திங்கள், 19 டிசம்பர், 2016

அனுபோக வாக்கியம் 13-11-1943, குடியரசிலிருந்து.


..
1. பார்ப்பன அதிகாரியைவிட வெள்ளைக்கார அதிகாரி ஆயிரம் பங்கு மேல், ஆனால், வெள்ளைக்கார அதிகாரி பிரம்மச்சாரியாய் போய்விட்டாலோ, அதாவது மனைவி இல்லாதவராக ஆகிவிட்டாலோ அந்த வெள்ளைக்கார அதிகாரியைவிட பார்ப்பன அதிகாரியே ஆயிரம் பங்கு மேலாகும். ஏனென்றால் வெள்ளைக் காரனைப் போல் அவ்வளவு துணிவாய் பார்ப்பானால் செய்ய முடியாது. ஒருவர் இருவர் எதிலும் நல்லவர் இருக்கலாம். ஒரு மரம் தோப்பாகுமா?
2. இப்போது பார்ப்பனரல்லாதாருக்குப் பார்ப் பனர் மேல் எவ்வளவு துவேஷம் இருக்கிறதோ அதை விட அதிகமான சில புதிய துவேஷேங்கள் பார்ப்ப னரல்லாதார் மீது பார்ப்பனருக்கு ஏற்பட்டு விட்டது.
ஆனால் பார்ப்பனர் அந்தத் துவேஷத்தைக் காரி யத்தில் காட்டுகிறார்கள். தமிழர் துவேஷம் பார்ப்பானைக் கொண்டே திவசம், கலியாணம், கருமாதி அர்ச்சனை செய்துகொண்டு ராகுகாலம் கழிந்து அக்கம் பக்கம் பார்த்துப் பார்ப்பானை வைவதோடு சரி.
3.    தானிக்கி பேரு ஏமி-  உன்னை பார்ப்பான் சூத்திரன் என்று கூப்பிடு கின்றான் என்று ரொம்ப கோபித்துக் கொள்ளுகின்றாய்.
ஆனால், நீ உன்னை இந்து மதஸ்தான் என்று சொல்லிக் கொள்ளுகிறாய். தானிக்கி பேரு ஏமி. நீ இந்துவானால் சூத்திரன் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? சற்று சொல்லு தம்பி பார்க்கலாம்.
-விடுதலை,17.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக