல் வராகவும், பேராசிரியராகவும், துணைப் பேராசிரியர்களாகவும் அமர்த்தப்பட் டனர். அவ்விடங்களில் அதற்கு முன் ஆங்கிலேயர்கள் அல்லது பிராமணர்கள் பதவி வகித்தனர்.
வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறையில் அரசுப் பதவிகளிலும், பிற பதவி அமர்த்தங்களிலும் 50 விழுக்காடு பிரா மணர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு ஒரே அளவில் ஒதுக்கப் பட்டது. மற்றொரு 50 விழுக்காடு பிராமணரல்லாத முன்நிலை இனத்தவர் (Forward) பின் தங்கிய இனத்தவர் (Backward) தாழ்த்தப்பட்டோர் (Scheduled) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டது.
4.11.1927 நாளிட்ட ஆணை 1071 இன் படி பதவிகள் அனைத்தும் 12 என்னும் பிரிப்பெண் அடிப்படையில் கொடுக்கப் பட்டன. இவ்வாணை முன்னாள் நயன்மைக்கட்சி அமைச்சர் திரு. எஸ். முத்தையாவால் கொண்டு வரப்பட்டது.
வகுப்புவாரி ஒதுக்கீட்டில் கிறித்தவர், முஸ்லீம்கள் ஆகியோர் எண்ணிக்கைக்கு ஒத்தாற்போல் பிராமணர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்கள் தொகையில் நூற்றுச்கு மூன்று விழுக் காடுதான் பிராமணர்கள். அப்படியிருந் தும் நயன்மைக் கட்சியினர் பிராமணர் கட்கு அய்ந்தரை மடங்கிற்கு மேல் ஒதுக்கீடு செய்தனர்.
நயன்மைக் கட்சியின் நோக்கம்
பிப்ரவரி 15, 1976 இல்ல சுட் ரேட்டர்டு வீக்லி ஆப் இந்தியா' என்னும் ஆங்கில இதழில் 26 ஆம் பக்கத்தில் இரமேசு சந்திரன் என்பவர் நயன்மைக் கட்சி பற்றி ஒரு கட்டுரை எழுதி யுள்ளார்.
அதில் அவர், நயன்மைக்கட்சி மாண்டேகு - செம்சுபோர்டு சீர்திருத்தத் தினால் ஏற்பட்ட நன்மைகளை விரைந்து பற்றிக்கொண்டது. 16 ஆண்டுக் காலத்தில் அது சென்னை மாநிலத்தை 12 ஆண்டுகள் ஆண்டது.
அக் காலத்தில் அச்சீர்திருத்தத்தினால் மாநிலத் தன்னாட்சி (Provincial Autonomy) நடைமுறையில் இருந்தது 1921 முதல் 1926 வரை இயங்கிய இரண்டு அமைச்சரவைகளும் பயனுள்ள பல செயல்களைச் செய்தன.
அரசுப் பணிகளை இந்தியர்களுக்கு அளித்தல், கல்விச் சீர்திருத்தம், கூட்டுறவு இயக்கம், பெண்ணடிமை நீக்கம் ஆகியவை அச்செயல்களில் மேலும் மேலும் அமர்த்துவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது’’ என்று ஓரிடத் தில் குறிப்பிட்டுள்ளார்.
- நன்றி : ‘தமிழம்’
-விடுதலை ஞா.ம.,19.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக