சுயமரியாதை உலகு

வியாழன், 2 செப்டம்பர், 2021

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டு!


August 17, 2021 • Viduthalai

திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது!

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்!

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

திருச்சி, ஆக.17 திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்காட்டு! திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது! நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குப் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்று நூறு நாள்கள் (14.8.2021) ஆனதையொட்டி -  11.8.2021 அன்று திருச்சியில் ‘கலைஞர் செய்திகள்' தொலைக் காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியாக தன்னுடைய ஆட்சி அமையாமல், எல்லா மக்களுக்கும் உரிய ஆட்சி - தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, ‘‘அனைவருக்கும் அனைத்தும் - எல்லாருக்கும் எல்லாமும்'' என்ற சமூகநீதி அடிப்படையில், இந்த இயக்கமும், திட்டங்களும் அமையும் என்று சொன்னதற்கேற்ப, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சியே தன்னுடைய ஆட்சி என்று சொன்னார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது நீதிக்கட்சியினுடைய ஆட்சிதான் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய

உரிமைகளை மீட்கின்ற ஆட்சி!

அந்த ஆட்சி மட்டுமல்ல, அந்த தத்துவங்களுடைய மாட்சி - அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுடைய உரிமைகளை மீட்கின்ற மீட்சி என்கின்ற அளவில், அவருடைய ஆட்சி அமைந்த நூறு நாள் களில், எண்ணற்ற சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்துப் போடுகையில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சொன்னபொழுது, இன்றுவரையில், அந்த மகளிர் அடைகின்ற மகிழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச் சியாக இருக்கிறது. காரணம், அன்றாடம் கூலித் தொழி லுக்குச் செல்லுகின்ற நேரத்தில், அன்றாடம் சம்பாதிக் கின்ற எங்களுடைய பணம், பெரும்பகுதி போக்கு வரத்திற்கே செலவாகிறது. அந்தப் பணம் இப்பொழுது மிச்சப்படுகின்றது என்று அவர்கள் மகிழ்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு அது ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கிறது என்று நன்றி செலுத்துகிறார்கள்.

கரோனா நிவாரண நிதி -

14 மளிகைப் பொருள்கள் வழங்கினார்

அதுபோலவே, தொடர்ச்சியாக சொல்லவேண்டு மானால், அரசு கஜானா - கருவூலம் காலியாக இருப் பதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், திராவிட முன் னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கரோனா நிதி ரூ.4000 வழங்கப்படும் என்பதை - ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2000 ரூபாய் - 2000 ரூபாய் என்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து - பணப் புழக்கம் இருந்தால்தான் அவர்களுக்கு மற்ற வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லி வழங்கியதோடு மட்டுமல்லாமல், குடும்பத்திற்குத் தேவையான 14 மளிகைப் பொருள்களை வழங்கி, பசியற்ற வாழ்க்கைக்கு வாய்ப்பேற்படுத்தினார்.

அதேநேரத்தில், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம், கலைஞரைப் போல, பேரறிஞர் அண்ணாவைப் போல, பெரியார் பாதையில் நின்று, மிகப்பெரிய அளவிற்கு, நீதிமன்றம்வரை சென்று, அதிலே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

நீதிபதி ஏ.கே.இராஜன்  தலைமையில் குழு!

அதுபோலவே, நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்வது - உடனடியாக ஒரு மாநில அரசின் முடிவில் மட்டுமில்லை. அது ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு தான் நடைபெறவேண்டும். நீட் தேர்விலிருந்து விதி விலக்கு வேண்டும் என்றால், அதற்குரிய காரண, காரி யங்களை இதற்கு முன் இருந்த மாநில அரசு தெளிவாக எடுத்து வைக்கவில்லை. அந்த குறை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு சிறந்த குழுவை - நீதிபதி ஏ.கே.இராஜன்  அவர்களுடைய தலைமையில் அமைத்து, ஒரே மாதத்தில் அக்குழுவின் அறிக்கையை வாங்கி, மேல்நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார்.

இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, நீட் தேர்விற்கு வெறும் 6 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித் திருக்கிறார்கள் என்று சொல்வதிலிருந்தே, அது எத்தகைய கொடுமையானது என்ற நிலை இருக்கின்ற பொழுது - அவர்கள் நம்புவது இந்த அரசைத்தான்.

அதுபோலவே, முழுக்க முழுக்க பண்பாட்டுத் துறையில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஒரு சிறப்பான சூழலை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாகச் செய்திருக்கிறார்கள்!

தமிழ்ப் படைப்பாளிகளுக்கு - சிறப்பான இலக்கிய வித்தகர்களுக்கு - இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத அளவிற்கு - தமிழ் இலக்கிய படைப்பாளிகளான கி.இரா. போன்றவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்து அவரு டைய இறுதி நிகழ்ச்சியை சிறப்பாக செய்தார். தமிழ்ப் பண்பாட்டுக் களத்திலே, திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாக அதை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு - இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு - இது விவசாய நாடு - விவசாயிகளுடைய கடன்கள் தள்ளுபடி செய்வ தோடு மட்டுமல்லாமல்  - அவர்களுக்கென்றே தனி வரவு - செலவுத் திட்டத்தைக் கொடுத்து, அதன்மூலமாக இன்னும் விரிவாக அவர்களுடைய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அதிகப்படுத்தவேண்டும் என்பதற் கான இத்திட்டம் - இது ஒரு சிறப்பான திட்டமாகும்.

நிதியமைச்சரின் வெளிப்படையான

வெள்ளை அறிக்கை!

கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப்பட்ட சூழல் இருந்தது என்பதை ஒளிவு மறைவில்லாமல், நம்முடைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடைய தலைமையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.30 கோடி ரூபாய் உள்ளது. இதுவரை என்றுமில்லாத அளவிற்கு, பிறக்கின்ற குழந்தையின் தலையில்கூட லட்சக்கணக்கான ரூபாய் கடன் உள்ளது.

இதுதான் இன்றைய நிலைமை, ஆனால், இதிலிருந்து மீளுவோம், தைரியமாக இருங்கள், சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்டு 5 ஆண்டுகால ஆட்சியில் இதிலிருந்து மீண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, இப்படி சொல்வதின்மூலமாக நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கமாட்டோம்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை யைத்தான் என்னால் கொடுக்க முடிந்ததே தவிர, அவரு டைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடிய வில்லையே என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வருந்தினார்களே, அந்த முள்ளை அகற்றக் கூடிய அளவிற்கு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற முறையில், ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பிற்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம் என்று ஏற்படுத் தியிருக்கிறார்கள் - அதில் அக்கறை காட்டுகிறார்கள்.

எல்லா துறைகளிலும் சிறப்பான முதலமைச்சர்

அன்னை தமிழில் அர்ச்சனை எல்லா இடங்களிலும் என்று சொல்லி, இதுவரை தமிழ் மொழிக்கு இல்லாத ஏற்றத்தை, கோவில்களில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை வெறும் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல - உரிமைப் பிரச்சினை. ஆகவே, அதிலேகூட எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய அளவிற்கு, பண்பாட்டுத் துறையாக இருந்தாலும், பக்தித் துறையாக இருந்தாலும், பாதுகாப்பாக மக்கள் வாழவேண்டும் என்கிற துறையாக இருந்தாலும், எல்லா துறைகளிலும் சிறப்பான முத்திரை பதித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டார்!

அதுமட்டுல்ல, கரோனா தொற்றை தடுக்கவேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக முதலமைச்சர் உழைத்த உழைப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறைகளையெல்லாம் எதிர்கொண்டு, எல்லா இடங்களுக்கும் சென்று, கரோனா நோயாளிகளின் மருத்துவப் பிரிவுக்கே சென்று, அவர்களுக்கு நம்பிக் கையை ஏற்படுத்தி, தன்னைப்பற்றி கவலைப்படாமல், நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டு - எடுத்துக் காட்டாக செயல்பட்டார்.

சாதனை சரித்திர வீரர் -

தளபதி ஸ்டாலின் அவர்கள்

ஆட்சி அமைத்து நூறு நாள்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்ற சாதனை சரித்திர வீரர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். திராவிடம் வெல்லும் - திராவிடம் வென்றது! எல்லோ ருடைய நம்பிக்கையையும் நியாயப்படுத்தும் - பலமாகக் கட்டமைக்கும்.

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு!

அரசு கஜானா காலியாக இருக்கும்பொழுது ஆட்சிப் பொறுப்பேற்று, துணிச்சலாக செயல்பட்டு, மக்களோடு மக்களாக இருந்து - சிறப்பாக செயல்பட்டு - அடக்க மாகவும், ஆழமாகவும் - அதிகாரம் என்பதையும், ஆட்சி சிம்மாசனம் என்பதையும் பெரிதாக நினைக் காமல், மக்களுடைய உணர்வைப்பற்றியே சிந்தித்து செயலாற்றிய - இணையற்ற தோழராக அவர்கள் தன்னை ஆக்கிக் கொண்டது - அதுதான் எடுத்துக் காட்டான முதலமைச்சர் என்பதற்கான நிலை.

திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொன்னார் - அந்தத் திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு.

இதன்மூலமாக, எல்லோரிடத்தையும் அவர் தாண்டி நிற்கிறார்கள் - எல்லோரையும்விட உயர்ந்து நிற்கி றார்கள்.

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் -

ஓர் அறிமுகம்!

கலைஞருடைய செயல்திறன் உலகறிந்த ஒன்று. ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்பதைப்போல, அதையும் தாண்டி நிற்கக்கூடிய அளவிற்கு, சிறப்பான சாதனை செய்கின்றவருடைய ஆட்சி - நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்.

இதற்குப் பின்னால்தான், ஏராளமான செயல்கள் சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. எனவே, நூறு நாள்கள் ஆட்சி தொடரட்டும் - அதேநேரத்தில், பல ஆண்டுகளாக இருக்கின்ற அநீதிகள் மாளட்டும் -

அதை செய்வதற்குரிய ஒரு போர் வீரராகவும், கடமையில் கண்ணும் கருத்துமாகவும் இருக்கின்ற அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

மக்களின் வாழ்த்துகள்! உலகின் வாழ்த்துகள்!!

திராவிடம் வென்றது -

வரலாறு பதிவு செய்கின்றது!

எல்லாப் பகுதிகளில் உள்ள எல்லா மக்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பொதுக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, அவரைப் பாராட்டுவது, எங்களுக் கெல்லாம் பெருமிதமாக  இருக்கிறது.

திராவிடம் வெல்லும் என்று சொல்லும் - அந்த சொல் இப்போது உண்மை என்கிற அளவிற்கு, திராவிடம் வென்றது - வரலாறு பதிவு செய்கின்றது!

வாழ்க முதலமைச்சர் -

வளர்க அவரது ஆட்சியின் சாதனை!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:03 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 100 நாட்கள், ஆசிரியர், திராவிடம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டுகள்


August 16, 2021 • Viduthalai

சென்னை,ஆக.16-  தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (14.08.2021) சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கற்பகாம் பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அற நிலையத்துறையின் சார்பில் திருக்கோயில்களில் புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

 இதற்கு ஆதினத் தலைவர்களும், மற்ற தலைவர்களும் முதலமைச் சருக்கு வரவேற்பு மற்றும் பாராட் டினைத் தெரிவித்தனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தவத்திரு குன்றக்குடி பொன் னம்பல அடிகளார்  கூறியதாவது:

‘இந்து சமய அற நிலையத் துறையின் சார்பாக திருக்கோயில்களில் புதிய பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்குகிற இந்த அற்புதமான விழாவினை மிகச்சிறப்பாக செயலாற்றிக் கொண் டிருக்கிற, இன்றைக்கு தமிழ்நாடு அரசில் காகிதம் இல்லாத பட்ஜெட் மட்டுமல்ல, ஏழைகளின் கண் ணீரைத் துடைக்கிற பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, முழுமையிற் காணாதார், முதுகெலும்பு முறியப் பாடுபடுவோர், வாழ்வில் சுவை காணோர், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் இவர்களெல்லாம் உயரப்பராக மாறுவதற்கு தன் னுடைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கிற, நமது பேரன்பிற்குரிய தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிடு வார்கள். ‘நம்முடைய மகாசந் நிதா னம், சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, இதைப் போல் ஆதீனங்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்குப் பாராட்டு விழா மயிலாப்பூரில் நடத்தினார்கள். அந்த விழாவில் நிறைவுரை யாற்றுகிறபோது சொன்னார்கள். நான் கடவுளை ஏற்றுக்கொள் கிறேனோ இல்லையோ... கடவுள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நான் செயல்படுகிறேனா என்பது தான் முக்கியம் என்றார்கள். அந்த வகையில் இன்றைக்கும் கடவுளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் செயல்படுகிற இன்றைய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களை நாம் நெஞ்சாரப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் சீரிய பணிகள், மிகச் சிறப்பான பணிகள், அறநிலையத்துறையின் பணிகள் இந்த நெருக்கடியான நேரத்தில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செயலாற்றுவதற்கு பாராட்டுதல் களை, வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள் கிறோம் . அனைத்து ஆதீனப் பெருமக்களும், அருளா ளர்களும் வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம். நீதியரசர் ஏ.கே. ராஜன் கமிட்டியில் நாமும், பேரூர் அடிகள் பெருந்தகையும் இணைந்து பணி யாற்றினோம். 2000இல் தொடங் கப்பட்ட நிலையில், அந்தக் கனவு இன்றைக்கு நனவாகி இருக் கிறது. அதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட் டிருக்கிறோம். 

இவ்வாறு கூறினார். 

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்

தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் மிகச்சிறப்பான ஒரு திட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார். நம்முடைய பக்தி இலக் கிய காலம் தொடங்கி அனைவரும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த சான்றுகள் நம்முடைய இலக் கியங்களில் உள்ளன. இடைக்காலத் தில் அது தடைபட்டது. மீண்டும் அது நடைமுறைக்கு வந்து இருக் கின்றது. கோவிலுக்குள் சென்று திருமேனி வழிபாடு செய்ய வேண் டும். தகுதியுடைய அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பாக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குன்றக்குடி அடிகளார், பேரூர் ஆதீனம் மற்றும் சிவாச்சரியார்கள் அனைவரையும் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் 6 இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அந்தப் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்குவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

காலத்தில் சற்று தள்ளிப் போனாலும் கூட மிகவும் மகிழக் கூடியது. இதேபோன்று இன்னும் வரக்கூடிய காலங்களில் நிறைய பயிற்சி மய்யங்கள் உருவாக வேண் டும். நிறைய பேர் திருக்கோவில்களில் இதேபோன்று பணி ஆணைகள் பெற்றுப் பணியாற்ற வேண்டும். அதற்கு இறைவன் எல்லா நலன் களும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேரூர் ஆதீனம் பேசினார்

தவத்திரு குமரகுருபர ஆதீனம்

 தவத்திரு குமர குருபர ஆதீனம் அவர்கள் வர வேற்றுக் கூறியதாவது :- இன்று திருக்கோவில் களில் ஓதுவார்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் அர்ச்சகராகலாம் என் பதன் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள்  பணி நியமன ஆணை வழங்கித் தொடங்கி வைத்திருக்கிறார். இது பக்தர்களின் நீண்ட கால எண்ண மாக இருந்தது. இது மகிழ்ச்சிக் குரியதாக இருக்கின்றது. ஏனென் றால் இந்தியாவில் நம்முடைய தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக திருக்கோயில்கள் இருக்கின்றன.

நாயன்மார்களும், ஆழ்வார் களும் தமிழில் பாடியது சிறப்புக் குரியதாக இருக் கிறது. ஆகவே, தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும் என்று பல ஆண்டு காலமாகவே அடியார் பெருமக் களும், ஆதீனமும் கேட்டு வந்தார் கள். அந்த வகை யில் இன்றைய அரசானது அதனை செயல் படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது. இதில் அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்று மேலும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அவர் களுக்கெல்லாம் நம்முடைய அன் பான மகிழ்ச்சியையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

இவ்வாறு தவத்திரு குமர குருபர ஆதீனம் அவர்கள் கூறினார்.

ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம்

இந்தியாவில் மதங்களின் வளர்ச்சியை நீங்கள் கூர்ந்து பாருங்கள்.  எல்லா ஜாதிகளிலிருந்தும் குருமார்கள் வருகிறார் கள். அப் போது குரு பீடத்திற்கு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதிதான் வர வேண்டும் என்ப தற்கு தடை வைத்து இருந்தால் ; இந்தியாவில் ஜாதி இருக்குமே தவிர இந்து மதம் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு வேறு வகையான சமூகத்திலிருந்தும் குருமார்கள் வரவேண்டும். 

நான் ஒரு புரட்சி வரலாறு சொல்கிறேன். இராமகிருஷ்ணர் தன்னுடைய ஜாதியில் இருந்தா வாரிசைக் காட்டினார்? இல்லையே. இராமகிருஷ்ணர் சத்திரிய வம் சத்தைச் சேர்ந்த விவேகானந்தரை வாரிசாக எடுத்தார். 

உலகம் முழுவதும் இந்து மதம் போய் சேர்ந்ததா இல்லையா? அதே மாதிரி எல்லா சமூகத் தினரும் வருகிற போது தான் இந்து மதம் பலமடையும்; வளமடையும் என்பது என்னுடைய தீர்க்கமான கொள்கை. இது வர வேற்கத்தக்க ஒன்று. ஏனென் றால் தாய்மொழியில் ஒருவர் உருக்கமாகவும், நெருக்க மாகவும் கடவுளை நெருங்குவது மாதிரி வேறு மொழியில் நெருங்க முடியாது. நான் உதாரணமாக சொல்வ துண்டு. தியாகராயர் தெலுங்கு பாடுகிறவர். தமிழ் நாட்டில் அது ஏன்? தெலுங்கு அவருடைய தாய்மொழி! தாய்மொழி தான் கடவுளிடம் ஒருவன் நெருக்க மாக பேச முடியும் என்பதை அவர் கண்டிருக்கிறார். தஞ்சாவூரில் இருக்கிறார், திருவை யாறில் இருக்கிறார், தமிழர்களுக்கு மத்தி யில் இருக்கிறார். ஆனால் தெலுங்கில் பாடுகி றார் என்றால் அது ஏன்?

நான் இதனை எதிர்க்க வில்லை. அதனை ஆதரிக்கிறேன். ஏனென் றால் தாய்மொழியில் பாடி னால்தான் கடவுளிடம் அன்பும், நெருக்கமும் ஏற்படும் என்று தியாக ராயர் வெளிப் படுத்தி இருக்கிறார். அதேமாதிரி தாய்மொழியில் கட வுளிடம் பேசிப் பாடுங்கள், திரு வாசகம் சொல்லுங்கள், தேவா ரத்தைச் சொல்லுங்கள் உங்க மனசு எப்படி உருகுது. கட வுளிடம் எப்படி நெருங்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கலாம். எனவே, தாய் மொழியில் வழிபாடு செய்வது தான் சரியான அணுகுமுறை.

இவ்வாறு ஆன்மிக சொற்பொ ழிவாளர் சுகிசிவம் கூறினார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப் பேற்ற 100 ஆவது நாளில், அனைத்து ஜாதியினரும், இந்துமத ஆலயங் களில் அர்ச்சகராக நியமனம் செய் யும் ஆணையை தமிழ்நாட்டு மக் களுக்கு சமத்துவப் பரிசாக தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி உள்ளார்!

மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராக பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி “போற்றி, போற்றி” என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மை பெரிதும் பரவசம் கொள்ளச் செய்து விட்டது.

அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை - அமைதிப் புரட்சியை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970 ஆம் ஆண்டு குடியரசு நாளான சனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். தமிழ்நாடு முதல மைச்சர்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித் ததை ஏற்று, பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத் திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், தி.மு.க., மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போரா டியதன் விளைவாக 16.12.1975 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கி யது. ஆனாலும் முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வர வில்லை.

தந்தை பெரியார் மறைந்தபோது, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்” என்று கண்ணீர்மல்க குறிப்பிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர்!

அந்த முள்ளை அகற்றும் அரும் பெரும் சாதனையைத்தான் இப் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

அமைதிப் புரட்சியை - சமத்துவப் புரட்சியை - இரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்கு பறைசாற்றியுள்ள தமிழ்நாடு முதல மைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் கனிந்த - இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத பல்வேறு ஜாதிகளை சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பெரியாரின் கனவு மெய்ப்பட்டு இன்று அவரது நெஞ்சில் தைத்த முள் முதல்-அமைச்சரால் களையப் பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப் பேற்ற 100-ஆவது நாளில் இந்த வரலாற்றுச் சாதனையை செய்த முதல்-அமைச்சரையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசமைப்பு சட்ட உறுப்பு 14-அய் குறிப்பிட்டு, அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உள்பட்ட கோவில் களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித் தால் அது நீதிமன்றத்தை அவமதித் ததாகிவிடும்.

எனவே, ஆகம கோவில்களிலும், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்றவர் களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்து கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், நியமனம், பாராட்டு

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-13


August 31, 2021 • Viduthalai

நீதிபதி மகாராஜன் குழு பரிந்துரைகள்

அறப்போரைத் தொடர்ந்து நாம் நீண்ட காலமாக வலியுறுத்திய நீதிபதி மகராஜன் குழு அறிக்கை தமிழ்நாடு அரசு அரசாணை (பல்வகை) எண்: 1001 வணிகவரி மற்றும் அறநிலையத் துறை நாள்: 27.08.1982 தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள்

முடிப்புரை

(1) காலத்தின் தேவையை அனுசரித்து இராமாநுசர் போன்ற சமய ஆச்சாரியர்கள் ஆகம சாத்திர அனுஷ்டானத்தில் பெரு மாறுதல்களையும் சீர்திருத்தங்களையும் செய்திருக்கிறார்கள்,

(2) எதிர்ப்பு இருந்தும் கூட, தேவையை அனுசரித்தும், சமூக நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டும், இந்திய அரசு ‘ஹிந்துலா'வில் சட்டத் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்திருக்கிறது.

(3) காலத்தின் தேவையை அனுசரித்தும், சமூக நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசும் ஆகமத்திற்கு மாறுபட்ட சில சட்டங்களைச் செய்திருக்கிறது.

(4) இப்போது மத மாற்றமும் சமூகக் கிளர்ச்சியும் ஏற்பட்டு, இவற்றின் விளைவாய் வன்முறைச் செயல்களும் நிகழ்ந்திருப்பதால், மத ஒருமைப்பாட்டினை உருவாக்கும் பொருட்டு மேலும் சீர்திருத்தம் செய்ய ஓர் அவசியம் விளைந்திருக்கிறது. செய்யப்படும் சீர்திருத்தத்தால் ஆகம விதிகளுக்குப் பாதகமில்லை; ஏனெனில் பூசையிலும் சடங்குகளிலும் எந்தத் தலையீடும் இல்லை.

(5) ஏற்கெனவே பல ஆகம முரண்பாடுகள் தாமே எழுந்து, நடைமுறையில் உள்ளன. அவற்றால் புனிதம் கெட்டதாக யாரும் கருதியதில்லை. பிராயச்சித்தம் எங்கும் செய்யப்படுவதில்லை.

(6) எதிர்காலத்தில் பூசை சிறப்பாக நடைபெற வேண்டியும், மக்களின் ஈடுபாட்டைப் பெருக்க வேண்டியும் அர்ச்சகர் நியமனம் பிறவியின் அடிப்படையில் இல்லாது ஜாதி இன வேறுபாடு இன்றி, பணித் தகுதி அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்ற கருத்து கிரமமாக ஆகமத்துக்கு முரணாகாது என்பதே இவ்வல்லுநர் குழு எடுக்கும் தெளிவான முடிபாகும்.

பரிந்துரைகள்

காலத்தின் தேவையை அனுசரித்து அரசே அவ்வப்போது சமூக நலனுக்கும் மக்களுடைய ஆர்வத்துக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சட்டப்பூர்வமான பல மாறுதல்களைச் செய்து வந்திருக்கிறது. அரிசன ஆலயப் பிரவேசம், தேவதாசி ஒழிப்பு என்பன ஆகம விதிகளுக்கு மாறாக இருந்த போதிலும் கூட, விதிகளை மாற்றிச் சட்டம் செய்ய அரசு தயங்கவில்லை. அதுபோலவே கோயில்களில் தெய்வத்தின் பெயரால் நிகழ்ந்து வந்த உயிர்ப்பலியை அரசு சட்டபூர்வமாக தடை செய்ததும், நெடுங்காலமாக நிலவி வந்த பழக்க வழக்கத்துக்கு மாறான ஒரு சிறந்த மாறுதலாகும்.

இவைகளனைத்தையும் சிந்துக்கள் வரவேற்றுள்ளனர். சிறப்பாக குடியாட்சி வந்த பிறகு மக்களுடைய நலனையும் வளர்ச்சியையும் கருதி, பால்ய விவாகத் தடை, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை முதலான முன்னேற்றக் கருத்துகள் சட்ட பூர்வமாக “ஹிந்து - லா”வில் இடம் பெற்றன. இந்தச் சட்ட மாறுதல்கள் செய்யும்பொருட்டு ஹிந்து சமூகத்தில் எந்த விதக் கலவரமும் அமைதிக்குறைவும் ஏற்படாதபோதும், சமூகத் தேவையையும் சமூக நலனையும் மட்டும் கருதி இந்த சட்டங்கள் செய்யப்பட்டன. இவை, தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, இந்திய யூனியன் அரசும் செய்தவையாகும். வல்லுநர் குழு, மேற்சொன்ன இத்தனைக் கருத்துகளையும் ஊன்றி நோக்கி, அரசுக்கு பின் வரும் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்கிறது.

(1) தமிழ்நாட்டில் இந்து சமய வாழ்விற்கே அடிப்படையாக உள்ள ஆழ்வார் நாயன்மார்களுடைய பாசுரங்களையும், வாழ்க்கையையும், அவர்களுக்கு முன்னமே தொடங்கித் தொன்மையாக நிலவி வருகின்ற பண்பாட்டையும், சமய வரலாற்றையும், சமய இலக்கியங்கள் காட்டும் மெய்ப்பொருள் தத்துவங்களையும் கூர்ந்து சிந்திக்கும் போது, இன்றைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் ஹிந்து சமயம் சிறப்பாக வளரும் பொருட்டு, ஹிந்துக்களுக்கு ஜாதிவேறுபாடு இன்றித் தீவிரமான பயிற்சி அளித்துக் கோயில்களில் பூசகர்களாக நியமிப்பது ஆகமத்திற்கு மாறுபட்டதாகும் என்று கருதுவதற்கு இடமில்லை.

(2) (அ) செயல் திட்டம் என்ற பகுதியில் சொல்லப்பட்ட திட்டத்தின்படி அர்ச்சகராகத் தேர்ந் தெடுப்பவருக்கு அய்ந்தாண்டு கால தீவிரமான கல்விப் பயிற்சியும் செயல்முறை பயிற்சியும் அறநிலையத் துறையின் பொறுப்பில் அளிக்கவேண்டும்.

(ஆ) பயிற்சி சம்பந்தமாக சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத்திட்டம் , தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலான அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்கு, அற நிலையத் துறை ஆகம சபை ஒன்றை நிறுவ வேண்டும்.

(இ) இப்போது நடந்து வருகின்ற ஆகமப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரமான நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு, அங்கு உள்ள சேர்க்கை முறை, கல்வி முறை தேர்வு முதலியன அனைத்து அம்சங்களையும் முன்கூறிய ஆகமசபை நிர்வகித்து வரவேண்டும்.

(ஈ) இப்போது பூசகராயுள்ளவர்களின் குடும்பங்களி லிருந்து வரும் மாணாக்கருக்கு ஆகமக் கல்லூரிச் சேர்க்கையில் கூடுமானவரை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

(உ) செயல் திட்டத்தில் கூறியபடி வெற்றிகர மாகத் தேர்வை முடித்து வருகின்ற அர்ச்சக மாணாக்கர்களுக்கு உடனே வேலைக்கும் தகுந்த ஊதியத்திற்கும் உறுதியளித்து, பிற எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டும்.

(ஊ) செயல் திட்டத்தில் கூறியுள்ளபடி அறநிலையத் துறை ஆகமநூல்களை உரையோடு வெளியிட்டு மாணாக்கருக்குத் தேவையான புத்தகங்களையும் அச்சிட்டுத் தரவேண்டும்.

(தொடரும்)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:38 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், போராட்டம்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-14


September 01, 2021 • Viduthalai

நீதிபதி மகாராஜன் குழு பரிந்துரைகள்

நேற்றைய தொடர்ச்சி....

(3) நெடுங்காலமாக சிவாச்சாரியரும் பட்டாச்சாரி யரும் செய்து வந்த கோயில் பணிகளை இன்று நாம் நினைவு கூராமல் இருக்க முடியாது. நாட்டில் முகம்மதியர்களால் ஏற்பட்ட கொந்தளிப்புக்காலத்தில், பூசை முறைகள் அழிந்து போகாமல் தொடர்ந்து இருக்குமாறு காப்பாற்றி வந்தது இந்தப் பூசகருடைய அருஞ்சேவை. பிள்ளைலோகாச்சாரியர் என்ற வைணவ ஆச்சாரியர், திருவரங்கத்தில் முகம்மதியர்களால் கலகம் விளைந்த போது உற்சவமூர்த்தியைத் தூக்கிக்கொண்டு ஓடி மூர்த்தியை அணைத்தபடியே உயிர் விட்டார் என்று வரலாறு சொல்கிறது. அதுபோல, நடராசப்பெருமான் கோயிலுக்குள் முகம்மதியர் தங்கித் தங்களைப் பாதுகாப்புச் செய்து கொண்டிருந்த காலத்தில், கோயில் பூசகர் நடராசமூர்த்தியைத் தூக்கிக் கொண்டு ஓடிக் காப்பாற்றி வைத்திருந்து, பிறகு மீண்டும் கொண்டுவந்து பிரதிட்டை செய்தனர் என்றும், அவர்கள் மூர்த்தியை ஒளித்து வைத்த இடம் அம்பலப்புளி என்று வழங்கிற்று என்றும் வரலாறுகள் சொல்கின்றன. இப்படி பல சமயங்களில் பல ஏழைப் பூசகர்கள் மூர்த்திகளைக் காப்பாற்றியதோடு கூட, தங்களுக்கு ஊதியம் கிடைக்காத போதும் எப்படியோ ஒரு விளக்கை ஏற்றி, மலரைத் தூவி, தாங்கள் உண்ணும் அன்னத்தை கொண்டு போய் சுவாமிக்கு நிவேதித்து, பூசை ! மரபைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். சிவபூசை அல்லது திருமால் பூசை தங்கள் குல தருமம் என்றும், அதை என்ன இடுக்கண் வந்தாலும் கைவிடாது பேணிக்காக்கவேண்டும் என்றும் அவர்கள் உறுதியோடு இருந்து கொண்டிருந்தார்கள். இந்த உறுதியினால் கோயில் வழிபாடும் சமயமும் காக்கப்பெற்றன. ஆதலால் இந்தச் சமய - பண்பாட்டு நிலைகளை அரசு கருத்தில் கொண்டு, பூசகர் சுமாரான வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதியும், தொழிலுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு உண்டு என்ற உறுதியும், சமூகத்தில் போதிய அந்தஸ்தும், குறைந்த அளவிலேனும் அரசு செய்து தரவேண்டும்

(4) தமிழில் அர்ச்சனை செய்வது ஆகமத்துக்கு உடன்பாடே ஆதலால் தமிழ் அர்ச்சனைப் பயிற் சியைக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாகச் செயல்படுத்துவதோடுகூட., அத்தலைப்பில் சொல்லப் பட்டபடி, அற நிலையத்துறை அஷ்டோத்தரம், சகஸ்ரநாமம் முதலியவற்றைத் தயாரித்து வெளியிட்டு, கோயில்களில் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

(5) உள்துறை ஊழியர்களைப் பொறுத்தவரையில், முக்கியமாக பாசகர் பரிசாரகர் என்ற நிலையில் பணிபுரிபவர்களை, அவர்களுடைய பண்பாடு பக்தி ஆசாரம் இவற்றை அனுசரித்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆகமத்தில் சொல்லியபடி இவர் களுக்கும் தீட்சை அளிப்பது அவசியம்.

திரு. எஸ்.மகாராஜன்

திரு. என்.ரெங்கராஜ பட்டர்

திரு. வி.விசுவநாத சிவாச்சாரியர்

திரு. கோ.மு.முத்துசுவாமி பிள்ளை

திரு. டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்

திரு. அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார்

திரு. மு.அருணாசலம்.

திரு. எஸ்.சுந்தரராஜ பட்டாச்சாரியர்

திரு. சி.சுவாமி நாத குருக்கள்

திரு. யு.சுப்ரமணியன்

திரு. இரா.அர்ஜுனன்

அப்பொழுது இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஒரு குறிப்பை வெளியிட்டார். (02.04.1983).

அனைத்து ஜாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கு ஆகம சபை ஏற்படுத்தவும், அதில் மாணவர் சேர்க்கை விதிகள், அர்ச்சகர் தேர்வு, அர்ச்சகருக்கான பயிற்சி, அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு - இவை பற்றி குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் கேட்டுப் பெறும்படி இந்து அறநிலையத் துறை ஆணையர் பணிக்கப்பட்டுள்ளார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 04.04.1983) மேற்கண்ட குறிப்பை இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டார்.

நீதிபதி எஸ்.மகராசன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து விளக்கி, உடனடியாக அதனைச் செயல்படுத்துமாறு வலியுறுத்தும் கடிதம் ஒன்றை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் நேரிடையாக அளித்தார் (16.05.1983), அந்தக் கடிதத்தோடு சட்ட அறிஞர்களின் கருத்துரை களும் இணைக்கப்பட்டு இருந்தன.

10.04.1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது வைக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 20இல் பத்தி 24இல்,

ஜாதி பாகுபாடு அற்ற ஆகம பயிற்சி பள்ளி ஆரம்பித்து, திருக்கோயில் அர்ச்சகராகப் பயிற்சி பெற விரும்புகிறவர்கட்கு இந்த ஆண்டில் ஜாதி பாகுபாடு இன்றி பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக கல்விப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி அளிப்பது, பயிற்சிக்கான சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலியவற்றை வகுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையருக்கு அறிவுரைகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.

ஆலயங்களில் ஜாதி, இன உட்பிரிவு வேறுபாடு இன்றி அர்ச்சகர் நியமனம் செய்வதற்குப் பயிற்சி - அரசுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டது பற்றி 08.06.1984 அன்று அரசு ஆணை பிறப்பித்தது. அது வருமாறு:

தமிழ்நாடு அரசு

செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத்

(செ.வெ.) துறை

செய்தி வெளியீடு எண் 339 நாள் 08.06.1984

ஆலயங்களில் ஜாதி, இன, உட்பிரிவு வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்வதற்கு பயிற்சி - அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைப்பு.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக் குட்பட்ட ஆலயங்களில் ஜாதி, இன, உட்பிரிவு வேறுபாடின்றி, அர்ச்சகர்களை நியமனம் செய் வதற்கு முன்னேற்பாடாக அர்ச்சகராக பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு ஆகம பயிற்சி ஆரம்பிக்கவும், அப்பயிற்சியை ஆரம்பிக்கத் தேவையான கல்விப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி அளிப்பது, பயிற்சிக்கான சேர்க்கை விதிகள், பயிற்சிக்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள், பயிற்சி கால ஊதியம், பயிற்சி நடத்த வசதியாகவுள்ள இடம் மற்றும் பயிற்சி பெற விரும்பும் மாணவருக்கு வயது வரம்புகள் - இது குறித்து நீதிபதி திரு எஸ்.மகராசன் தலைமையில் அமைத்த வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உரிய வழிமுறைகள் வகுத்து, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது.

1. இதன் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் பணிபுரிவார். 2. திரு. கு.ஆளுடையா பிள்ளை, ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 3. திரு.பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம், 4. திரு.மு.அருணாசலம், இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர், சென்னை, 5. திரு.அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், தலைவர், இந்து ஆலய பாதுகாப்புக்குழு, திருச்சிராப்பள்ளி, 6. டாக்டர் சொ.சிங்காரவேலன், ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை, 7. திரு பெ. திருஞானசம்பந்தம், இயக்குநர், Traditional Institute of Arts and Culture. 8. சென்னை திரு ஏ.விஸ்வநாத சிவாச்சாரியார், முதல்வர், வேத பாடசாலை, அல்லூர், 9. திருச்சி திரு. என்.ரெங்கராச பட்டர், திருவரங்கம், 10. திருச்சி மாவட்டம் திரு. டி.என்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், தென்னிந்திய அர்ச்சகர் சங்க செயலாளர், 11. சென்னை திரு.ச.சுந்தரராசபட்டர், சிறீநிவாசப் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில், 12. தஞ்சை மாவட்டம் திரு. நா.முருகவேள், ஆசிரியர், திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆணையர் அலுவலகம், சென்னை-34, 13. ஆணை யரின் இணை நேர்முக உதவியாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சென்னை-34 ஆகியோர் இக்குழுவின் உறுப்பினராவார்கள்.

இந்தக் குழு அர்ச்சகர்களுக்கு ஆகமப் பயிற்சி அளிப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து அரசுக்கு 02.06.1984ஆம் நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை.)

இக்குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ்நாட்டில் அய்ந்து இடங்களில் அர்ச்சகர் பயிற்சிக் கூடங்களை நிறுவிட வேண்டும் என்றும், அர்ச்சகர்களுக்குக் குறைந்த பட்சம் ஊதியம் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு அளித்தது. அர்ச்சகர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களையும் அக்குழு வகுத்துக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் 1984இல் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அறிவிப்புகள் பல கட்டங்களில் இருந்தாலும், நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:34 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், போராட்டம்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினையும் - கழகத்தின் செயல்பாடுகளும் - 2


August 18, 2021 • Viduthalai

"காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது"  தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்

"அய்ப்பசி மாத வாக்கில் 'சூத்திரன்' என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சித் துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

தோழர்களே, காலம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது! நம் நாட்டில்  நடைபெற வேண்டிய முக்கிய காரியங்கள் சிந்திக்கப் படாமல் இருக்கின்றன. நம் நாட்டு இன்றைய ஆட்சி, சிந்தனையாளர் ஆட்சியென்ற பெயரைக் கொண்டிருந்தாலும், ஆட்சி நிலைக்கவேண்டுமே என்பதற்காகச் சிந்தனையாளருக்கும், மூடநம்பிக்கைக்காரர்களுக்கும் தன்மையைக் கொள்கையாக கொண்டே  நடைபெற்று வருகிறது.

ஆட்சி சமுதாயத்துறையில் கைவைக்கப் பயப்படுகிறது. என்றாலும், அது நிலைக்க வேண்டுமே என்பதற்காக நான் அதற்கு  ஆதரவாளனாக இருக்கத்தான் பாடுபடுகிறேனே ஒழிய,  எந்தத் துறையிலும் அதற்கு அசவுகரியம் கொடுக்க நினைப்பதில்லை. என்றாலும், நாம் சமுதாயத்துறையில் ஒன்றும் செய்யாமல் பார்ப்பனியத்தைக் கண்டித்துக் கொண்டேயிருந்தால் போதுமா? காரியத்தில் ஏதாவது செய்ய வேண்டாமா? என்ற கவலை என்னை வாட்டுகிறது.

சமுதாயத் துறையில் பத்தாண்டு காலமாக நம் நாட்டில் ஒரு கிளர்ச்சியும் நடக்கவில்லை. 1954 முதல் 1967 வரை காங்கிரசை ஆதரித்து வந்தோம். அதனால் உத்தியோகத்துறையில் முன்னேற்ற மடைந்து வருகிறோம். இவற்றின் பயனாய் நாம் சமுதாய அமைப்பில் ஒரு காரியமும் செய்ய முடியாமல் இருக்கிறோம். இது மிக்க அவமானகரமான காரியம் என்றே நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் சமுதாயத் துறையில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

நம் மக்கள் தீபாவளி கொண்டாடுவதும், பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடுவதுமான, காரியத்தில் சிறிதும் மானாவ மானம் இல்லாமல்  ஈடுபடுகிறார்கள். அரசாங்கமும் இதற்கு ஒத்துழைக்கின்றது.

மக்கள் ஏராளமாகக் கோவில்களுக்கும், உற்சவங்களுக்கும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். திதி,- தெவசம்,- புரோகிதம்,- அர்ச்சனை முதலியன செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மானாவமானத்தைப் பற்றிச் சிந்தனை இல்லை. படித்த பெரும் பதவியில் உள்ள முட்டாள்களே இதில் பெரிதும் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தடுக்க நம்மால் முடியவில்லை. இவை இப்படியே நடந்து கொண்டிருந்தால், சமுதாயத் துறையில் எப்படி மாறுதல் ஏற்பட முடியும்? சமுதாயத் துறையில் மாறுதல் ஏற்படாவிட்டால் நம் இழிவு, சூத்திரத்தன்மை எப்படி மாற்றம் அடையும்?

ஆகையால் சமுதாயத்துறை மாற்றத்திற்கு ஏதாவது கிளர்ச்சித் துவக்கலாம் என்று கருதியே இதை எழுதுகின்றேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லை; மன உறுதி இருக்கிறதே தவிர முன்போன்ற உடல் சக்தி, வசதியில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர்க்கார் காரியாலயங்களிலும், சர்க்கார் உணவு விடுதிகளிலேயும் "பிராமணன் - சூத்திரன்" என்று பிரிக்கப்பட்டிருந்த பாகுபாடுகளைக் கிளர்ச்சி- அறிக்கை மூலம் ஒழித்தேன்.

தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்றிருந்ததைக்  கிளர்ச்சி மூலம் ஒழித்தேன். கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்றிருந்த தடையை ஒழித்தேன். இவற்றிற்கு எல்லாம் நானே காரணஸ்தனாகவும், முக்கியஸ்தனாகவும்  இருந்திருக்கிறேன்.

இப்போது கோவிலுக்குள் சிலை இருக்கும் இடத்திற்குப் பார்ப்பான் தவிர வேறு யாரும் போகக்கூடாது என்ற தடை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மேலும் அந்தச் சிலைக்குப் பார்ப்பான் தான் பூசை செய்யவேண்டுமென்கின்ற நிபந்தனையும் இருந்து வருகிறது. அதுமாத்திரம் அல்லாமல் பூசைக்குச் சொல்லும் வார்த்தைகள் வடமொழியா (சமஸ்கிருதமா) கத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமும் இருந்து வருகிறது. இந்த மூன்றும் ஜாதி பேதத்தையும், நம் இழிவையும், பார்ப்பான் உயர்வையும் நிலைநிறுத்தவே இருந்து வருகின்றன. அதுவும் இந்தியாவில் சில நாடுகளில் தான் இருக்கின்றன.

இவை உள்ளவரை "சூத்திரன், - பிராமணன்" என்கின்ற தன்மையும், கீழ்ஜாதி (பிறவி), மேல் ஜாதி (பிறவி), என்கின்ற தன்மையும் இருந்தே தீரும்.  அதற்காகவேதான் இவை இருத்தி வைக்கப் பட்டு இருக்கின்றன.

கோவில்கள், சிலைகள் என்பவை "இந்துக்கள்" என்பவர்களுக்குப் பொதுவான இடங்களே தவிர, எந்த ஜாதிக்கும் தனி உரிமை உடையவையல்ல; ஆதலால் இந்தத் தடைகள், நிபந்தனைகள் இருப்பது 'இந்துக்கள்' என்பவர்களில் பெரும்பாலான 100க்கு 97 பேர்களான மக்கள் சமுதாயத்திற்கு அவமானமும், இழிவுமேயாகும். சாப்பிடும் இடபேதம் ஒழிக்கப்பட்டபின், தொழுகை இடபேதம் மட்டும் எதற்காக  இருக்க அனுமதிக்கப் படவேண்டும்?

இந்தியாவில் மற்ற நாடுகள் சிலவற்றில் முடிதிருத்தும் மருத்துவர்கள், முடிதிருத்தும் தொழிலைச் செய்து கொண்டே அர்ச்சகர்களாக இருந்து பூசை செய்கிறார்கள். காசி ஜெகனாதம், பண்டரிபுரம் முதலிய பல பிரபல ஸ்தலங்கள் என்னும் இடங்களில் கோவில்களில் எல்லா ஜாதியாரும் சிலையைத் தொட்டுப் பிராத்திக்கிறார்கள்.

எனவே இங்கு மாத்திரம் பேதம் இருக்க அனுமதிப்பது பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெரும் இழிவும்- தாழ்மையும் ஆகும்.

எனவே இந்த இழிவை ஒழிக்க, பார்ப்பானர் அல்லாத எல்லா (இந்து) மக்களும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இதற்காகக் கிளர்ச்சி துவக்க வேண்டியது- சிறப்பாகத் தமிழர்களுக்கு, நமக்கு இன்றியமையாத கடமையாகும். இதை வெகுநாளாகச் சொல்லியும்,  எழுதியும் வருகிறேன்; இனி காலம் தாழ்த்த எனக்கு இஷ்டமில்லை.

எனவே, இன்று முதல் சுமார் ஒரு மாத காலத்திற்குள் இதற்கான கிளர்ச்சி துவக்குவது என்று உறுதி செய்து கொண்டிருக்கிறேன்; அவசியம் துவக்குவதென்றே முடிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

தேதியும், இடமும், முறையும் சீக்கிரமாகத் தெரிவிக்க இருக்கிறேன்.

அதற்குள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட- கலந்துகொள்ள இஷ்டமுள்ளவர்கள், முன் வருபவர்கள் தங்களுடைய பெயர்களை முழு விலாசத்துடன் எனக்கு எழுதி அனுப்ப வேண்டிக் கொள்கிறேன். பெண்களும் கணிசமாக முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனேகமாக என் உடல்நிலையைப் பொறுத்து இதுவே என் கடைசிக் கிளர்ச்சியாக இருக்கலாம். தனித்தனியாகக் கடிதம் எழுதுவது ஒருபுறமிருந்தாலும், சிலர் ஆங்காங்கு ஒரு சம்மத அறிக்கை- விண்ணப்பம் தயாரித்து, அதில் கிளர்ச்சியில் ஈடுபடச் சம்மதிப்பவர்களின் கையொப்பங்களை வாங்கி நமக்கு அனுப்பவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இதை விளையாட்டாகக் கருதாமல் உணர்ச்சியோடு கருதிச் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பி.கு:- கிளர்ச்சியில் ஈடுபடப் பெயர் கொடுப் பவர்கள் தங்களின் முழு முகவரியைத் தெளிவாக எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரகசியம் என்று குறிப்பிட்டால் அந்தப் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.

ஈ.வெ.ராமசாமி,

கிளர்ச்சிக் காரியாலயம்,

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 17.

குறிப்பு: கையொப்பம் வாங்கப்படும் பாரத்தில் - கர்ப்பக்கிரகப் பிரவேச, கிளர்ச்சியில் ஈடுபட்டு, தலைவர் கருத்துப்படி நடக்கத் தயாராய் இருக்கிறேன் என்பதாக எழுதி, கையொப்பம் வாங்கவும்.

9-10-1969, 'விடுதலை'யில்

பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்

18.10.1969 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை 'நுழைவுக் கிளர்ச்சி'ப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.

தொடரும்...

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், போராட்டம், வரலாறு

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-4



August 20, 2021 • Viduthalai

கிளர்ச்சி தேதி அறிவிப்பு : ஜனவரி 26

தி.மு.க ஆட்சியைத் தீவிரமாக ஆதரித்து வந்த நிலையில், கிளர்ச்சி குறித்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்த தந்தை பெரியார் 09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மய்தானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு உரையாற்றினார்.

இந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும், இந்தப் போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டி இருக்கிறது. இவர்கள் தண்டித்தாலும் இவர்களை ஆதரிப்பதை நான் ஒன்றும் மாற்றிக் கொள்ளப்போவது கிடையாது. இந்த ஆட்சியைப் போன்று நம் மக்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி வேறு எதுவும் கிடையாது. இந்த ஆட்சி மாறினால் அடுத்து யார் வருவார்கள் என்பதைச் சிந்தியுங்கள். இந்தச் சுப்பிரமணியத்திற்கும் பூணூல் போட்டு விடுவார்கள்; பக்தவத்சலத்திற்கும் பூணூல் போட்டுவிடுவார்கள். மற்றவர் யார் வந்தாலும் அவர்கள் பார்ப்பானுக்குத் தான் ஆளாக இருந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்களே ஒழிய, இவர்களைப் போல நம் இனத்திற்கு நன்மை செய்ய மாட்டார்கள். இந்த ஆட்சியின் பயனால் நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். இது எதிரிக்கும் தெரியாது- பார்ப்பனக் கூலிக்கும் தெரியாது; எனக்குத்தான் தெரியும். நம் மக்கள் உத்தியோகத்துறையில் எண்ணிப் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் இருக்கும்படியான வாய்ப்பு இவர்களால் தான் ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் நாம் ஜெயிக்கா விட்டால் என்ன நஷ்டம்? நம் ஜனங்களுக்குப் புத்தி வந்தால் போதுமே! வெற்றி தோல்வியைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. நமக்கிருக்கிற இழிவு நீக்கப்பட வேண்டும் என்பதே எனது முக்கிய இலட்சியமாகும். எனவே நம் மக்கள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மைதானத்தில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு: விடுதலை,16.11.1969.

குன்றக்குடி அடிகளார் முயற்சி

பெயர் பட்டியல் குவிந்து நாள்தோறும் விடுதலையில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் “அருள்நெறித் திருக்கூட்டம்” என்னும் ஆன்மீக தலைவர்கள் கலந்துரையாடல் நடைப்பெற்றது. அதில் தந்தை பெரியார் நடத்தவிருந்த கருவறைக் கிளர்ச்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திருக்கோயில் கருவறைக்குள் இருக்கும் மூர்த்திக்கு பூவும், நீரும் இட்டு வழிபடும் உரிமை இந்து சமூதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களும் வேண்டும் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு அருள்நெறிதிருக்கூட்டம் பேசியும் எழுதியும் வந்திருக்கிறது. ஆனால், அந்த கருத்துரிமையை கருத்துப் புரட்சி மூலம் மனமாற்றத்தின் மூலமே அடைய விரும்பியது. அதன் காரணமாக கிளர்ச்சியில் ஈடுபடவில்லை.

“கிளர்ச்சியில் ஈடுபடாததாலேயே நாம் பின்தங்கிவிட மாட்டோம். மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ராமசாமி இந்த உரிமையை அடைவதற்காக முயற்சியெடுக்க முன்வந்ததற்கு கொள்கையளவில் அருள்நெறிதிருக்கூட்டம் தனது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆயினும் கடவுள் நம்பிக்கை முற்றிலும் இல்லாத திராவிடர் கழகம் இந்த கிளர்ச்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதன்று. அதனால் இந்த உரிமைகளை சார்ந்துள்ள நியாயத்தன்மை வலுவற்றதாகப் போய் சாதியற்ற சமுதாய லட்சியத்திற்கே இடையூறு ஏற்படும் ஆதலால், அருள்நெறித்திருக்கூட்டம் இந்த உரிமையை அடைய கங்கணம் பூணுகிறது.

ஆதலால், திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா அவர்களை கிளர்ச்சியை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறது. அருள்நெறிதிருக்கூட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக திராவிடர் கழகம் இதனை கைவிடவேண்டுமென்றும் மனம் நிறைந்த மதிப்புணர்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறது” மேற்கண்ட இந்த தீர்மானம் நிறைவேற்றியதுடன், தவத்திருக் குன்றக்குடி அடிகளார் தனியே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைவராகிய பெருமதிப்புக்குரிய மகா சன்னிதானம் தவத்திருக் குன்றக்குடி அடிகளார் விடுத்திருந்த வேண்டுகோள் போராட்டத் தத்துவத்தை ஆதரிக்கும் அதே நிலையில் போரட்டத்தினை ஆத்திகப் பெருமக்களாகிய தங்களிடமே விட்டுவிடும்படி கேட்டிருக்கும் வேண்டுகோள் பற்றி திருச்சியில் நடந்த கூட்டம் மிகவும் ஆழ்ந்து பரிசீலித்தது.

தந்தை பெரியார் அவர்கள் அதை பற்றி மிக விளக்கமாக கருத்துரைக் கூறினார். “தவத்திரு அடிகளாரிடம் மிகுந்த அன்பு தமக்கு உண்டு என்றபோதிலும் கூட இக்கிளர்ச்சி சம்பந்தமாக அடிகளார் எப்போது எப்படி தாங்கள் முன்நின்று கிளர்ச்சியை செய்ய முன்வருவார்கள் என்பதற்கு திட்டவட்டமான பதில் அருள்நெறித் திருக்கூட்டத் தீர்மானத்தில் இல்லையே என்பது பற்றியும், நமது பிறவி இழிவை நீக்க நாம் மக்களை நல்லவண்ணம் பிரச்சாரப் படை மாநாடுகள் மூலம் தயார்படுத்தவும் தற்போதுள்ள சிக்கல் நிறைந்த அரசியல் சூழ் நிலைகளும் மிகவும் தெளிவுப்பட வேண்டுமென்பதாலும் உடனடியாக கிளர்ச்சி தேதி வைப்பதைவிட சற்று காலம் தள்ளி வைப்பது மிகவும் பொருத்தம் என்று அப்படி தள்ளுவதால் நட்டம் ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

திருச்சியில் கூடிய மத்திய கமிட்டி 16.11.1969

16-11-69 ஞாயிறு மாலை 3-30 மணியளவில் திருச்சி "பெரியார் மாளிகை"யில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது.

தந்தை பெரியார் அவர்கள் "கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின்'' அவசியம் பற்றியும், அது பற்றி முடிவெடுக்க வேண்டிய தேவை பற்றியும் விளக்கினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் உரைக்குப்பின் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்கள் இந்த கிளர்ச்சி எப்படி சட்ட சம்மதமானது, இந்த கிளர்ச்சி நடத்தவேண்டிய தேவை ஆகியவைகளை விளக்கிய பின், கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்லாத கழக முக்கியஸ்தர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். பிறகு தந்தை பெரியார் அவர்களால் பிரரேபிக்கப்பட்ட கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

· தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களு டைய கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி பற்றிய கடிதத்தை கமிட்டியில் வைத்து, அதைப்பற்றி மிக மரியாதையுடன் ஆலோசித்து அதில் எந்தவிதமான திட்டவட்டமான சமாதானமும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட வேண்டுமென்று மாத்திரம் இருக்கிறதே தவிர, வேறு எந்த விதமான முடிவும் இல்லை யென்பதால் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முடியாமலிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

·   'கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி" செய்யும் தேதியை ஜனவரி 26ஆம் தேதியாக வைத்துச் கொள்ளலாமென கமிட்டி முடிவு செய்கிறது.

·  "கர்ப்பக்கிருக'' கிளர்ச்சியை மன்னார்குடி ராஜகோபால்சாமி கோயில் என்று மாத்திரமல்லாமல் மற்ற ஊர்களில் உள்ள மூன்று, நான்கு கோயில்கள் வரை சேர்த்துக் கொள்ளலாமென இக்கமிட்டி தீர்மானிக்கின்றது,

·  மற்றும் பல கட்சித் தோழர்களும், பல ஆத்தீக நண்பர்களும் கர்ப்பக்கிருக கிளர்ச்சியில் கலந்து கொள்வதால் எதிர் வழக்காட வேண்டிய அவசியம் வந்தால் எதிர் வழக்காடலாமென முடிவு செய்கிறது.

·  ஒரு பிரசாரப் படையை அமைத்து சில முக்கிய ஊர்களுக்கு படையை அனுப்பி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யலாமென தீர்மானிக்கிறது.

· ஜனவரி 26ஆம் தேதிக்குள்ளாக ஆத்தீகர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் தாங்களாகவே இந்தக் கிளர்ச்சியை நடத்துவதாக இருந்தால் நம்மால் ஆன எல்லா உதவிகளையும் செய்வது என கமிட்டி முடிவு செய்கிறது

கோயில் கர்ப்பக்கிருக நுழைவு கிளர்ச்சி சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் கமிட்டியால் நியமிக்கப்பட்டது.

1. தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி - தலைவர்

2. கே. வீரமணி எம். ஏ. பி. எல். - செயலாளர்

3. டி.டி. வீரப்பா (திருச்சி) - உறுப்பினர்

4. அ.ஆறுமுகம் (நீடாமங்கலம்)

5. து. ம. பெரியசாமி (திருச்சி)

6. புலவர் கோ. இமயவரம்பன் - பொருளாளர்

வழக்கறிஞர் படை திரண்டது

இதுவரை தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களில் வழக்காடாத நிலையில் இந்த கிளர்ச்சிக்கு எதிர் வழக்காடுவது என்று முடிவெடுத்த நிலையில்

கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கிறோம் என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் 28.11.1969லும், குடந்தை வழக்கறிஞர்கள் 3.12.1969லும், தஞ்சை வழக்கறிஞர்கள் 11.12.1969லும், கோவை வழக்கறிஞர்கள் 9.1.1970லும் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், போராட்டம், வரலாறு

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

திரும்பிப் பார்க்கிறோம் - திகைக்கிறோம்! (அனைத்து சாதியினரும் அர்ச்சகர்)


August 15, 2021 • Viduthalai

கவிஞர் கலி. பூங்குன்றன்

2021 ஆகஸ்டு 14ஆம் நாள் - வாழ்விலோர் திருநாள்!

தமிழின  அரசர்கள் கட்டிய கோயில்களில் - தமிழினத்தவர்களின் உழைப்பால் உருவாக் கப்பட்ட கோயில்களில் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டுப்பட்டு விடும் - ஏன் சாமி செத்து விடும்!

சூத்திரன் சாமி சிலையைத் தொடுவத னால் இந்நிலைக்கு ஆளாகும் நிலையில் என்ன செய்ய வேண்டுமாம்? "108 கலசங் களைச் செய்து வைக்க வேண்டும், பிம்பங் களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண் டும். அதனைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப் பட வேண்டும் என்று வைகனாச ஆகமம் சொல்லுகிறது" என்று நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில் ஏறி  எடுத்து வைத்த கொடுமையை என்ன சொல்ல!

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய மாமன்னன் சிலையைக் கோயிலுக் குள் வைக்கக் கூடாதாம். அதனால்தான் காவல்காரனாக (Watch Man) வெளியிலே சிலையாக கையில் வாளுடன் நின்று கொண்டு இருக்கும் அவலம்!

பொது வீதிகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும், உணவு விடுதிகளிலும் பட மெடுத்துத் தாண்டவமாடிய ஜாதி  - தீண் டாமைப் பாம்பை அடித்து வீழ்த்திய ஈரோட் டுக் கைத்தடி, கொஞ்சம்  - எட்டிப் பார்த்தது.

அடடே, இந்த இடத்தில் இவன் மட்டும் தான் இருக்கிறான் - ஏன் மற்றவர்களுக்கு அங்கு இடம் இல்லையா? நுழையத் தகுதி இல்லையா? என்ன கூத்து இது? என்ன திமிர்வாதம் இது? என்ன அயோக்கியத்தனம் இது? என்ன விபரீதம் இது? என்ற சிந்தனை  சீறிப் பாய்ந்தது.

இரு இரு இதற்கொரு முடிவு கட்டுகிறேன் - ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று கைத்தடியை ஒரு தட்டுத் தட்டிக் கிளம்பினார்.

'ஓ சூத்திரர்களே! (மனுதர்மப்படி வேசி மக்களே!) இந்த அக்கிரமத்தைப் பார்த் தீர்களா? நீங்கள் கட்டிய கோயில்களில்  நீங்கள் நுழையக் கூடாதாம்! கருவறையில் அடியெடுத்து வைத்துப் பூஜை செய்ய உங்க ளுக்குத் தகுதிஇல்லையாமே! உங்களுக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை இல் லையா? குருதி கொதிக்கவில்லையா?' என்று போர்க் குரல் கொடுத்தார்!

இன்று நேற்றல்ல - 1937ஆம் ஆண்டி லேயே போர்க் குரல் கொடுத்தார் தந்தை பெரியார். (பெட்டி செய்தி காண்க). 1969 அக் டோபர் எட்டாம் தேதி வந்தது சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியாரின் போராட்ட அறிக்கை..

1970 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி என்று அறிவித்தார்.

தந்தை பெரியாரின் சீடர் கலைஞர் அல்லவா முதல் அமைச்சர். அவர் ஆட்சி யில் இருக்கும்போது அவர் ஏற்றுக் கொண்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் வீதிகளில் இறங்கிப் போராட அனுமதிப்பாரா?

உடனடியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (17.1.1970).

அய்யா அவர்களே, உங்கள் கொள் கையை, விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் தனயன் சட்டம் இயற்றுகிறேன் - போராட் டத்தைக் கை விடுக என்று வேண்டுகோள் அறிக்கை ஒன்றினை வெளியிட,  நமக்குக் காரியம் தானே முக்கியம் - வீரியமா முக்கியம்? என்ற அடிப்படையில் கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது - என்று அறிக்கை வெளியிட்டார். இனநலக் காப்பாளர் தந்தை பெரியார் (19.1.1970).

மானமிகு முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில், இரு வேறு கால கட்டங்களில் இரு தனித்தனி சட்டங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

பார்ப்பனர்களின் குருச்சேத்திரமான உச்சநீதிமன்றத்திற்கு இரு முறைகளும் படை எடுத்துச் சென்று கதவைத் தட்டினர்.

கடைசியாக வந்த தீர்ப்பின்படி (16.12.2015) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆவதற்கு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி விட்டது.

இதுவரை இருவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டினும் ஒரே நேரத்தில் 58 பேர்களுக்கு (தனியே 5ஆம் பக்கம் காண்க) தமிழ்நாட்டின் கோயில்களில் அர்ச்சகர் பணிக்கான ஆணை வழங்கப்பட்ட வரலாற்றுக்கு மகுடம் சூட்டப் பட்ட சமத்துவ நாள்தான் ஆகஸ்டு 14!

பெண் ஒருவரும் ஓதுவாராகவும் நியமிக் கப்பட்ட நேர்த்திதான் என்னே! என்னே! - (வாழ்க பெரியார்!)

இந்த நாள் இனிய நாள் - இலட்சிய வாதிகளுக்கு இளமை முறுக்கேறும் இன்பத் திருநாள். ஜாதி ஒழிப்புத் தீரர்களுக்கு  தேனினும் இனிக்கும் திருநாள்!

ஜாதி ஒழிப்புக்காக இன்னுயிர் ஈந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் தியாகத் தீப நாள்!

பல நூற்றாண்டுகளாக பிறப்பின் அடிப் படையில் பேதப்படுத்தப்பட்டுக் கிடந்த கோடானு கோடிமக்களின் வாழ்வில் சுயமரி யாதை என்னும் மதிப்பைக் கூட்டிய திமுக வின் நூறாம் நாளின் நன்கொடை நல்கிய நன்னாள்!

"தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் புதைத்து விட்டோமே" என்று கண்ணீர் மல்கிய கலைஞரின் கண்ணீரை அவர்தம் மைந்தர் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  துடைத்து - தம் வாழ்வின் பயனை அடைந்தார். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மட்டுமல்ல,  சமதர்ம சமத்துவ விரும்பிகள், மனித உரிமை மாண்பாளர்கள் மத்தியில் மங்கா புகழ் படைத்த திமுக ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை வாயார, மனமார, கையார வாழ்த்துவோம் - பாராட்டுவோம்.

நீடு வாழ்ந்து நிலை பெற்ற சாதனை சரித்திரக் காவியங்களை நாள் தோறும் படைக்கட்டும்! படைக்கட்டும்!!

தமிழர் தலைவர் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம்! பெரியார் உலகம் காண்போம்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

வெல்க திராவிடம்!!!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:43 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர், கவிஞர் கலி. பூங்குன்றன்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வைக்கம் வீரர்

வைக்கம் வீரர்
வைக்கம் நூற்றாண்டு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (3)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • யுனெஸ்கோ மன்ற விருதும், ‘இனமலர்’ கும்பலின் ரீல்களு...
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
  • ►  2025 (16)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)

சிறப்புடைய இடுகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

    Viduthalai     March 30, 2023     தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்? வைக்கம் போராட்டம் தொ...

பின்பற்றுபவர்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Translate

லேபிள்கள்

  • - துரை.சந்திரசேகரன்
  • 100 நாட்கள்
  • 1944
  • அஞ்சல் தலை
  • அஞ்சா நெஞ்சன்
  • அடிக்கல்
  • அண்ணா
  • அதியமான்
  • அதிரடி க.அன்பழகன்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோத்தி தாசர்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசியல் சட்டம்
  • அருஞ்செயல்
  • அருணன்
  • அழகிரி
  • அறப்போர்
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறிவுக்கரசு
  • அனைத்து ஜாதியினர்
  • ஆங்கிலேய அதிகாரி
  • ஆங்கிலேயர்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆண்டு விழா
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆர்கே சண்முகம்
  • ஆலய நுழைவு
  • ஆலயப் பிரவேசம்
  • ஆலயப் போராட்டம்
  • ஆலயம்
  • ஆறக்கட்டளை
  • ஆனந்த விகடன்
  • இசை
  • இதழ்கள்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியர்
  • இந்து
  • இயக்கம்
  • இரங்கலுரை
  • இரஞ்சித்
  • இரட்டை மலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்!
  • இரயில்
  • இரயில்வே
  • இராமச்சந்திரன்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலங்கை
  • இலண்டன்
  • இழிவு
  • இழிவு நீக்கம்
  • இளைஞரணி
  • இறுதி முழக்கம்
  • ஈரோடு
  • ஈவேரா பெரியார்
  • ஈழம்
  • உடைப்பு
  • உண்மைகள்
  • உணவகம்
  • உணவு விடுதி
  • உத்தரவு
  • உபநிஷத்
  • உரிமை
  • உரை
  • உரை சுருக்கம்
  • உரையாடல்
  • உஸ்மான்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை தங்கம்
  • எண்ணெய்
  • எதிர்நீச்சல்கள்
  • எம்.ஆர்.ராதா
  • எரிப்பு
  • எல்லா ஜாதியாரும்
  • எழுத்தாளர்
  • எழுதிய பெருமக்கள்
  • எளிமை
  • ஏ.பி. ஜனார்த்தனம்
  • ஏடுகள்
  • ஒடியா
  • ஒப்பற்ற தலைமை
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓட்டப் படம்
  • கடலூர்
  • கடவுள் மறுப்பு
  • கண்ணதாசன்
  • கண்ணம்மா
  • கண்ணம்மாள்
  • கணக்கு
  • கம்யூனிசம்
  • கருப்பர்
  • கல்பாத்தி
  • கல்வி
  • கலப்புமணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கருணானந்தம்
  • கவிஞர் கலி. பூங்குன்றன்
  • கழகம்
  • கள்ளுக்கடை
  • கள்ளுக்கடை மறியல்
  • கன்னட மொழி
  • கன்னடம்
  • காணொலி
  • காமராசர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கீழ்வெண்மணி
  • கீழ்ஜாதி
  • குடந்தை மாணவர்
  • குடிஅரசு
  • குடிஅரசு இதழ்
  • குடிஅரசு ஏடு
  • குடியரசு
  • குமுதம்
  • குழந்தை
  • குழந்தைகள் இல்லம்
  • குற்றப் பரம்பரை
  • குறிப்புகள்
  • கூட்டம்
  • கேரள முதலமைச்சர்
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கைது
  • கொடும்பாவி
  • கொடுமை
  • கொள்கை
  • கொள்கைகள்
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோவில்
  • கோவில் நுழைவு
  • கோவில் பிரவேசம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கீதம்
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்டம்
  • சத்தியவாணி முத்து
  • சமயம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாயம்
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சவுந்தரபாண்டியன்
  • சாதனை
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாதிவெறி
  • சாலை
  • சாலை நுழைவு
  • சிகிச்சை
  • சிங்கப்பூர்
  • சித்த மருத்துவம்
  • சிலை திறப்பு
  • சிவக்கொழுந்து
  • சிறந்த நூல்
  • சிறை
  • சீர்திருத்தத் திருமணம்
  • சுசீந்திரம்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை சங்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைஇயக்கம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுவரெழுத்து சுப்பையா
  • சுவரொட்டி
  • சூத்திரர்கள்
  • செங்கல்பட்டு
  • செருப்பு
  • சென்னை
  • சேரன்மாதேவி
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சைவம்
  • சொத்துரிமை
  • டார்பிடோ
  • டி..எம்.நாயர்
  • டிரஸ்ட் வழக்கு
  • டில்லி
  • டெக்கான் கிரானிக்கல்
  • த இந்து
  • தஞ்சை
  • தடியடி
  • தடை ஆணை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் விருது
  • தம்மம்பட்டி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் திசை
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்நாடு
  • தமிழகம்
  • தமிழர்
  • தமிழர் உரிமை
  • தமிழர் தலைவர்
  • தமிழில் பாட்டு
  • தமிழில் வழிபாடு
  • தலைமை
  • தலைவர்
  • தவமணிராசன்
  • தளபதி ராஜ்
  • தன் நிலை
  • தனித் தமிழ்நாடு
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டங்கள்
  • திடீர் பிள்ளையார்
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் நகர்
  • திராவிடக் கொள்கை
  • திராவிடம்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் தளபதி
  • திராவிடர் திருநாள்
  • திரு
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருநாவுக்கரசு
  • திருமணம்
  • திருவாங்கூர்
  • திருவிதாங்கூர்
  • தில்லி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துண்டு
  • துணிவு
  • தெரியுமா
  • தெருவில் நடக்க தடை
  • தேர்தல்
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொண்டு
  • தொல்.திருமாவளவன்
  • தோல்சீலை
  • தோள் சீலைப் போராட்டம்
  • தோள்சீலை போராட்டம்
  • நக்கீரன்
  • நங்கேலி
  • நடக்க தடை
  • நடக்கத் தடை
  • நன்னன்
  • நாகம்மை
  • நாகம்மையார்
  • நாடகம்
  • நான்
  • நிகழ்ச்சி
  • நியமனம்
  • நிலவுரிமை
  • நிறுத்தம்
  • நீட் ஒழிப்பு
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீர் தொட்டி
  • நூல்
  • நூல் ஆய்வு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெடும்பயணம்
  • நேர் கானல்
  • நேர்காணல்
  • பகுத்தறிவு
  • பகுத்தறிவுப் போராளி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பட்டங்கள்
  • பட்டம்
  • பட்டுக்கோட்டைஅழகிரி
  • படிப்பு
  • பதவி
  • பதிலடி
  • பதிவு
  • பரிசு
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பவழவிழா மாநாடு
  • பழ.அதியமான்
  • பள்ளிக்கூடம்
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனியக் கொடுமை
  • பார்ப்பனியம்
  • பார்ப்பான்
  • பாரதியார் நூல்கள்
  • பாராட்டு
  • பாலக்காடு
  • பாவலர்
  • பாவாணர்
  • பிபிசி
  • பிபிசிஆனந்தி
  • பிரச்சாரம்
  • பிராமணாள் கஃபே
  • பிள்ளையார்
  • பிள்ளையார் சிலை உடைப்பு
  • பிறந்த நாள்
  • புத்தம்
  • புதிரை வண்ணார்
  • புரட்டி இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலய புரட்டு
  • புரட்டு இமாலய பொருட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு -17
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புரட்டு இமாலாயப் புரட்டு
  • பெண்கள்
  • பெண்கள் மாநாடு
  • பெண்ணுரிமை
  • பெயர்
  • பெரியார்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் திருமணம்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பட்டம்
  • பெரியார் புகழ்
  • பெரியார் பேருரையாளர்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மறைவு
  • பெரியார் விருது
  • பெரியார்- மணியம்மையார்
  • பெரியாரில் பெரியார்
  • பெரும் பயணம்
  • பொதுக்குழு
  • பொறுப்பாளர்
  • போர்
  • போர்வாள்
  • போராட்ட பங்களிப்பு
  • போராட்டம்
  • போஜனப்பிரியா
  • மகளிர்
  • மகாதேவர்
  • மஞ்சை வசந்தன்
  • மஞ்சைவசந்தன்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மதம்
  • மதிப்பீடு
  • மதிப்புறு முனைவர் பட்டம்
  • மநு
  • மயிலாடன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறியல்
  • மறைவு
  • மன்றம்
  • மனுதர்மம்
  • மாதவன்(நாயர்)
  • மாநாடு
  • மாநில கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • மாற்றம்
  • மீனாட்சி அம்மன்
  • மு.க.ஸ்டாலின்
  • முகப்பு அட்டை அமைப்பு
  • முசுலீம்
  • முதல் சுயமரியாதைத் திருமணம்
  • முதல்வர்
  • முரசொலி
  • முரளி கபே
  • முலை வரி
  • முலைவரி
  • மூவலூர் இராமாமிருதம்
  • யுனஸ்கோ விருது
  • யுனெஸ்கோ
  • யூனியன் வங்கி
  • ரயில்வே ஸ்டேஜன்
  • ராமநாதபுரம்
  • ராமாயணம்
  • ராவண காவியம்
  • ராஜகோபாலாச்சாரியார்
  • ரிவோல்ட்
  • வ. உ. சி
  • வ.உ.சி
  • வரலாறு
  • வனிதாமதில்
  • வார ஏடு
  • விகடன்
  • விடுதலை
  • விடுதி
  • விருத்தாசலம்
  • விருது
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீரர்
  • வீரர்கள்
  • வெற்றி
  • வெற்றி விழா
  • வேன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைத்தியநாத அய்யர்
  • வைத்தியநாதன்
  • ஜப்பான்
  • ஜஸ்டிஸ் கட்சி
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி திமிர்
  • ஜூனியர் விகடன்
  • ஜெயவர்த்தனா

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (3)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • யுனெஸ்கோ மன்ற விருதும், ‘இனமலர்’ கும்பலின் ரீல்களு...
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
  • ►  2025 (16)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.