வெள்ளி, 2 மார்ச், 2018

எத்தர்களை முறியடிக்க எதிர்வினை கட்டாயம்! - (2)

தாழ்த்தப்பட்டோர் இழிநிலையை மாற்றியவர்கள் யார்?




* சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள். உணவு விடுதிகளில் பிராமணாள் மட்டும் என்று எழுதப்பட்டிருக்கும். சூத்திரரும் பஞ்சமரும் உள்ளே நுழைய முடியாது. தங்கும் விடுதிகளில் பிராமண மாணவர்களுக்கு மட்டுமே 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுமதி கிடைத்து வந்தது. பிராமணரல்லாத மாணவர்கள் அந்த விடுதிகளில் தங்கிப் படிக்க அனுமதி கிடையாது. உணவகத்திற்குச் சென்றாலும் தனி இடம்தான். பரிமாறுகிற முறையிலும் வேறுபாடுகள் உண்டு. சில விடுதிகளின் உணவகங்களில் கூட பிராமணரல்லாத மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

* டாக்டர் சி. நடேசனார் திருவல்லிக்கேணி அக்பர்சாகிப் தெருவில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க விடுதி (ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ கிssஷீநீவீணீtவீஷீஸீ பிஷீstமீறீ) உணவு மற்றும் தங்கும் விடுதி ஒன்றை அமைத்தார். இதில் ஏழை மாணவர்களுக்கு உணவும் இடமும் இலவசம். பணக்கார மாணவர்களுக்கு இவையிரண்டும் குறைந்த கட்டணம். உயர் படிப்பிற்காக சென்னை வந்த பிராமணரல்லாத மாணவர்கள் பலர் இங்கே தங்கிப் படித்தனர். இந்த நல்ல வாய்ப்பு கிடைத்ததால், எதிர்காலத்தில் முக்கியப் பதவிகளுக்கு வந்த மாணவர்களும் உண்டு.

இவை மட்டுமா? தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக இன்னும் என்னென்ன கொடுமைகள் தெரியுமா?

* 1938ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள்.

* 1935ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்தில் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது _- அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். பார்ப்பான் மலத்தைக்கூட தாழ்த்தப்பட்டவன் தொடக் கூடாது என்ற கொடுமை அப்போது நிலவியது.

*   ராஜகோபாலாச்சாரியார் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது தண்ணீர்க் குழாய்களைத் திறந்து விடும் வேலைக்கு ஒரு ஆதிதிராவிடர் நியமிக்கப்பட்டதால் சேலத்தில் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பையும், கூக்குரலையும் கிளப்பினார்கள்.

* 1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேருந்துகளில் ‘பஞ்சமருக்கு இடமில்லை’ என்று எழுதியதோடு டிக்கட்களிலும் அவ்வாறு அச்சிட்டார்கள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த கீ.றி.கி. சவுந்தர பாண்டியன்தான் அதை ஒழித்தார்.

*  நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று 1829ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.

* 1940ஆம் ஆண்டுகளில் - சென்னை வில்லிவாக்கத்தில் _- தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை -_ அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள்.

*   தாழ்த்தப்பட்ட சகோதரர்களை “பறையன்’’ என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து “ஆதி திராவிடர்’’ என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர் சி. நடேசனார்.

  * 1932ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் “புரதவண்ணான்’’ என்ற ஜாதியினரை கண்ணால் பார்த்தாலே தீட்டு என்று பகல் பொழுதில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேக் கூடாது என்று ஜாதிக் கட்டுப்பாடு இருந்தது.

* 19ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகை அணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, இரவிக்கை அணியவோ, இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச் செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள்.

*  சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் பி.ராமசாமி (ரெட்டி)யாரின் மகனுக்கே சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர் பானையில் தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

*  சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில்கூட பார்ப்பன மனநோயாளிகளுக்குத் தனிப்பிரிவு இருந்து வந்தது. மற்ற ஜாதிக்காரர்கள் செல்ல முடியாது.

*  டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்த காலத்தில், பட்டுக்கோட்டை தாலுகா போர்டுக்கு, பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரை நியமனம் செய்த காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட தோழரும் சமமாக உட்காருவார் என்ற காரணத்திற்காக, தாலுகா போர்டு தலைவர் கூட்டத்தைக் கூட்டாமல் காலம் கடத்தி வந்தார். இதனை எதிர்த்து பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தவர்கள் கண்டனக் கூட்டங்கள் நடத்தி கடுமையாக எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து முதலமைச்சர் சுப்பராயனே தலையிட்டு தாலுகா போர்டு கூட்டத்தைக் கூட்டாவிட்டால் போர்டையே கலைத்து விடுவேன் என்று எச்சரித்ததன் பேரில் போர்டு கூட்டம் கூட்டப்பட்டது, அந்தக் கூட்டத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் சமமாக அமர்ந்தார்.

* பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட -_ தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது.

* எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புல_ட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூராரையும் டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய் போட்டு உட்கார வைத்தார்கள்.

* 50 ஆண்டுகட்கு முன்பு ரயில்வே துறை நடத்திய சிற்றுண்டி விடுதிகளில்கூட பார்ப்பனருக்கும் -_ பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.



* 1943லும் குடந்தை அரசினர் கல்லூரியில், பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தன.

* புளியங்குடியில் ஒரு பார்ப்பனர் மீது வந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி பிராமணன் கொலை செய்திருக்கவே மாட்டான் என்று சாட்சிகளைப் பார்க்காமல் இனத்தை மட்டுமே பார்த்து தீர்ப்பளித்தார்.
 


 - நேயன்


- உண்மை இதழ், 16-30.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக