வியாழன், 1 டிசம்பர், 2016

சீர்திருத்தங்களின் முன்னோடி, நூற்றாண்டு நிறைவில் நீதிக்கட்சி

 

சீர்திருத்தங்களின் முன்னோடியான நீதிக்கட்சி நூற்றாண்டை நிறைவு செய்துள் ளது குறித்த சிறப்புக் கட்டுரையை ‘தி இந்து‘ ஆங்கில இதழில் (25.11.2016) எழுத்தாளர் பி.கோலப்பன் எழுதியுள்ளார்.

மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும், அரசியலிலும் உரிய இடத்தை பெற்றிடவும் பாடுபட்ட அமைப்பு நீதிக்கட்சி.

நீதிக்கட்சி நூற்றாண்டு விழா கண்டுள் ளது எனும்போது, அந்த பெயரில் அமைப்பு இல்லாத நிலையில் எப்படி நூறாண்டு நிறைவு என்று சிலர் வினவலாம்.

நீதிக்கட்சி உண்மையில் துணை தேசிய அமைப்பாக இருந்தது. பார்ப்பனர் அல்லாதாருக்கான இயக்கம் எனும் தெளிவுடன்,  தென்னிந்திய நல உரிமை சங்கமாகவும் இருந்த (சவுத் இந்தியா லிபரல் பெடரேஷன்), நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. திராவிடர்களின் வரலாற்றில் ஒருங்கிணைந்த பங்களிப்பை நீதிக்கட்சி அளித்துள்ளது.

நாட்டிலேயே சமூக சீர்திருத்த இயக் கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்தது. நீதிக்கட்சி மற்றும் அதன் தலைமையிலான அரசு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை பரந்த அளவில் மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்களுக்கு உரிய இடத்தை உருவாக்கித் தந்தது. ‘இந்து மதம் மற்றும் அறநிலையத்துறை’ என்பது நீதிக்கட்சியின் மூளையில் உதித்ததாகும்.

‘‘நீதிக்கட்சி வரலாறு’’ இரண்டு தொகுதி களை எழுதியவரான எழுத்தாளர் க.திரு நாவுக்கரசு கூறும்போது,

“நீதிக்கட்சி நூற்றாண்டு விழா குறித்து கேள்விகள் எழுகின்றன என்பது உண்மை தான். ஆனால், நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் தோன்றி, இன்று இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன என்பதை நீங்கள் கவனத்தில் கொள¢ள வேண்டும். நீதிக்கட்சி அப்படி அல்ல. அது பெயரில் மாற்றம் பெற்றது. மேலும் இன்றுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வேராகவும் உள்ளது நீதிக்கட்சிதான்.

வரலாற்றுப் பேராசிரியர்கள் குறிப்பிடு வதன்படி, நீதிக்கட்சி, 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், 1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகமானது. அதன்பிறகு திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. திராவிடர் இயக்கம் என்றோ, அதன் தலைவர்களால் பெயரிடப்பட்டோ தோற்றுவிக்கப்படாமல்,  பார்ப்பனர் அல்லா தார் இயக்கமாகவே தோன்றியது.

பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதார் என்று பிரிவினை வரலாறு உருவாக்கியது. பெரும்பான்மை மக்கள் பார்ப்பனர் அல்லாதாராக இருந்த நிலையில் அவர்களுக்கு உரியவை அளிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டனர்’’ என்றார்.

வி.கீதா மற்றும் எஸ்.வி.ராஜதுரை ஆகி யோர் எழுதியுள்ள புத்தகத்தில் (Towards a Non-Brahmin Millennium) 
பார்ப்பனர் அல்லாதார்இயக்கம்குறித்துதேசிய அளவிலானவரலாற்றாசிரியர்களால் பொது வாக கூறப்படுகின்ற கருத்துகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து குறிப்பிட் டுள்ளனர். பார்ப்பனர் அல்லாதார் இயக் கம் என்பது போட்டி, பொறாமையின் அடிப்படையில்ஏற்பட்டதல்ல.விழிப் புணர்வின் அடிப்படையில் அரசியல் தளத்தில் பிரதிநிதித்துவம் மற்றும் பல் வேறு நிலைகளிலும் மாற்றங்களை ஏற் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

நீதிக்கட்சி வலியுறுத்தியவற்றை அரசி யல் கொள்கைகளாக விரிவுபடுத்தி அதை எட்டுவதில் நீட்சியான அமைப்பாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது,

“நீதிக்கட்சி அரசில், பார்ப்பனரல்லாதவர் கள், ஆங்கிலோ இந்தியர்கள், கிறித்துவர்கள் மற்றும் முசுலீம்களுக்கு  இடஒதுக்கீட்டுக்கான பாதை அமைக்கப்பட்டு வகுப்புவாரி உரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1951ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை பாதுகாத்திட அரசமைப் புச் சட்டத்தில் முதல்முறையாக திருத் தம்செய்யப்பட்டது.இதன்மூலம்,பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் முதல் அடி எடுத்து வைக் கப்பட்டது’’ என்றார்.

நீதிக்கட்சி கொண்டிருந்த அரசியல் நோக்கங்களின்தொடர்ச்சியாகவேமுதல் முறையாக அமைந்த திமுக அரசு செயல் பட்டது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், இரண்டு மொழிக்கொள்கை அமலாக்கம், மெட்ராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.

சி.நடேசமுதலியார், டி.எம்.நாயர் மற்றும் பிட்டி தியாகராய செட்டியார் ஆகியோர் நீதிக்கட்சியின் நிறுவனர்களாக இருந்த போதிலும், திமுக நிறுவனர் சி.என்.அண்ணாதுரைஅவருடையஹோம் லேண்ட் இதழில் பயிற்சியின்மூலமாக மருத்துவரான டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் கொள்கைகளை வரையறை செய்து கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைகோ கூறும்போது,

“பிரெஞ்சு மருத்துவர் ஜார்ஜெஸ் பெஞ்சமின் கிளெமென்சியூ பின்னாளில் முதல் உலகப்போரின்போது பிரெஞ்சு நாட்டின் பிரதமர் ஆனார். அவருடைய வழியில் டி.எம்.நாயர் மருத்துவ பயிற்சி மேற்கொண்டார். நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ ஏட்டின் பெயராலேயே ‘நீதிக்கட்சி’ என்று அழைக்கப்பட்டது.

பி அண்ட் சி ஆலையில் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும் தமிழறிஞருமான திரு.வி.க.வால் நடத்தப்பட்ட  வேலை நிறுத் தப் போராட்டத்தில் பிட்டி தியாகராய செட்டியார் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது முற்றிலும் அரசியல் கார ணங்களுக்காகவே’’ என்றார்.

சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின்  (Madras Institute of Development Studies-MIDS) 
பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறும்போது,  உறுதியான சீர்திருத்த நடவடிக்கைகளில் நாட்டுக்கே முன்மாதிரியாக நீதிக்கட்சியின் சீர்திருத்தங்கள் அமைந்தன.

இந்திய நாட்டின் கலாச்சார மற்றும் அறிவார்ந்த தன்மைகளில், ஒன்றுபட்ட இந்தியாகுறித்த  புரிதலில் நீதிக்கட்சி கேள் வியை  எழுப்பியது என்ற பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி பிரிட்டிஷ் அரசைச் சார்ந்திருந்தார்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் என்கிற குற்றச்சாற்றை மறுக்கிறார்.

இந்தியாவில்அரசியல்ரீதியில் மிதவாதிகளாக இருந்த காங்கிரசைப் போன்றேநீதிக்கட்சித்தலைவர்கள்தெளி வாக இருந்தார்கள். பிரிட்டிஷ் அரசு இருந்தபோது, 1937ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரசு கட்சி பங்கேற்றதைப்போன்றே நீதிக்கட்சியும் பங்கேற்றது. அதற்காக காங்கிரசு கட்சி பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று கூறமுடியுமா? என்று பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி கேட்கிறார்.
-விடுதலை,28.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக