வெள்ளி, 11 நவம்பர், 2016

தந்தை பெரியாரை தம் நாவலில் பதிவு செய்த எழுத்தாளர் மரணம்


அமெரிக்காவின் இனப்பிரச் சினைகள் குறித்து கவனம் செலுத்திய , "டு கில் எ மாக்கிங் பேர்ட்" (To Kill A Mocking Bird) என்ற புகழ்பெற்ற புதி னத்தை எழுதிய அமெரிக்க கதாசிரியர் ஹார்ப்பர் லீ (வயது 89) 19.2.2016 அன்று மறைந்தார்.
அந்நூலின் எழுத்தாளர் ஸ்காட்ஸ் பொரே பையன்கள்மீதான வழக்குக்கு எதிராக தந்தை பெரியார் அளித்த பங்களிப்புகுறித்து பதிவு செய்துள்ளார். மேலம் தந்தை பெரியாரின் அய்ரோப் பிய சுற்றுப்பயணம்குறித்து விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து அமெரிக் காவின் பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான டெய்லி வொர்க்கர் செய்தியை வெளியிட்டிருந் தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கடந்த ஆண்டு 20.8.2015 அன்று தி இந்து ஆங்கில இதழில் வரலாற்று பேரா சிரியர் எழுத்தாளர் தி.இரா.வேங்கடபதி இதுகுறித்து எழுதியிருந்தார்.
1960ல் பிரசுரமான அவரது இந்த நாவல் உலகெங்கிலும் சுமார் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. அவருக்கு புலிட்ஸர் பரிசும் இந்த நாவலுக்காகக் கிடைத்தது. 40 மொழிகளில் இது மொழி யாக்கம் செய்யப்பட்டது. இந்த நாவல் படமாகவும் வெளிவந்தது. அப்படத்துக்கு மூன்று ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.
"டு கில் எ மாக்கிங் பேர்ட்" கதை அமெரிக்காவின் தென் மாகாணங் களில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட காலப்பகுதியில் , மேகோம்ப் என்ற கற்பனை நகரை நிலைக்களனாகக் கொண்டு அமைந் திருந்தது .
அந்நாவலில் டாம் ரோபின்ஸன் என்ற கறுப்பினத்தவர் ஒரு வெள்ளை யினப் பெண்ணை பாலியல் வல்லு றவுக் குட்படுத்தியதாகத் தவறான குற்றச் சாட்டுக்குள்ளாகிறார். அட்டிக் கஸ் ஃபின்ச் என்ற ஒரு வழக்குரைஞர் அவருக்காக வாதாடு கிறார். இந்த வழக்கு ஏற்படுத்திய பரபரப்பும் ஆவே சமும், ஃபின்ச் ஒரு வழக்குரைஞர் என்ற முறை யில் நீதிக்காகப் போராடுவதும், ஃபின்ச் சின் ஆறுவயது பெண் குழந்தையின் பார்வையில் எழுதப்படுகிறது இந்தக் கதையில்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மன்ரோவில் நகரில் 1926இல் பிறந்த இவரது முழுப்பெயர் நெல் ஹார்ப்பர் லீ. அவரது தந்தை அந்நகரில் வழக்குரைஞராகப் பணி யாற்றி யவர். பத்திரிகை ஆசிரியராக வும் இருந்தார்.
ஹார்ப்பர் லீ அலபமா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர் பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் ஓராண்டு படித்தார். ஆனால் தனது படிப்பை முடிக்க ஆறுமாதங்கள் இருக்கும் போதே அவர் நியூயார்க் நகருக்கு இலக்கியப் பணியைத் தொடர சென்றுவிட்டார்.
இந்த நாவலுக்குப் பின்னர், சமீபத்தில் கடந்த ஆண்டுதான், "கோ செட் எ வாட்ச்மேன்" (நிஷீ ஷிமீt கி கீணீtநீலீனீணீஸீ) என்ற அவரது பிரசுரிக்கப்படாத புதினம் வெளியானது. "டு கில் எ மாக்கிங் பேர்ட்" என்ற அவரது முதல் நாவலின் தொடர்ச் சியாக இந்தக் கதை அமைந்திருந்தது.
பெரும்பாலும் விளம்பரத்தை தவிர்த்த ஹார்ப்பர் லீ, அவ்வப்போது பொது அரங்குகளில் தோன்றி வந்தார். பிரான் ஸின் நோத்ர டேம் பல்கலைக் கழகம் அவருக்கு 2006ஆம் ஆண்டில் கவுரவ டாக் டர் பட்டம் வழங்கியது.
அதற்கு அடுத்த ஆண்டு அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் இருந்து "சுதந்திரப் பதக்கம்" வழங்கப் பெற் றார். அமெரிக்க வாழ்க்கைக்கும் கலாசாரத் துக்கும் அவர் அளித்த சிறப்பான பங்களிப்புக்கு இது அங்கீகார மாக வழங்கப் பட்டது.
-விடுதலை,27.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக