ஞாயிறு, 8 மே, 2022

* கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.


* இந்த காலகட்டம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி நடந்து,அதில் நடராசன் தாலமுத்து மரணமடைந்தனர்.

* தலைவர் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

* ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் கூட சிறைக் கொட்டடியில்.
* 
* ஆச்சாரியார் ஆட்சி மீது கடுமையான அதிருப்தியின் உச்சம்.
* இந்தக் காலகட்டத்தில்தான் குள்ளநரி வைத்தியநாத அய்யரைக் கொண்டு நடத்தப்பட்டதே இந்த நாடகம்.
* 
* காட்சிக்குள் செல்வோமா?
* கனஜோராய் விளம்பரம் படுத்தப்பட்டது வைத்தியநாத அய்யரின் கோயில் நுழைவுப்
* போராட்டம் என்று.
* 
* கோயிலின் நடை திறக்கப்படாத நேரத்தில்
* அதற்கு முன்பாகவே சின்ன ஏற்பாட்டை குள்ளநரி வைத்தியநாத அய்யர் செய்து கொண்டார்.
* 
* நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியின் அனுதாபி S.R.நாயுடு ,வைத்திய நாத அய்யருக்கு உதவினார்.இவரின் ஏற்பாட்டில்

* ஒரு பட்டர் பூஜை செய்வதற்காக உள்ளே நின்றார்.
* காலை 8-45-மணி
* இவர்கள் திமுதிமுவென்று கதவின் அருகில் போய் நின்றவுடன்- பயந்து விடாதீர்கள்
* 
* பஞ்சமர் 5-பேர்+1 நாடார்(அன்றைக்கு நாடார்களுக்கு ஆலய பிரவேச உரிமை இல்லை)மொத்தம் ஆறு பேர்கள்.
* 
* கதவு திறந்தது;பதிகம் பாடி அல்ல; உள்ளே இருந்த பட்டரின் புண்ணியத்தால்
* திருக்குளத்தில் நீராடி பூஜை புனஸ்காரங்கள் முடிந்து வெளியேறினார்கள்.

* பட்டருக்கு தெரியாது இவர்கள் பஞ்சமர்கள்,
* நாடார் என்று.
* வெளி உலகுக்கும் இப்படி சம்பவம் நடைபெற்றது யாருக்கும் தெரியாது.
* 
* அன்றைக்கு இருந்த சட்டப்படி கோயில் அறங்காவலர் அனுமதியில்லாமல் இந்துக்களின் எந்த பிரிவினரும் கோயிலுக்குள் நுழைய விடுவது கிரிமினல் குற்றம்.
* 
* இந்தச் சட்டப்படி வைத்தியநாத அய்யர் வகையறாக்கள் மீதும் நிர்வாக அதிகாரிகள் மீதும்
* கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
* 
* இந்த இடத்தில் ஒருமுக்கியமான பிளாஷ் பிளாக்.
* இந்த நாடக சம்பவம் நடந்தது-8-7-39-
* இதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஶ்ரீமான் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதமர்.
* 
* அன்றைக்கு ஆதி திராவிடத் தலைவர் எம்.சி.
* இராசா-15-8-38-அன்று சட்ட மன்றத்தில்
* ஆலய நுழைவு மசோதாவை கொண்டு வந்தார்.
* விடுவாரா குல்லூகபட்டர்.கங்கணம் கட்டி தோற்கடித்தார்.ஆதரவு-24-எதிர்ப்பு-130-
* 
* மற்றுமொரு வரலாற்று சோகம் என்னவெனில் காங்கிரஸின் ஆதி திராவிட அமைச்சரும்
* மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
* 
* பின் ஏன் வைத்தியாத அய்யரை கொண்டு இந்த நாடகம்?
* நாங்கள் தான் ஆலய பிரவேச உரிமைக்கு போராடினோம்!என்று வரலாற்றில் பதிந்து கொள்ளத்தான்?
* 
* சுயமரியாதை இயக்கம் நடத்திய 1927-1928-களில் உண்மையாக நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தை இருட்டடிக்கத்தான்.

* இராசகோபாலாச்சாரிக்கு ஆதரவாக  நின்று கிரிமினல் வழக்கில் சிக்கிக் கொண்ட வைத்திய நாத அய்யர் வகையறாக்களை காப்பாற்ற வேண்டாமா?என்ன!

* பிரிட்டிஷ் கவர்னரை சந்தித்து-1935-இல் கவர்னருக்கு அரசியல் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழைந்தால்,அதற்காக அர்ச்சகர்கள்,அதிகாரிகள்,தர்மகர்த்தாக்கள் இவர்கள் மீது வழக்கு தொடர்வதை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

* வைத்தியநாத அய்யரையும் அர்ச்சகரையும் எஸ்.ஆர்.நாயுடுவையும் காப்பாற்ற வந்த சட்டமே ஒழிய ,ஆலய பிரவேச உரிமை சட்டம் அல்ல.

- [ ] ஆலய நுழைவு மசோதாவை, சட்டமன்றத்தில் தோற்கடித்தவர்களுக்கு.                வரலாற்றில்-போராடியவர்கள் பட்டம்.

- [ ] அன்றைக்கு பேப்பரும் பேனாவும் அவாள் கையில்.ஒரு பொய்யை தெரிந்தே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது வரலாறு ஆகி விடுகிறதே!

- [ ] உண்மையான ஆலய நுழைவுப் போராட்டத்தை துவங்கியவர்கள்-நாடார் குல பெருமக்கள்-அது19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

- [ ] இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை பெரும் திரளான மக்களுடன்,நடத்தியது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

- [ ] காண்போம்.அடுத்தடுத்த பதிவுகளில்
- [ ] முடிவுரையை எழுதாமல் விட்டு விட்டேனே?
- [ ] பின் எப்போது ஆலய கதவுகள் எல்லோருக்கும் திறந்தன.

- [ ] 1947-இல் ஓமந்ததூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த காலகட்டத்தில்
-பன்னீர்செல்வம் முகநூல் பக்கம்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கழகத்தின் சமூகநீதி மாநாடு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடும் - ஈரோட்டில் மே 15, 16



கழகத்தின் சமூகநீதி மாநாடு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடும் ஈரோட்டில்  மே 15, 16 ஆகிய நாள்களில் மிகுந்த எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சமூகநீதித் தலைவர்கள் வந்திருந்தனர். ஈரோடு சி.எஸ்.அய் பள்ளித் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் மாநாட்டுப் பந்தலை தோழர்களின் வேண்டு-கோளுக்கு இணங்க திறந்து வைத்து மாநாட்டைத் துவக்கி வைத்தேன். முதல் நிகழ்வில் ‘சமூகநீதிக் கருத்தரங்கம்’ என்னும் பொருள் பற்றி அறிஞர் பெருமக்கள் ஆய்வுரைகள் வழங்கினர். மாலை நடைபெற்ற தீர்மான அரங்கில் தமிழ்நாட்டின் நலனை மய்யப்படுத்தி முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வழிவகை செய்யும் வேண்டுகோள், மதச்சார்-பின்மையைக் காப்பாற்றுக! நீதிமன்றங்-களில் சத்தியப் பிரமாணம் கீதை மீது வாங்கக் கூடாது, சாமியார்களைக் கண்காணிக்க அதிரடிப்படை உள்ளிட்ட சில தீர்மானங்களாகும்.

இரவு நடைபெற்ற விழாவில் _ பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், ‘வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் நிகழ்வில் _ அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள் கலந்துகொண்டு அவ்விருதினை சமூகநீதித் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களுக்குக் கொடுத்தார். விருது நாயகர் சந்திரஜித் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் பிறந்த மண்ணிலிருந்து இந்த விருதினைப் பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தந்தை பெரியார் உலகுக்குக் கொடுத்த செய்தியை நாலா திசைகளுக்கும் எடுத்துச் செல்வோம். நம் எதிரிகளின் சூழ்ச்சிகளை, வஞ்சகங்களை முறியடிப்போம்’’ என மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்-களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

சிறப்பு அழைப்பாளர் சீதாராம் கேசரி அவர்கள் நிறைவுரையாற்றுகையில், “நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்டிலே இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுடைய, அடக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக, சமூகநீதிக்காக இந்தியாவில் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் அவர்களைவிட யாரேனும் இருக்கிறார்களா! என்று எண்ணிப் பார்க்கிறேன். தந்தை பெரியார் அவர்களைவிட, வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோல தந்தை பெரியார் அவர்களுடைய நிறுவனத்தைக் கட்டிக் காத்தும், சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டும் இருக்கிற ஒரே மனிதராக இந்தியாவில் ஒரு முன்னணி வீரராக நான் பார்ப்பது நண்பர் வீரமணி அவர்களைத்-தான்!

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஜாதியின் கொடுமையால் நாம் பாதிக்கப் பட்டிருக்கின்-றோம். அந்த ஜாதி அமைப்பு முறையைத் தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கட்டிக்காக்க விரும்பு-கின்றார்கள். நாமெல்லாம் இந்துக்களா? நான் ஓர் இந்துவே அல்ல; என்னைப் பொறுத்த-வரைக்கும் நான் இந்து என்று சொல்லிக்-கொள்ள மாட்டேன்’’ என பல்வேறு சமூகநீதிக் கருத்துகளை எடுத்துக் கூறினார்.

மாநாட்டில் எனது சிறப்புரையில், “வடபுலத் தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களை விட்டால் சமூகநீதிக்கு நாதியே கிடையாது _ பெரியார் தத்துவம் ஒன்றுதான் நமக்கு விடியலைத் தரும் _ என்ற உணர்ச்சியைப்  பெற்றிருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி அனைத்துத் துறைகளிலும் இருக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.

எங்களுடைய மாநாட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சங்கராச்சாரியாரே இங்கு வரலாம். எனக்கு ஒரு சால்வை போர்த்த வேண்டும் என்று சங்கராச்சாரியார் விரும்பினால், போர்த்துங்கள் என்று சொல்வோம். அதனால் கடவுள் உண்டு என்று  சொல்வோமா? கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று அழுத்தமாகத் தானே சொல்லுவோம்! சமூகநீதிப் பணியில் கழகத்தின் பணி எப்போதும் நிலையாகத் தொடரும்’’ என கழகத்தின் நிலைப்பாட்டினை வலியுறுத்தி உரையாற்றினேன்.

முன்னதாக மாநாட்டு மேடையில் இரு இணையர் மணவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தெய்வசிகாமணி _ டாக்டர் காளியம்மாள் ஆகியோரின் செல்வி மலர்விழிக்கும், வெள்ளரிப்பட்டி இராமசாமி _ பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.மணிக்கும், சோலையார்பேட்டையைச் சேர்ந்த குழந்தை _குழந்தையம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திர-னுக்கும், பெங்களூரைச் சேர்ந்த மாணிக்கம் _இராணி ஆகியோரின் செல்வி இராணிக்கும், வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைப் பின்பற்றிக் கூறச் செய்து, மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1000மாவது நிகழ்ச்சி நிறைவு விழா மலரை நான் வெளியிட மேனாள் மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி பெற்றுக்-கொண்டார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடாக நடைபெற்றது. அதில், “கீதையின் மறுபக்கம்’’ ஆய்வரங்கத்தில் வழக்குரைஞர்கள் அருள்மொழி, கீதாலயன் ஆகியோர் உரையாற்றினர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான உரைவீச்சும் நடைபெற்றது. மாலை “பாலியல் நீதிக் கருத்தரங்கம்’’ அறிஞர் பெருமக்களின் உரை வீச்சுடன் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சி.நடேசனார், பெரியார் அவர்களின் தங்கை மகன் எஸ்.ஆர்.சாமி, தெற்கு மாவட்ட தி.க. துணைத் தலைவர் இல.பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் என்.இ.பாலகுரு, வெள்ளக்-கோவில் ரெங்கநாயகி அம்மாள் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து, ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பித்தோம்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ‘பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை’, ‘பார்ப்பனத் தந்திரங்கள்’ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. அதனை மகளிரணிச் செயலாளர் க.பார்வதியும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி (புதுவை) அவர்களும் பெற்றுக்கொண்டனர். முதன்முதலில் சிறுவர்களுக்கான “பெரியார் பிஞ்சு’’ இதழை இரு மாதத்துக்கு ஒரு முறையென வெளியிட்டோம். அதனை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.

அடிமைத்தளையை நீக்கும் வகையில் சாமி.அய்யா _ செல்வி தம்பதிகளின் தாலி அகற்றும் நிகழ்வும் நடைபெற்றது. அவர்களைப் பாராட்டி சிறப்பித்தோம். நிறைவாக மாநாட்டுக்காக அரும்பணியாற்றிய கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களைப் பாராட்டி கவுரவித்தோம். ஈரோடு சமூகநீதி மாநாடும், திராவிடர் கழக இளைஞரணி மாநாடும் கழகத்தின் பணியினை இன்னும் விரைவுபடுத்தும் வகையில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தோழர்களுக்கும் பொறுப்பாளர்-களுக்கும் வழங்கியது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-28.2.22

சனி, 12 பிப்ரவரி, 2022

குடிஅரசு தரும் வரலாற்று குறிப்புகள் அகில இந்திய சங்கீத மகா நாட்டில் பார்ப்பனிய விஷமம்

திங்கள், 24 ஜனவரி, 2022

சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை என்னும் பூங்காற்று!

மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை! (3)&(4)

ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இயக்கம்



சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் போராட்டம் துவக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் அத்தோடு நிற்கவில்லை. கோயிலுக்குள்ளும் நுழைய 50,222 பேரிடம் கையெழுத்து / கைநாட்டு வாங்கி, அதை திவான் சி.பி.ராமசாமி அய்யரிடம் கொடுத்தார் எம்.ஈ.நாயுடு. தொடர்ச்சியான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத திருவிதாங்கூர் அரசு பணிந்தது. அதன் விளைவுதான் ஆலயப் பிரவேச சட்டம் (1936).

1933இல் கோயில் நுழைவை எதிர்த்த அதே திவான் சி.பி.ராமசாமி அய்யர்தான், 1936இல் ஆலயப் பிரவேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அனைத்து கோயில்களிலும் அனைவரும் நுழையலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது சுயமரியாதை இயக்கம்.
- விடுதலை ஞாயிறு மலர், 21.8.20

புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு சட்டம் விளக்கம்