செவ்வாய், 1 நவம்பர், 2016

முக்காடு அணிய மறுத்து ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக வாகையர்

தெஹ்ரான், அக். 31- ஈரான் தலைநகர் தெஹ்ரானில் டிசம் பர் மாதம் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இதற் கான அதிகாரப்பூர்வ வெப் சைட்டில் பெண் வீராங்கனை கள் துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும் இடத்திலும், ஈரா னின் பொது இடங்களிலும் ஈரான் நாட்டின் விதி மற்றும் கட்டுப்பாட்டின்படி முக்காடு போட்டுதான்  செல்வது அவ சியம் என்று குறிப்பிடப்பட் டிருந்தது.

இதனால் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவின் முன்னாள் உலக வாகையரும், இந்தியாவின் முன்னணி வீராங் கனையுமான ஹீனா சித்து ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடரை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹீனா சித்து கூறுகையில் சுற்றுலா பயணி கள் அல்லது வெளிநாட்டு விருந்தினர்கள் கட்டாயம் முக் காடு அணிய வேண்டும் என்று வற்புறுத்துவதுபோல், வீராங் கனைகளை வற்புறுத்துவதை நான் விரும்பவில்லை.

ஆகவே, இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறேன். உங்களுடைய மத நம்பிக் கையை நீங்கள் கடைபிடிக் கலாம். உங்களுடைய மத நம் பிக்கையை என்மீது கட்டாயப் படுத்தினால், அப்புறம் நான் போட்டியில் கலந்து கொள்ள விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இவரது முடிவு குறித்து இந் தியாவின் தேசிய ரைபிள் அசோசியேசன் தலைவர் ரனிந் தர் சிங் கூறுகையில் நாங்கள் ஈரான் சூட்டிங் பெடரேசன் உடன் நல்ல உறவு வைத்துள் ளோம். அவர்களுடைய கலாச் சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சுற்றுலா பயணிகள் அல்லது உயர்மட்ட அதிகாரிகள் என யாராக இருந்தாலும் ஈரான் சென்றால் முக்காடு அணிய வேண்டும். ஹீனாவைத் தவிர மற்ற அனைத்து இந்திய வீராங் கனைகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார்.

ஹீனா 2013-ஆம் ஆண்டும் இதுபோன்று 6-வது ஆசிய சாம் பியன்ஷிப்ஸ் தொடர் புறக்க ணித்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

-விடுதலை,31.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக