சுயமரியாதை உலகு

திங்கள், 24 ஜனவரி, 2022

புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு சட்டம் விளக்கம்



October 24, 2020 • Viduthalai

- கவிஞர் கலி.பூங்குன்றன்



கோணிப் புளுகன் கோயபல்சு பற்றி படித்ததுண்டு. அவ னையே தூக்கி விழுங்கி ஏப்பமிடும் அக்கிரகார ஆசாமிகள் புறப்பட்டுள்ளனர். எந்த வகையிலாவது பெரியாரை சிறுமைப் படுத்தினோமோ - நாம் பிழைத்தோமோ என்ற கையறு நிலை யில் தவிக்கின்றனர்.


இந்தப் புளுகர்களுக்கு முண்டாசு கட்டி ஏடுகளில் அமர்க்களமாக செய்தி வெளியிடுவதற்கென்றே ‘தினமலர்’ போன்ற பூணூல் ஏடுகள் தயார் நிலையில் உள்ளன.


கடந்த 20ஆம் தேதி ‘தினமலர்’ ஏட்டில் அஸ்வத் தாமனாம் - அரசியல் விமர்சகராம் - எங்கேயோ கொட்டியதைத் தூசு தட்டி நான்கு பத்தி தலைப்புக் கொடுத்து சபாஷ் போடுகிறது.


(1) 1939-இல் சென்னை மாகாண முதல்வராக - பிரீமியர் ராஜாஜி இருந்தபோது  ஆலய நுழைவு  சட்டம் கொண்டு வரப்பட்டது. திருப்பதியில் ராஜாஜி தலைமையிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்தியநாத அய்யர் தலை மையிலும் தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழைந்தனர். இச்செயலை எதிர்த்தவர் ஈ.வெ.ராமசாமி என்று சரடு விடப் பட்டுள்ளது.


உண்மையில் நடந்தவை என்ன?


சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 31.1.1933 அன்று கோயில் நுழைவு உரி மைக்கான சட்ட வரைவு ஒன்றைக் கொண்டு வந்தார். “சுப்ப ராயன் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டு விடக் கூடாது. இம்மசோதாவைக் கட்டாயம் ஆதரிக்க வேண்டும்“ என்று ‘குடிஅரசு’ இதழில் வரவேற்று எழுதினார். தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 10.11.1932).


அதன்படியே நீதிக்கட்சியினர் ஆதரவுடன் 56 வாக்கு களும், எதிர்ப்பாக 19 வாக்குகளும் பதிவாயின.


30.10.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் ஆதரித்துத் தயைலங்கமாகவும் தீட்டியிருந்தார். நீதிக்கட்சி ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வைஸ் ராய் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் செயல்பாட்டுக்கு வராமல் போயிற்று என்பதுதான் உண்மை.


ராஜாஜி சென்னை மாகாண முதல் அமைச்சராக வந்த நிலையில் மயிலை சின்னதம்பி ராஜா (எம்.சி. ராஜா) அவர் களால் கோயில் நுழைவு மசோதா ஒன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


முதல் அமைச்சர் ராஜாஜியே அதற்கு ஆதரவு தெரிவிக்க வில்லை. இதன் விளைவு மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்கு களும், எதிர்ப்பாக 130 வாக்குகளும் கிடைத்தன.


“....கனம் ஆச்சாரியாருக்கு ஒரு வாரத்துக்கு முன் யோசனை பளிச்சென உதயமாயிற்றாம். (ஒரு வாரத்துக்கு முன்வரை மசோதாவை ஆதரிப்பது என்ற முடிவில் முதல் அமைச்சர் ஆச்சாரியார் இருந்தாராம்) நவம்பர்  வரை ஒத்தி வைப்பதன் காரணத்தை எம்.சி. ராஜா புரிந்து கொண்டு பேசினார். சட்டமன்றத்தில் பீதாம்பரம் சூட்டப்பட்ட பித்தலாட்டமாகும்.


ராஜாஜி கொண்டு வந்ததாகக் கூறப்படும் சட்டம் எத்த கையது என்பதை அப்பொழுதே தந்தை பெரியார் தோலூரித் துக் காட்டி விட்டார். இதோ தந்தை பெரியாரின் கருத்து:


“மசோதாவைக் கொல்லுவது” தங்கள் கருத்தானால் இப்பொழுதே கொன்று விடுங்கள். மேலும் இரண்டு மாதம் பட்டினிப் போட்டு அதை ஏன் அவஸ்தைப்படுத்த வேண்டும்?” என்ற வினாவை முதல் அமைச்சரின் முகத்துக்கு முகம் நேராக முழங்கினார் எம்.சி. ராஜா.


“கடவுள்களைப் பற்றியும், கடவுள் தன்மையைப் பற்றியும் நான் கொண்டுள்ள கருத்துகள் என்னவாயிருந்தாலும், சுமார் 25 வருஷ காலம் நான் தலைவனாயிருந்த தேவஸ்தான கமிட் டியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கோவில்களின் காரியங்களைத் திறமையாகக் கவனித்து வந்திருக்கின்றேன்.  எனது குடும்பத் தார்கள் அக்கோவில்களுக்கென ஏராளமான பணம் கொடுத்து பல திருப்பணிகள் செய்திருக்கின்றார்கள் என்றாலும், சுமார் 20 வருஷ காலமாகவே கோவில்களில் ஜாதி வகுப்பு பேதம் இருக்கக்கூடாது என்று வேலை செய்திருப்பதோடு, 100க்கணக் கான தாசிகளை ஒழித்து, சில கோவில்களுக்குப் பார்ப்பனப் பூசாரிகளையும் ஒழித்து, ஆண்டிப் பண்டாரங்களையும், சாத்தாணி வைணவர் களையும் நியமித்து காரியம் செய்திருக் கின்றேன். அவை இன்றும் நடக்கின்றன. 


1929ஆம் வருஷத்துக்கு முன்னதாகவே எனது கமிட்டியில் இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் போக லாம் என்று தீர்மானம் செய்திருக்கின்றேன்.  அத்தீர்மானத்திற் கிணங்க ஆதிதிராவிடர்களைக் கோவிலுக்குள் எனது மனை வியார் முயற்சியால் தோழர்கள் பொன்னம்பலம், குருசாமி, ஈஸ்வரன், நடராஜன் ஆகியவர்கள் அழைத்துச் சென்றிருக் கிறார்கள். அதன் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு பாரிஸ் டர் கே.சி. சுப்ரமணியம் செட்டியாரும், வக்கீல் ஆறுமுகம் பிள்ளையும் இவர்களுக்காக வாதாடியும் தண்டிக்கப்பட்டு அய்க்கோர்ட்டில் விடுதலை கிடைத்தது.  அப்பொழுதுதான் நான் தேவஸ்தான கமிட்டி தலைமைப் பதவியை ராஜினாமா கொடுத்தேன்.


நான் தலைவனாயிருந்த காலத்தில் கோவில் நிர்வாகத்தில் வருஷம் 10,15 ஆயிரம் மீத்து  20,30 கோவில்களைப் புதுப்பித்து, 40,50 ஆயிரம் ரூபாய் பண்டு சேர்த்து அடுத்த பிரசிடெண்டிடம் ஒப்புவித்து வந்தேன்.  இன்று பாப்பராகிவிட்டது.  கேள்வி கேப்பாடு இல்லை. இது மாத்திரமா?  1928 முதல் 1931 வரை தமிழ்நாட்டில் நான் சுற்றுப்பிரயாணம் செல்லுமிடங்களி லெல்லாம் கோவில் அதிகாரிகள் போலீசாரைக் கொண்டு கோவில்களைப் பாதுகாத்து வந்ததுடன், சில இடங்களில் 144 உத்தரவு கூட சார்வு செய்திருக்கிறார்கள். ஆகவே, கோவில் பிரவேசத்தில் எனக்கோ, எனது கட்சிக்கோ கவலை இல்லை என்றும், நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்றும் யாரும் சொல்லமுடியாது.  நான் சொல்வதெல்லாம் நாணயமாகவும், நிலைநிற்கும்படியும், நல்ல எண்ணத்துடனும் செய்யுங்கள் என்றுதான் சொல்லுகிறேன். 


எனது நண்பர் கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச சம்பந்தமாகப் பேசுவதும், செய்வதும் எல்லாம் சூழ்ச்சி என்றே எனக்குப்படுகிறது.  அவர் தனக்குத்தான் அந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், தான் இஷ்டப்பட்ட கோவில்கள் தான் திறக்கப்பட வேண்டும் என்றும், தன்னுடைய மனிதர்கள் தான் தன் இஷ்டப்படிதான் காரியம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.


அவர் செய்த அவசரச் சட்டத்தில் கோவிலில் ஆதிதிரா விடர் நுழைவது கிரிமினல் குற்றம் என்று வியக்தமாய்ச் சொல்லிவிட்டார்.  ஆனால்,  தன்னால்தான் சிலர் மன்னிக்கப் படக்கூடும் என்கிறார்.  இது ஜனநாயகமா?  பொதுஜன அபிப் பிராயமா?  எனவே,  இவர்களது ஆட்சியின் சூழ்ச்சியையும், அதனால் ஏற்படும் பலனையும் இதிலிருந்தே தெரிந்துகொள் ளுங்கள்.


அவசரச் சட்ட அதிகாரம் கவர்னர்களுக்குக் கூடாது என்று சொன்ன காங்கிரசார், இன்று தாங்களாகவே அந்த அதி காரத்தை கவர்னர்களின் காலில் காணிக்கையாய் வைத்து விட்டார்கள்.  இவர்கள் நாணயமுடையவர்களா யிருந்தால் இவர்களுக்கு இருக்கும் மெஜாரிட்டியைக் கொண்டு கோவிலுக்குள் ஆதிதிராவிடர்கள் போவதால் சாமி தீட்டுப்பட்டு விடாது என்றும்,  சுத்தமான ஆச்சாரமான எந்த இந்துவும் இடவித்தியாசமில்லாமல் வழிபடலாம் என்றும் ஒரு சட்டம் செய்துவிட்டால், இவர்கள் கையை யார் வாங்கி விடுவார்கள்?  மதுரைக் கோவில் அதுவும் நம்மை விட எவ்விதத்திலும் வித்தியாசமில்லாத நாடார் பெருமக்கள்கூட போகக் கூடாது என்ற புனித கோவிலில் ஆதிதிராவிட மக்கள் சென்ற பிறகும், தஞ்சாவூர் அதாவது வருணாசிரமத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் தலைசிறந்த தஞ்சாவூர் கோவில்கள் திறக்கப்பட்ட பிறகு வேறு யாருக்குகாக இவர்கள் யோசிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி சகல காரியங்களிலும் தனிப்பட்ட வகுப்பார், தனிப்பட்ட மக்கள் சுயநலம் கவனிக்கப்படுகின்றனவே ஒழிய நாணயம், நல்லெண்ணம், பொதுநலம், நியாயம் ஆகியவற்றைக் கவனிப்பது அருமையாக இருக்கிறது.”


(20.07.1939ஆம் தேதி கோவை தென்னிந்திய நல உரிமைச் சங்கக் கிளையின் ஆதரவில் காந்தி - இர்வின் ஸ்டேடியத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார்  ஆற்றிய சொற்பொழிவு)


‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 30.07.1939


உண்மைகள் இவ்வாறு  இருக்க ராஜாஜி ஆலய நுழைவுச் சட்டம் கொண்டு வந்து தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் கோயிலுக்குள் அழைத்துச் சென்றது போலவும், பெரியார் அதைத் தடுத்தது போலவும் பேசுவதற்கு எத்தகைய முரட்டுத்தனப் பொய்யர்களாக இருக்க வேண்டும்.



மதுரை வைத்தியநாதய்யர் 8.7.1939 அன்று தாழ்த்தப்பட்ட தோழர்கள் அய்வர், ஒரு நாடார் ஆகியோரை மதுரை மீனாட் சியம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார், அழைத்துச் சென்றார் என்று டாம் டாம் அடிக்காத குறையாகப் பத்திரிக்கை வாயிலாகப் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் நடந்தது என்ன என்பதை வர்ணாஸ்ரம ஸ்வராஜ்ய சங்கத்தினர் வெளிப்படுத்திய தகவல்கள் ‘விடுதலை’யில் (13.7.1939) விரி வாகவே வெளிவந்தன.


“தேவஸ்தானம் - எக்ஸிகுயூட்டிவ் ஆபிசரின் ஒப்பந்தத் தின் பேரில், பட்டர்களும், ஸ்தானீகர்களும் இல்லாத நேரமான சுமார் காலை 8.45 மணிக்கு ஒரு ‘ஆக்ஷேபணையும் எதிர்ப்பும் இல்லை என்று காண்பிக்க வேண்டும்‘ என்ற நோக்கத்துடன் வெகு தந்திரமாகவும், திருட்டுத்தனமாகவும் பிரவேசம் செய்யப்பட்டது” என்று வருணாசிரம சங்கத்தாரே கூறி விட்ட பிறகு இதைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது?


கோயில் எக்ஸிக்கியூட்டிவ் அதிகாரியாக இருந்தவர் ஆர்.எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர் என்பதால் இந்தக் கோயில் நுழைவுக்கு உறுதுணையாக இருந்தார் என்ற தகவலும் வெளியானது. கோயில் கருவறையைப் பூட்டி விட்டு, மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தார் நீதிக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி (‘குடிஅரசு’ 16.7.1939).


மதுரை வைத்தியநாதய்யர் தான் ஆரியப் பிரவேசம் செய்யக் காரணமாக இருந்தவர் அதை ஈ.வெ.ரா. எதிர்த்தார் என்று கஜ குட்டிக் கரணம் அடித்து ‘தமாஷ்’ செய்யும் பொய்யர்களுக்கு ஒரு தகவல் தெரியுமா?


அந்தத் தகவலையும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர் களே தன் வாழ்க்கைக் குறிப்பு நூலில் பதிவு செய்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டால், ரோஷம் உள்ளவர்களாக இருந்தால் என்ன செய்து கொள்வார்களோ - இதோ ஆதாரம் பேசுகிறது.


‘‘திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோயில் நுழைவைப்பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மா னம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவர். பின்னே காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்திய நாத அய்யர் என்று கேட்டு மகிழ் வெய் தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும், பின்னணிக்குப் போற் றலும் நிகழ்தல் இயல்பு போலும்!’’


(‘திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள்’ பக்.644’)


கோயில் நுழைவுத் தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். அதனை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யர் என்ற உண்மை இவ்வாறு இருக்க, கோயில் நுழைவுக்குக் காரணமாக இருந் தார் வைத்தியநாதய்யர் - அதனை ஈ.வெ.ரா. எதிர்த்தார் என்று தலைகீழாகப் புரட்டிப் பேசுகிறார்களே - அப்படிப் பேசக் கூடியது



வாய் தானா? 


வாய் மைக்குத் திறப்பான


வாய் - நோய் வாய் ப்படலாமா?


கோயில் நுழைவுக்காகப் பாடுபட் டவர்கள் எல்லாம் பிராமணர்கள் தானாம் - இந்த வரலாறுகளை மறைத்து 60 ஆண் டுகளாக பச்சைப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்கிறார் ஒரு பச்சைப் பார்ப்பனர் - அதற்கு ஆமாம் சாமி போடுகிறார் இன்னொரு அய்யர் கோலாகல சீனி வாசன்; பொய்ப் பேசுவதுதான் கோலா கலமோ!


ராஜாஜி கொண்டு வந்த உப்பு சப் பில்லாத - பல்லில்லாத ஆலயப் பிரவே சத்தை எதிர்த்து கூச்சல் போட்டவர்கள் சனாதனப் பார்ப்பனர்களே!


வைக்கம்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் காந்தியார் வைக்கத்திற்கு வந்து, பெரியாரைச் சந்தித்துப் பேசியபோது கூட,


‘இப்பொழுது வீதியில் நுழையும் போராட்டம் - அடுத்த கட்டமாக கோயில்  நுழைவுப் போராட்டம்தான் - இதனைத் தாங்கள் இராணியிடம் சொல்லி விடலாம் என்று சொன்னவர் தந்தை பெரியார் (12.3.1925) என்பது நினைவிருக்கட்டும்.


வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளறுவது பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம்.


மதுரைக் கோயில் பிரவேசம்பற்றி முதல் அமைச்சர் ராஜாஜி அதே மதுரையில் என்ன பேசினார் என்பதை ‘சுதேசமித்திரன்’ ஏடு வெளியிட்டதுண்டே! (31.7.1939).


“இந்தவெற்றி (மதுரைக் கோயிலில் ஆதி திராவிடர் நுழைந்தது) காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல. இது எல்லாருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர் களும், சுயமரியாதைக்காரர்களும், இன்னும் இதரார்களும் சேவை  செய்திருக்கிறார்கள்” என்று முதல் அமைச்சர் ராஜாஜி பேசியதுண்டே! இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் அம்பிகள் ‘கிச்சு மூச்சு’ மூட்டக் கூடாது.


ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு என்பது எல்லாம் சுயமரியாதை இயக்க - திராவிட இயக்க அன்றாட செயல்பாடுகள். ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு குறித்து சுயமரியாதை இயக்க மாநாடுகளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1926 டிசம்பரில் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனரல் லாதார் மாநாட்டுத் தீர்மானங்களுள் சில:


1 (அ). மக்கள் பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லை என்றும், சமூக வாழ்வில் எல்லோரையம் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.


3 (ஆ) இந்துக் கோயில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பார்க்கும் பிரவேசத்திலும் பூஜையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. (‘குடிஅரசு’ 6.1.1927).


வைக்கம் போராட்டம் என்பது கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்களும், புலையர்களும், புழங்க உரிமை கோரும் போராட்டம் - அப்போராட்டத்தின் வெற்றி நாயகர் ‘வைக்கம் வீரர்’ என்று ‘நவசக்தி’ ஏட்டில் திரு.வி.க. அவர்களால் மகுடம் சூட்டப்பட்டவர் தந்தை பெரியார்.


வைக்கம் போராட்டம் நடைபெற்ற - கிட்டத்தட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே - திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோயிலைச் சுற்றி நடக்க தாழ்த்தப்பட்டோர் தடை விதிக்கப்பட்டு இருந்தனர். அதனை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி களிலும் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தினரும் பங்கு கொண்டனர் (‘குடிஅரசு’ 31.1.1926, 14.2.1926, 6.7.1930).


1921ஆம் ஆண்டில் மதுரை மீனாட் சியம்மன் கோயிலில் அக்கிரமங்களைக் கண்டித்து பார்ப்பனர் அல்லாதாரைத் திரட்டிப் போராடிய ஜே.என். இராமநாதன், டி.வி. சுப்பிரமணியம், ஜே.எஸ். கண்ணப் பர் ஆகியோர்மீது தாக்குதல் தொடுக் கப்பட்டது. மூவர் மீதும் புனையப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 300.


சுயமரியாதை இயக்க வீரர் ஜே.என். இராமநாதன் தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக் கொண்டு திருச்சி தாயுமான வர் மலைக்கோயிலுக்குப்படி ஏறிச் சென்ற போது குண்டர்களால் தாக்கப்பட்டனர். பாறைகளில் உருட்டி விடப்பட்டனர்!


1927இல் சுமார் ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு சுயமரியாதை இயக்கத் தைச் சேர்ந்த கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோயிலில் நுழைந்தனர். நுழைவு வாயிலைப் பூட்டினர் என்றாலும் பக்க வாட்டுக் கதவுகள் வாயிலாக உள்ளே நுழைந்து விட்டனர்.


12.8.1928 அன்று திருவானைக் கோயிலிலும், 25.6.1928 அன்று திருச்சி மலைக் கோயிலிலும் சுயமரியாதை இயக்கத்தார் நுழைந்தனர்.


1930களில் சிதம்பரம், காரைக்குடி கும்பகோணம் ஆகிய ஊர்களின் கோயில்களிலும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் (2.5.1932) சுயமரியாதை இயக்கத்த வரால் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது.


ஈரோட்டில் ஈசுவரன் கோயிலுக்குள் குத்தூசி குருசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், மாயவரம் சி. நடராசன், ‘குடிஅரசு’ அலுவலகத்தில் பணியாற்றிய கருப்பன், பசுபதி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட தோழர்களும் ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயிலுக்குள் நுழைந்தனர் (6.4.1929).



இவர்களை உள்ளே வைத்து கோயில்களைப் பூட்டி விட்டுச் சென்று விட்டனர். தந்தை பெரியார் மனைவி நாகம்மையார் கோயிலுக்குள்ளிருந்த தோழர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் பெரியார் வெளியூர் சுற்றுப்பயணத்தில்  இருந்தார்.


கோயில் நுழைவுப் போராட்டத்தையும் தாண்டி தந்தை பெரியாரால் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட் டமும் நடத்தப்பட்டு, நடத்தி, அது சட்டமாகவும் ஆக்கப்பட்டு மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி, மதுரை நாகமலை, புதுக்கோட்டையில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிள்ளையார் கோயிலில் தியாகராசன் ஆகிய பிறப்படுத்தப்பட்டோர் அர்ச்சகர் களாகப் பணியாற்றும் அளவுக்குத் தந்தை பெரியார் வெற்றி பெற்றுள்ளார்.


இதன் தாக்கம் இப்பொழுது தந்தை பெரியார் தீண் டாமையை எதிர்த்துப் போராடிய கேரளா வரை  கொடி கட்டிப் பறக்கிறது.


1938இல் ஆச்சாரியார் சென்னை மாகாண பிரிமியராக இருந்த போது ஓர் ஆணை பிறப்பித்தார். ஆசாரியார்கள் இனி ஆச்சாரியார்கள் என்று பெயருக்குப் பின்னால் போடக்  கூடாது என்பதுதான் இந்த ஆணை.  இவர்தான் ஜாதி ஒழிப்பு வீரராம் அஸ்வத் தாமன்களும், கோலாகல சீனிவாசன்களும் தேவையில்லாமல் எதையாவது பேசி, வேறு பார்ப்பனர் களின்  வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றும் நிலையை உருவாக்க வேண்டாம்!


தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறுபவரை ஜெகத் குரு என்றும், லோகக் குரு என்றும் தூக்கி தலையில் வைத்து ஆடும் கும்பல் தீண்டாமை ஒழிப்பு குறித்தும், கோயில் நுழைவுப் போராட்டம் குறித்தும் பேசுவது கடைந்தெடுத்த நகைச்சுவை!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:36 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கோயில் நுழைவு, சட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

வைக்கம் வீரர்

வைக்கம் வீரர்
வைக்கம் நூற்றாண்டு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (14)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ▼  ஜனவரி (11)
      • சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை ...
      • மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?...
      • ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இய...
      • புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு ச...
      • நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து ...
      • ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்
      • விருத்தாசலத்தில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சீ....
      • சென்னை உஸ்மான் சாலை பெயர் காரணம்
      • சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை- 2021
      • வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ...
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)

சிறப்புடைய இடுகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

    Viduthalai     March 30, 2023     தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்? வைக்கம் போராட்டம் தொ...

பின்பற்றுபவர்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Translate

லேபிள்கள்

  • - துரை.சந்திரசேகரன்
  • 100 நாட்கள்
  • 1944
  • அஞ்சல் தலை
  • அஞ்சா நெஞ்சன்
  • அடிக்கல்
  • அண்ணா
  • அதியமான்
  • அதிரடி க.அன்பழகன்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோத்தி தாசர்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசியல் சட்டம்
  • அருஞ்செயல்
  • அருணன்
  • அழகிரி
  • அறப்போர்
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறிவுக்கரசு
  • அனைத்து ஜாதியினர்
  • ஆங்கிலேய அதிகாரி
  • ஆங்கிலேயர்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆண்டு விழா
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆர்கே சண்முகம்
  • ஆலய நுழைவு
  • ஆலயப் பிரவேசம்
  • ஆலயப் போராட்டம்
  • ஆலயம்
  • ஆறக்கட்டளை
  • ஆனந்த விகடன்
  • இசை
  • இதழ்கள்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியர்
  • இந்து
  • இயக்கம்
  • இரங்கலுரை
  • இரஞ்சித்
  • இரட்டை மலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்!
  • இரயில்
  • இரயில்வே
  • இராமச்சந்திரன்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலங்கை
  • இலண்டன்
  • இழிவு
  • இழிவு நீக்கம்
  • இளைஞரணி
  • இறுதி முழக்கம்
  • ஈரோடு
  • ஈவேரா பெரியார்
  • ஈழம்
  • உடைப்பு
  • உண்மைகள்
  • உணவகம்
  • உணவு விடுதி
  • உத்தரவு
  • உபநிஷத்
  • உரிமை
  • உரை
  • உரை சுருக்கம்
  • உரையாடல்
  • உஸ்மான்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை தங்கம்
  • எண்ணெய்
  • எதிர்நீச்சல்கள்
  • எம்.ஆர்.ராதா
  • எரிப்பு
  • எல்லா ஜாதியாரும்
  • எழுத்தாளர்
  • எழுதிய பெருமக்கள்
  • எளிமை
  • ஏ.பி. ஜனார்த்தனம்
  • ஏடுகள்
  • ஒடியா
  • ஒப்பற்ற தலைமை
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓட்டப் படம்
  • கடலூர்
  • கடவுள் மறுப்பு
  • கண்ணதாசன்
  • கண்ணம்மா
  • கண்ணம்மாள்
  • கணக்கு
  • கம்யூனிசம்
  • கருப்பர்
  • கல்பாத்தி
  • கல்வி
  • கலப்புமணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கருணானந்தம்
  • கவிஞர் கலி. பூங்குன்றன்
  • கழகம்
  • கள்ளுக்கடை
  • கன்னட மொழி
  • கன்னடம்
  • காணொலி
  • காமராசர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கீழ்வெண்மணி
  • கீழ்ஜாதி
  • குடந்தை மாணவர்
  • குடிஅரசு
  • குடிஅரசு இதழ்
  • குடிஅரசு ஏடு
  • குடியரசு
  • குமுதம்
  • குழந்தை
  • குழந்தைகள் இல்லம்
  • குற்றப் பரம்பரை
  • குறிப்புகள்
  • கூட்டம்
  • கேரள முதலமைச்சர்
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கைது
  • கொடும்பாவி
  • கொடுமை
  • கொள்கை
  • கொள்கைகள்
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோவில்
  • கோவில் நுழைவு
  • கோவில் பிரவேசம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கீதம்
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்டம்
  • சத்தியவாணி முத்து
  • சமயம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாயம்
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சவுந்தரபாண்டியன்
  • சாதனை
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாதிவெறி
  • சாலை
  • சாலை நுழைவு
  • சிகிச்சை
  • சிங்கப்பூர்
  • சித்த மருத்துவம்
  • சிலை திறப்பு
  • சிவக்கொழுந்து
  • சிறந்த நூல்
  • சிறை
  • சீர்திருத்தத் திருமணம்
  • சுசீந்திரம்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை சங்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைஇயக்கம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுவரெழுத்து சுப்பையா
  • சுவரொட்டி
  • சூத்திரர்கள்
  • செங்கல்பட்டு
  • செருப்பு
  • சென்னை
  • சேரன்மாதேவி
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சைவம்
  • சொத்துரிமை
  • டார்பிடோ
  • டி..எம்.நாயர்
  • டிரஸ்ட் வழக்கு
  • டில்லி
  • டெக்கான் கிரானிக்கல்
  • த இந்து
  • தஞ்சை
  • தடியடி
  • தடை ஆணை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் விருது
  • தம்மம்பட்டி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் திசை
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்நாடு
  • தமிழகம்
  • தமிழர்
  • தமிழர் உரிமை
  • தமிழர் தலைவர்
  • தமிழில் பாட்டு
  • தமிழில் வழிபாடு
  • தலைமை
  • தலைவர்
  • தவமணிராசன்
  • தளபதி ராஜ்
  • தன் நிலை
  • தனித் தமிழ்நாடு
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டங்கள்
  • திடீர் பிள்ளையார்
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் நகர்
  • திராவிடக் கொள்கை
  • திராவிடம்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் தளபதி
  • திராவிடர் திருநாள்
  • திரு
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருநாவுக்கரசு
  • திருமணம்
  • திருவாங்கூர்
  • திருவிதாங்கூர்
  • தில்லி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துண்டு
  • துணிவு
  • தெரியுமா
  • தெருவில் நடக்க தடை
  • தேர்தல்
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொண்டு
  • தொல்.திருமாவளவன்
  • தோல்சீலை
  • தோள் சீலைப் போராட்டம்
  • தோள்சீலை போராட்டம்
  • நக்கீரன்
  • நங்கேலி
  • நடக்க தடை
  • நடக்கத் தடை
  • நன்னன்
  • நாகம்மை
  • நாகம்மையார்
  • நாடகம்
  • நான்
  • நிகழ்ச்சி
  • நியமனம்
  • நிலவுரிமை
  • நீட் ஒழிப்பு
  • நீதிக்கட்சி
  • நீர் தொட்டி
  • நூல்
  • நூல் ஆய்வு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெடும்பயணம்
  • நேர் கானல்
  • நேர்காணல்
  • பகுத்தறிவு
  • பகுத்தறிவுப் போராளி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பட்டங்கள்
  • பட்டம்
  • பட்டுக்கோட்டைஅழகிரி
  • படிப்பு
  • பதவி
  • பதிலடி
  • பதிவு
  • பரிசு
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பவழவிழா மாநாடு
  • பழ.அதியமான்
  • பள்ளிக்கூடம்
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனியக் கொடுமை
  • பார்ப்பனியம்
  • பார்ப்பான்
  • பாரதியார் நூல்கள்
  • பாராட்டு
  • பாலக்காடு
  • பாவலர்
  • பாவாணர்
  • பிபிசி
  • பிபிசிஆனந்தி
  • பிரச்சாரம்
  • பிராமணாள் கஃபே
  • பிள்ளையார்
  • பிள்ளையார் சிலை உடைப்பு
  • பிறந்த நாள்
  • புத்தம்
  • புதிரை வண்ணார்
  • புரட்டி இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலய புரட்டு
  • புரட்டு இமாலய பொருட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு -17
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புரட்டு இமாலாயப் புரட்டு
  • பெண்கள்
  • பெண்கள் மாநாடு
  • பெண்ணுரிமை
  • பெயர்
  • பெரியார்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் திருமணம்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பட்டம்
  • பெரியார் புகழ்
  • பெரியார் பேருரையாளர்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மறைவு
  • பெரியார் விருது
  • பெரியார்- மணியம்மையார்
  • பெரியாரில் பெரியார்
  • பெரும் பயணம்
  • பொதுக்குழு
  • பொறுப்பாளர்
  • போர்
  • போர்வாள்
  • போராட்ட பங்களிப்பு
  • போராட்டம்
  • போஜனப்பிரியா
  • மகளிர்
  • மகாதேவர்
  • மஞ்சை வசந்தன்
  • மஞ்சைவசந்தன்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மதம்
  • மதிப்பீடு
  • மதிப்புறு முனைவர் பட்டம்
  • மநு
  • மயிலாடன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறியல்
  • மறைவு
  • மன்றம்
  • மனுதர்மம்
  • மாதவன்(நாயர்)
  • மாநாடு
  • மாநில கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • மாற்றம்
  • மீனாட்சி அம்மன்
  • மு.க.ஸ்டாலின்
  • முகப்பு அட்டை அமைப்பு
  • முசுலீம்
  • முதல் சுயமரியாதைத் திருமணம்
  • முதல்வர்
  • முரசொலி
  • முரளி கபே
  • முலை வரி
  • முலைவரி
  • மூவலூர் இராமாமிருதம்
  • யுனஸ்கோ விருது
  • யூனியன் வங்கி
  • ரயில்வே ஸ்டேஜன்
  • ராமநாதபுரம்
  • ராமாயணம்
  • ராவண காவியம்
  • ராஜகோபாலாச்சாரியார்
  • ரிவோல்ட்
  • வ. உ. சி
  • வ.உ.சி
  • வரலாறு
  • வனிதாமதில்
  • வார ஏடு
  • விகடன்
  • விடுதலை
  • விடுதி
  • விருத்தாசலம்
  • விருது
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீரர்
  • வீரர்கள்
  • வெற்றி
  • வெற்றி விழா
  • வேன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைத்தியநாத அய்யர்
  • வைத்தியநாதன்
  • ஜப்பான்
  • ஜஸ்டிஸ் கட்சி
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி திமிர்
  • ஜூனியர் விகடன்
  • ஜெயவர்த்தனா

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (14)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ▼  ஜனவரி (11)
      • சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை ...
      • மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?...
      • ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இய...
      • புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு ச...
      • நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து ...
      • ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்
      • விருத்தாசலத்தில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சீ....
      • சென்னை உஸ்மான் சாலை பெயர் காரணம்
      • சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை- 2021
      • வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ...
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.