சுயமரியாதை உலகு

திங்கள், 24 ஜனவரி, 2022

நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து திராவிடர் கழகமாக மாறிய காலகட்டத்தில் இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் (ஒப்பற்ற தலைமை-5)



October 01, 2020 • Viduthalai

எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்!


‘‘ஒப்பற்ற தலைமை''  பொழிவு 5:  தமிழர் தலைவர் வரலாற்று உரை



சென்னை, அக். 1-  1944 இல்,  நீதிக்கட்சி, சுயமரியாதை  இயக்கம் இரண்டும் இணைந்த காலகட்டத்தில், திராவிடர் கழகமாக மாறிய நேரத்தில், பட்டம், பதவி கூடாது - தேர்தலில் நிற்கக்கூடாது - மக்கள் இயக்கமாக இதனை மாற்றிக் காட்டுகிறேன் என்ற திட்டங்களைப் போட்டு, கொள்கைகளை விரிவு படுத்தி, உயர்ந்த பணக்காரர்களுடைய இயக்கம் அல்லது மேல்தட்டில் இருக்கக்கூடிய வர்க்கத்தவரு டைய  இயக்கம் என்றெல்லாம் ஒரு பார்வை இருந் ததை அடியோடு மாற்றினார். அதனால் பாதிக்கப் பட்டவர்கள், இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன் படுத்தலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள் என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது சிறப்புரை வருமாறு:


பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமை கழகக் குடும்பத்தவர்களே மற்றும் இந்தக் காணொலி யில் கலந்துகொள்கின்ற சான்றோர் பெருமக்களே, பகுத்தறிவாளர்களே, தமிழன்பர்களே, பெரியார் பற்றார்களே, இயக்கப் பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘ஒப்பற்ற தலைமை' என்ற தலைமையில், கடந்த பொழிவுகளில் பல்வேறு அம்சங்களை நாம் ஆராய்ந்து கொண்டு வந்த நிலையில், தந்தை பெரியார் அவர்கள், ஓர் ஒப்பற்ற தலைமை என்றால், அந்தத் தலைமை சந்தித்த துரோகங்கள் இருக்கின்றனவே, அவை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்.


எவ்வளவு நம்பிக்கைத் துரோகங்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார்


அந்த வகையில், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பொதுவாழ்க்கையில், பல்வேறு எதிர்ப்பு களைச் சந்தித்து, எதிர்நீச்சல் அடித்தவர். அவர் சந் தித்த துரோகங்களின் கொடுமைகளைப்பற்றி ஆராய் கின்றபோது, நான் இந்த உரைக்கு ஆயத்தப்படுத்து கின்ற பல்வேறு தரவுகளையெல்லாம் படித்து, ‘குடி அரசு', மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக் கொண்டு வருகின்ற நேரத்தில், ஏற்கெனவே பலமுறை நேரிலும், இளமைக் காலத்திலும் அந்தச் சம்பவங்களை ஓரளவிற்கு நான் அறிந்தவன் என்கிற நினைப்பு இருந்தாலும்கூட, எத்தனைத் துன்பங்கள், எவ்வளவு சங்கடங்கள், இடர்ப்பாடுகள், எவ்வளவு நம்பிக்கைத் துரோகங்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார் என்பதைச் சொல்லும்பொழுது, எனக்கு அதைப் படிப்பதும், உங்களோடு பகிர்ந்துகொள்வ தும்கூட சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது.


இதற்கு முன்பு நடைபெற்ற சொற்பொழிவுகளில், எதிர்ப்புகள், அவர் அடித்த எதிர்நீச்சல்கள் எல்லாம் உற்சாகத்தோடு இருந்தன. ஆனால், இந்தத் துரோ கத்தை அய்யா அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? எப்படி சலிப்பில்லாமல் எதிர்கொண்டார்கள் - அப்படி எதிர்கொண்டது மட்டுமல்ல, எப்படி வென் றார்கள்? இதற்குப் பிறகும் எப்படி இயக்கத்தை வலி மையாக ஆக்கினார்கள்? இவைகளெல்லாம் இயக் கம் நடத்துவோருக்கு மட்டுமல்ல - ஓர் இனத்தின் விடுதலை - ஒரு மொழியின் பண்பாட்டுப் படையெ டுப்பிலிருந்து மீள் உருவாக்கம் - இவற்றுக்கெல்லாம் அந்தத் தத்துவங்கள் பயன்படக் கூடிய அனுபவப் பாடங்கள்.


இவர்கள் அத்தனை பேரையும்


‘நாம்' என்று குறிப்பிடுகிறோம்


ஏதோ, அவை தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அதிலிருந்து ‘நாம்' கற்றுக் கொள்ளவேண்டிய, பாடங்கள் அவை. ‘நாம்' என்று சொல்லும்பொழுது, இயக்கம் நடத்துவோர், ‘நாம்' என்று சொல்லும்பொழுது நிறுவனம் நடத்துவோர், ‘நாம்' என்று சொல்லும்பொழுது பரந்த விரிந்த சமு தாய நல விரும்பிகள் இவர்கள் அத்தனை பேரையும் ‘நாம்' என்று குறிப்பிடுகிறோம்.


நோய்த் தடுப்பு சக்தி ஆற்றலை


வளர்த்துக் கொள்வதைப்போல...


குறிப்பாக சொல்லவேண்டுமானால் நண்பர்களே, துரோகத்தை எதிர்கொள்வது என்பது தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதி போன்று ஆயிற்று. அவர் அதை எதிர்கொண்டது நோய்த் தடுப்பு சக்தி ஆற்றலை வளர்த்துக் கொள் வதைப்போல!  உடலில் நோய்கள் தாக்கும்பொழுது, அந்த நோய்களைப் புறக்கணிக்கக் கூடிய அளவிற்கு, அதற்கு ஆயத்தமாகி விடுகின்றது என்று கரோனா காலத்தில்கூட அது ஒன்றுதான் தடுப்புக்குச் சரியான முறை என்று அறிவுறுத்தப்படுகிறோம் அல்லவா - அதேபோலதான், தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்க்கையில், அந்தத் துரோக எதிர்ப்புச் சக்தியை, தன்னுடைய சிந்தனையிலேயே வரித்துக் கொண்டார், பலப்படுத்திக் கொண்டர்கள். இதைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் தெளிவாகப் பார்க்கவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.


நம்முடைய இயக்கத்தினுடைய வரலாற்றைப் பொறுத்தவரையில், தந்தை பெரியாருடைய பொது வாழ்க்கையும், இயக்கமும் வெவ்வேறு அல்ல. இரண் டும் பிரிக்கப்பட முடியாதவை.


காங்கிரசில் இருந்தபொழுது தந்தை பெரியார் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அங்கேயும் பார்ப்பனர்கள் துரோகம் செய்கிறார்கள்; நம்பிக்கை துரோகம்தான்.


மூன்றாம் ஆண்டு அந்த அமைப்பே


காணாமல் போயிற்று!


வகுப்புரிமைக்காகத்தான் தந்தை பெரியார் அவர் கள் பொதுவாழ்க்கைக்கே வருகிறார். அவருடைய பொதுவாழ்க்கையைப் பார்த்தீர்களேயானால்,  ஆரம் பத்தில் உள்ளூரில் இருந்து பிறகு தேச அளவிலே விரிவடைகிறார். சென்னை மாகாண சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து, இரண்டாண்டுகள் மாநாடுகள் நடத்தி, மூன்றாம் ஆண்டு அந்த அமைப்பே காணாமல் போயிற்று. காரணம் என்ன? நீதிக்கட்சிக்கு எதிராகப் பார்ப்பனர்களால் தயாரிக்கப் பட்ட, பார்ப்பனரல்லாத தலைவர்களை வைத்து இந்த வித்தைகளை எல்லாம் செய்தார்கள். அப்போதே அவருக்கு, தான் செய்ததைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு சக்தி இருந்தது.


பிறகு காங்கிரசில் சேர்ந்தால், அதனை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையையூட்டினார் இராஜகோபாலாச்சாரியார். தந்தை பெரியாரைத் தலைவராக்கினார்கள்.


அந்தக் காலகட்டத்தில் அய்யா அவர்கள், ஒவ் வொரு மாநாட்டிலும் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார், காங்கிரசில் இருக்கும்பொழுதே - 1920, 21, 22, 23 24 கடைசியாக காஞ்சிபுரத்தில் 1925 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு வரையில்.


தந்தை பெரியாருக்கு ஏமாற்றம் வருகிறது; அவர் யாரை நம்பினாரோ, அவர்களும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இந்த அமைப்பே நமக்கு சரிவராது என்று கருதித்தான், அதிலிருந்து வெளி யேறினார்.


இயக்கம் வளருகின்ற காலகட்டத்தில்...


பிறகு, அவர் தலைமை தாங்கி சுயமரியாதை இயக் கத்தை நடத்தக்கூடிய அந்த வாய்ப்பு ஏற்படுகிறது. 1926 இலிருந்து 1936 வரை - எப்பொழுதுமே நம் முடைய இயக்கத்தையே நாம் அலசிப் பார்ப்போமே யானால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயக்கம் வள ருகின்ற காலகட்டத்தில், நல்ல வளர்ச்சியில் இருக் கின்ற காலகட்டத்தில், சோதனை போல, துரோகக் களை முளைக்கும்.


பயிரும் செழிக்கும், பயிருக்குப் பக்கத்தில் துரோகக் களையும் வளரும். எனவே, வேளாண்மை செய்வதில், பயிரைக் காப்பாற்றுகின்ற நோக்கில், ஒரு பகுதியாக களையெடுப்பும் நடந்தாகவேண்டும். விவ சாயத் தோழர்களுக்கு, வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கின்றவர்களுக்கு இதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.


தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு கட்டத் திலும் அதனை சந்தித்திருக்கிறார்கள்.


1926-லிருந்து 1936 வரை - இயக்கம் வளர்ந்து - நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் அந்தக் கால கட்டத்தில், யார் யாரை நம்பினார்களோ, அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?


தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்


அதுபோலவே, 1944 இல்,  நீதிக்கட்சி, சுயமரியாதை  இயக்கம் இரண்டும் இணைந்த காலகட்டத்தில், திராவிடர் கழகமாக மாறிய நேரத்தில், பட்டம், பதவி கூடாது - தேர்தலில் நிற்கக்கூடாது - மக்கள் இயக்க மாக இதனை மாற்றிக் காட்டுகிறேன் என்ற திட்டங் களைப் போட்டு, கொள்கைகளை விரிவுபடுத்தி, உயர்ந்த பணக்காரர்களுடைய இயக்கம் அல்லது மேல்தட்டில் இருக்கக்கூடிய வர்க்கத்தவருடைய இயக்கம் என்றெல்லாம் ஒரு தோற்றம் இருந்ததை அடியோடு மாற்றினார். அதனால் பாதிக்கப்பட்ட வர்கள், இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்.


1946-க்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு ஒரு கட்டம்.


1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1962 ஆம் ஆண்டு ஒரு கட்டம்.


ஒரு வகையில், இயக்கம் அது ஆரோக்கிய சூழ் நிலையைத்தான் உருவாக்கியது.


அதனால் மேலும் மேலும் இயக்கம் கொள்கை ரீதியாகப் பலப்படுத்தப்பட்டும், பரிசுத்தப்படுத்தப் பட்டும்தான் வந்திருக்கிறது.


அந்த வகையில் சொல்கிறபொழுது, எப்படி அய்யா அவர்கள், இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்தார் என்பது வியப்பானது - ஏனென்றால், எதிரியை சமாளிப்பது என்பது கடின மல்ல; எதிரி வெளிப்படையாகத் தெரிகிறான்.


வெங்கலவன் என்ற


சலவைத் தொழிலாளத் தோழர்


அதேநேரத்தில், ‘‘தொழுத கையுள்ளம் படையொ டுங்கும்'' என்று சொல்வதுபோன்று, உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்றும் சொல்வார்கள். அதனை எப்படி தந்தை பெரியார் அவர்கள் எதிர்கொண் டார்கள்? என்று சொல்லுகிறபொழுது, அவரைப் பாராட்டி, வெங்கலவன் என்ற சலவைத் தொழிலாளத் தோழர், திருச்சியில் பெரியாருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்துகிறார்.


தந்தை பெரியாரின் விளக்கம்!


அப்போது தந்தை பெரியார் அவர்கள் விளக்கமாக சொன்னவற்றை இதற்கு ஒரு பீடிகையாக நான் இங்கே சொல்லுகிறேன்.


‘‘என்னை சுயநலமில்லாதவன் என்றும், பதவியில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் பெரியவர் களைப் போல பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடியில் பெரும் பணம் சம் பாதித்திருக்கக் கூடும் என்றும், நான் பெரிய தியாகம் செய்திருப்பதாகச் சொல்லி புகழ்ந்தார். அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.


நான் இந்தத் தொண்டு  வேலை செய்வதைத் தவிர, வேறு எந்தப் பதவிக்கும் தகுதியற்றவன் என்பது எனக்குத் தெரியும். பதவி தந்தாலும், பதவி வந்தாலும், அதனை சுமந்து கொண்டிருக்க என்னால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அன்றியும், இன்று எனக்குப் பணம் இல்லாமலோ, பதவி இல் லாமலோ நான் இல்லை. என் செலவுக்கு வேண்டிய தற்குமேல் என்னிடம் பணம் உண்டு. அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு இருக்கவேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கருதுகிற அளவு செல்வமும், நீங்கள் கருதுகிற பெரிய பதவியும் எனக்கு இருந்தால், எனக்கு இன்றுள்ள மதிப்பு இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.


- (தொடரும்)



இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:30 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், ஒப்பற்ற தலைமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

வைக்கம் வீரர்

வைக்கம் வீரர்
வைக்கம் நூற்றாண்டு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (16)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ▼  ஜனவரி (11)
      • சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை ...
      • மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?...
      • ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இய...
      • புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு ச...
      • நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து ...
      • ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்
      • விருத்தாசலத்தில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சீ....
      • சென்னை உஸ்மான் சாலை பெயர் காரணம்
      • சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை- 2021
      • வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ...
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)

சிறப்புடைய இடுகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

    Viduthalai     March 30, 2023     தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்? வைக்கம் போராட்டம் தொ...

பின்பற்றுபவர்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Translate

லேபிள்கள்

  • - துரை.சந்திரசேகரன்
  • 100 நாட்கள்
  • 1944
  • அஞ்சல் தலை
  • அஞ்சா நெஞ்சன்
  • அடிக்கல்
  • அண்ணா
  • அதியமான்
  • அதிரடி க.அன்பழகன்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோத்தி தாசர்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசியல் சட்டம்
  • அருஞ்செயல்
  • அருணன்
  • அழகிரி
  • அறப்போர்
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறிவுக்கரசு
  • அனைத்து ஜாதியினர்
  • ஆங்கிலேய அதிகாரி
  • ஆங்கிலேயர்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆண்டு விழா
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆர்கே சண்முகம்
  • ஆலய நுழைவு
  • ஆலயப் பிரவேசம்
  • ஆலயப் போராட்டம்
  • ஆலயம்
  • ஆறக்கட்டளை
  • ஆனந்த விகடன்
  • இசை
  • இதழ்கள்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியர்
  • இந்து
  • இயக்கம்
  • இரங்கலுரை
  • இரஞ்சித்
  • இரட்டை மலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்!
  • இரயில்
  • இரயில்வே
  • இராமச்சந்திரன்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலங்கை
  • இலண்டன்
  • இழிவு
  • இழிவு நீக்கம்
  • இளைஞரணி
  • இறுதி முழக்கம்
  • ஈரோடு
  • ஈவேரா பெரியார்
  • ஈழம்
  • உடைப்பு
  • உண்மைகள்
  • உணவகம்
  • உணவு விடுதி
  • உத்தரவு
  • உபநிஷத்
  • உரிமை
  • உரை
  • உரை சுருக்கம்
  • உரையாடல்
  • உஸ்மான்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை தங்கம்
  • எண்ணெய்
  • எதிர்நீச்சல்கள்
  • எம்.ஆர்.ராதா
  • எரிப்பு
  • எல்லா ஜாதியாரும்
  • எழுத்தாளர்
  • எழுதிய பெருமக்கள்
  • எளிமை
  • ஏ.பி. ஜனார்த்தனம்
  • ஏடுகள்
  • ஒடியா
  • ஒப்பற்ற தலைமை
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓட்டப் படம்
  • கடலூர்
  • கடவுள் மறுப்பு
  • கண்ணதாசன்
  • கண்ணம்மா
  • கண்ணம்மாள்
  • கணக்கு
  • கம்யூனிசம்
  • கருப்பர்
  • கல்பாத்தி
  • கல்வி
  • கலப்புமணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கருணானந்தம்
  • கவிஞர் கலி. பூங்குன்றன்
  • கழகம்
  • கள்ளுக்கடை
  • கன்னட மொழி
  • கன்னடம்
  • காணொலி
  • காமராசர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கீழ்வெண்மணி
  • கீழ்ஜாதி
  • குடந்தை மாணவர்
  • குடிஅரசு
  • குடிஅரசு இதழ்
  • குடிஅரசு ஏடு
  • குடியரசு
  • குமுதம்
  • குழந்தை
  • குழந்தைகள் இல்லம்
  • குற்றப் பரம்பரை
  • குறிப்புகள்
  • கூட்டம்
  • கேரள முதலமைச்சர்
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கைது
  • கொடும்பாவி
  • கொடுமை
  • கொள்கை
  • கொள்கைகள்
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோவில்
  • கோவில் நுழைவு
  • கோவில் பிரவேசம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கீதம்
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்டம்
  • சத்தியவாணி முத்து
  • சமயம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாயம்
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சவுந்தரபாண்டியன்
  • சாதனை
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாதிவெறி
  • சாலை
  • சாலை நுழைவு
  • சிகிச்சை
  • சிங்கப்பூர்
  • சித்த மருத்துவம்
  • சிலை திறப்பு
  • சிவக்கொழுந்து
  • சிறந்த நூல்
  • சிறை
  • சீர்திருத்தத் திருமணம்
  • சுசீந்திரம்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை சங்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைஇயக்கம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுவரெழுத்து சுப்பையா
  • சுவரொட்டி
  • சூத்திரர்கள்
  • செங்கல்பட்டு
  • செருப்பு
  • சென்னை
  • சேரன்மாதேவி
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சைவம்
  • சொத்துரிமை
  • டார்பிடோ
  • டி..எம்.நாயர்
  • டிரஸ்ட் வழக்கு
  • டில்லி
  • டெக்கான் கிரானிக்கல்
  • த இந்து
  • தஞ்சை
  • தடியடி
  • தடை ஆணை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் விருது
  • தம்மம்பட்டி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் திசை
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்நாடு
  • தமிழகம்
  • தமிழர்
  • தமிழர் உரிமை
  • தமிழர் தலைவர்
  • தமிழில் பாட்டு
  • தமிழில் வழிபாடு
  • தலைமை
  • தலைவர்
  • தவமணிராசன்
  • தளபதி ராஜ்
  • தன் நிலை
  • தனித் தமிழ்நாடு
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டங்கள்
  • திடீர் பிள்ளையார்
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் நகர்
  • திராவிடக் கொள்கை
  • திராவிடம்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் தளபதி
  • திராவிடர் திருநாள்
  • திரு
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருநாவுக்கரசு
  • திருமணம்
  • திருவாங்கூர்
  • திருவிதாங்கூர்
  • தில்லி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துண்டு
  • துணிவு
  • தெரியுமா
  • தெருவில் நடக்க தடை
  • தேர்தல்
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொண்டு
  • தொல்.திருமாவளவன்
  • தோல்சீலை
  • தோள் சீலைப் போராட்டம்
  • தோள்சீலை போராட்டம்
  • நக்கீரன்
  • நங்கேலி
  • நடக்க தடை
  • நடக்கத் தடை
  • நன்னன்
  • நாகம்மை
  • நாகம்மையார்
  • நாடகம்
  • நான்
  • நிகழ்ச்சி
  • நியமனம்
  • நிலவுரிமை
  • நீட் ஒழிப்பு
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீர் தொட்டி
  • நூல்
  • நூல் ஆய்வு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெடும்பயணம்
  • நேர் கானல்
  • நேர்காணல்
  • பகுத்தறிவு
  • பகுத்தறிவுப் போராளி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பட்டங்கள்
  • பட்டம்
  • பட்டுக்கோட்டைஅழகிரி
  • படிப்பு
  • பதவி
  • பதிலடி
  • பதிவு
  • பரிசு
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பவழவிழா மாநாடு
  • பழ.அதியமான்
  • பள்ளிக்கூடம்
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனியக் கொடுமை
  • பார்ப்பனியம்
  • பார்ப்பான்
  • பாரதியார் நூல்கள்
  • பாராட்டு
  • பாலக்காடு
  • பாவலர்
  • பாவாணர்
  • பிபிசி
  • பிபிசிஆனந்தி
  • பிரச்சாரம்
  • பிராமணாள் கஃபே
  • பிள்ளையார்
  • பிள்ளையார் சிலை உடைப்பு
  • பிறந்த நாள்
  • புத்தம்
  • புதிரை வண்ணார்
  • புரட்டி இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலய புரட்டு
  • புரட்டு இமாலய பொருட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு -17
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புரட்டு இமாலாயப் புரட்டு
  • பெண்கள்
  • பெண்கள் மாநாடு
  • பெண்ணுரிமை
  • பெயர்
  • பெரியார்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் திருமணம்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பட்டம்
  • பெரியார் புகழ்
  • பெரியார் பேருரையாளர்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மறைவு
  • பெரியார் விருது
  • பெரியார்- மணியம்மையார்
  • பெரியாரில் பெரியார்
  • பெரும் பயணம்
  • பொதுக்குழு
  • பொறுப்பாளர்
  • போர்
  • போர்வாள்
  • போராட்ட பங்களிப்பு
  • போராட்டம்
  • போஜனப்பிரியா
  • மகளிர்
  • மகாதேவர்
  • மஞ்சை வசந்தன்
  • மஞ்சைவசந்தன்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மதம்
  • மதிப்பீடு
  • மதிப்புறு முனைவர் பட்டம்
  • மநு
  • மயிலாடன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறியல்
  • மறைவு
  • மன்றம்
  • மனுதர்மம்
  • மாதவன்(நாயர்)
  • மாநாடு
  • மாநில கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • மாற்றம்
  • மீனாட்சி அம்மன்
  • மு.க.ஸ்டாலின்
  • முகப்பு அட்டை அமைப்பு
  • முசுலீம்
  • முதல் சுயமரியாதைத் திருமணம்
  • முதல்வர்
  • முரசொலி
  • முரளி கபே
  • முலை வரி
  • முலைவரி
  • மூவலூர் இராமாமிருதம்
  • யுனஸ்கோ விருது
  • யூனியன் வங்கி
  • ரயில்வே ஸ்டேஜன்
  • ராமநாதபுரம்
  • ராமாயணம்
  • ராவண காவியம்
  • ராஜகோபாலாச்சாரியார்
  • ரிவோல்ட்
  • வ. உ. சி
  • வ.உ.சி
  • வரலாறு
  • வனிதாமதில்
  • வார ஏடு
  • விகடன்
  • விடுதலை
  • விடுதி
  • விருத்தாசலம்
  • விருது
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீரர்
  • வீரர்கள்
  • வெற்றி
  • வெற்றி விழா
  • வேன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைத்தியநாத அய்யர்
  • வைத்தியநாதன்
  • ஜப்பான்
  • ஜஸ்டிஸ் கட்சி
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி திமிர்
  • ஜூனியர் விகடன்
  • ஜெயவர்த்தனா

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (16)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ▼  ஜனவரி (11)
      • சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை ...
      • மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?...
      • ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இய...
      • புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு ச...
      • நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து ...
      • ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்
      • விருத்தாசலத்தில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சீ....
      • சென்னை உஸ்மான் சாலை பெயர் காரணம்
      • சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை- 2021
      • வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ...
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.