செவ்வாய், 13 மார்ச், 2018

எரிமலையாய் வெடித்தெழுந்த ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாதாரின் இனமான போர்க்குரல்



சென்னை, மார்ச் 11- தந்தை பெரியார் பற்றி பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா வின் சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து பார்ப்பனர் அல்லா தார் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகமெங்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் பா.ஜ.க.வினர் புரட்சியாளர் லெனின் சிலையை இடித்துத் தள்ளினர். அதையட்டி, அதே போல தமிழகத்தில் பெரி யாரின் சிலையையும் இடித்துத் தள்ளுவோம் என்று எச்.ராஜா தனது டிவிட்டரில் பதிவிட்டி ருந்தார். அதையட்டி 6.3.2018 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எச்.ராஜாவின் அடாவடிப் பேச்சை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனை வருக்கும் அழைப்பு விடுத்து ஒரு காணொலிப்பதிவை வெளி யிட்டிருந்தார்.

கட்சி, ஜாதி, மத பேதம் கடந்த தன்னெழுச்சியாக பார்ப் பனர் அல்லாதார் அனைவரும் அந்த அழைப்பை ஏற்று தமி ழகமெங்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன் பேரா. சுப.வீரபாண்டியன் அவர்களின் தலைமையில் அனைத்து கட்சி தோழர்களும் கலந்து ஆர்ப் பாட்டமும், சாலை மறியலும் செய்து எச்.ராஜாவின் கொடும் பாவியை கொளுத்தி கைதாகி னர். கைது செய்யப்பட்ட அனை வரும் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெருவிலுள்ள அரசு சமூக நலக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திலும், மறிய லிலும் இனமானத் தந்தை பெரியாரின் போர்க்குரலையே மக்கள் எதிரொலித்தனர் என் றால், சிறையிலும் மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்கிற வகையில் அருமையான கருத்த ரங்கம் பேரா. சுப.வீரபாண்டி யன் தலைமையில் நடைபெற் றது.

சிறைப்பட்டிருந்த தோழர் களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்கள் வருகை தந்தி ருந்து கைதானவர்களிடையே தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டக் களத்தின் தன் மையை விளக்கிப் பேசி அனைவரையும் வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அப் துல்சமது, சிபிஅய் கட்சியைச் சேர்ந்த பாக்கியம், மதிமுக திருவள்ளுவர் மாவட்ட செய லாளர் செங்குட்டுவன், திமுக மாநில மாண வரணி துணைச் செயலாளர் கவி.கணேசன், மதி முகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திமுகவின் பெரியார் பகுத்தறிவு கலை இலக்கியப் பேரவை யைச் சேர்ந்த பொள்ளாச்சி உமா பதி, விவசாய தொழிலாளர் கட்சி யின் பொதுச் செயலாளர் ஆறு முகம், திராவிட இயக்க தமிழர் பேரவையின் வடக்கு மண்ட லத் தலைவர் மு.மாறன், வடக்கு மண்டல செயலாளர் மு.தமிழ் மறவன், சென்னை மாவட்டச் செயலாளர் முத் தையா குமரன், பா.எட்வின், தே.மு.தி.க. மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கு.நல்ல தம்பி, வி.சி.ஆனந்தன், பால சுப்பிரமணியன், மதி வாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி, மதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டச் செய லாளர் சைதை ப.சுப்பிரமணி, திரா விடர் கழக தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத் தையன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர் செல் வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல் வம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன் குமார், சென்னை சட்டக்கல் லூரி மாணவர்கள் சார்பில் விஜ யன், திராவிடர் கழகப் பேச்சா ளர் தமிழ் சாக்ரட்டீஸ் ஆகி யோர் தோழர்களின் மத்தியில் தந்தை பெரியாரின் சிறப்பு களை அவரவர் கோணங்களில் பதிவு செய்தனர்.

மதியம் திராவிடர் கழகத் தின் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் வருகை தந்து கைதானவர்களை சந்தித்து கலந்து கொண்ட அனைவரை யும் வாழ்த்தி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ அவர்கள் கைதா னவர்களிடையே எச்.ராஜா வுக்கு பதிலடி கொடுத்து உரை யாற்றினார். அதைத்தொடர்ந்து விடுதலை நாளேட்டுடன் மீண் டும் வருகை தந்த திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள் பெரியாருடனான அரிய நிகழ்வுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அனைவ ருக்கும் 7.3.2018 அன்றைய விடு தலை நாளிதழ் வழங்கப்பட்டது.

இடையில் இனநலம் இசைக்குழுவின் சார்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், உடுமலை வடிவேல், பா.மணியம்மை ஆகியோர் இயக்கப் பாடல்கள், இனவு ணர்வு பாடல்களை பாடினர். உடன் மாறன் மற்றும் தோழர் கள் இணைந்து கலை நிகழ்ச்சி கள் மூலமும் உணர்வுகளை ஊட்டினர். கைதானவர்களில் விசிறி சாமியாரும் ஒருவர். அவரும் பெரியாரைப்பற்றி ஒரு பாடலை பாடி அனைவ ரையும் மகிழ்வித்தார். 200க்கும் மேற்பட்ட தோழர்களை மாலை 6.45 மணிக்கு விடு தலை செய்தனர்.

கும்மிடிப்பூண்டி மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் ஆனந்தன், வே.அருள், இராணி, மூர்த்தி, சோமு, கார்த்திக், சு. நாகராஜன், இரணியன், அறிவு மாணன், குணசேகரன், அஜித், திவான், ஜனாதிபதி, சு.எழில் ஆகிய தோழர்களும், தாம்பரம் மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் ப.முத்தையன், ஆர். டி.வீரபத்ரன், கோ.நாத்திகன், தாம்பரம் இலெட்சுமிபதி, மோகன் ராஜ், பொழிசை கண்ணன், சோமசுந்தரம், ராமலிங்கம், ஆறுமுகம், சிவாமி, அய்யப் பன், சொ.வீரசிவாஜி, முனை வர் உத்திரகுமார், விடுதலை நகர் ஜெயராமன், விஜயகுமார், ராஜேந்திரன், ராமண்ணா, மு.மணிமாறன், நீலாங்கரை குரு சாமி, இன்பவல்லி, மா.இராசு ஆகிய தோழர்களும் வடசென் னையிலிருந்து மாவட்ட செய லாளர் ஒளிவண்ணன், அன்பு செல்வி, சதிஸ், பாலு, சரவ ணன், பிரவின், யுவராஜ், அம் பேத்கர், எண்ணூர் மோகன், இராஜேந்திரன், மணிவண் ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, கணே சன், சுமதி, கொடுங்கையூர் கோபால், தங்கமணி, செல்வ குமார், ஆகிய தோழர்களும், ஆவடி மாவட்டத்திலிருந்து மாவட்டத் தலைவர் பா.தென் னரசு, நடராசன், முத்து கிருஷ் ணன், இரா.கோபால், மயிலை துணைச் செயலாளர் சு.இளவர சன், வனிதா, பெரி யார் மாணாக்கன், செல்வி, பசும் பொன் செந்தில் குமாரி, அருள் தாஸ் (எ) இரணியன் பெரியார் நாகராஜ், தமிழ்மணி, வெங்கடே சன், உதயா, அறிவு மணி, தமிழ் செல்வன், முருகன், வஜ்ரவேலு, தென் சென்னை மாவட்டத்திலி ருந்து மாவட்டத் தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, மஞ்சநாதன், செல்வேந்திரன், சண்முகப் பிரியன், திருமலை, அரும் பாக்கம் தாமோதரன், கடலூர் அருள்செல்வன், உதவி இயக் குநர் ஜெய், உதய ஸ்டீபன், பகவன் ஆகிய தோழர்களும் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 11. 3 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக