ஞாயிறு, 18 மார்ச், 2018

ஜாதி ஒழிப்பின் அடையாளமே பெரியார்! ‘எகனாமிக் டைம்ஸ்’ படப்பிடிப்பு

பெரியாரை ஏற்காத எந்த அரசியல் கட்சியும் வெற்றி பெற முடியாது

ஜாதி ஒழிப்பின் அடையாளமே பெரியார்!

‘எகனாமிக் டைம்ஸ்’ படப்பிடிப்பு



புதுடில்லி, மார்ச் 14 பெரியாரை ஏற்காத எந்த அரசியல் கட்சியும் வெற்றி பெற முடியாது;  ஜாதி ஒழிப்பின் அடையாளம் தந்தை பெரியார் என்று ‘தி எகானமிக் டைம்ஸ்’ (8.3.2018) புகழாரம் சூட்டியுள்ளது.

சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு

காரணம்

ஜாதி ஒழிப்பின் அடையாளமான பெரியார் சிலைமீது வேலூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பாக, பாஜகவின் நகர செய லாளர் ஒருவர் மற்றும் அவர் உறவினரும் கல் வீசியுள்ளனர்.

பெரியார் என்று அனைவராலும் அறியப் பட்டவரான ஈரோடு வெங்கட்ட ராமசாமி  முதல்முறையாக ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடினார். பெண்கள் உரிமை களுக்காக பாடுபட்டவர். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியின் வாழ்வும், பணியும்குறித்து பார்ப்போம்.

பெரியார் யார்?

ஈரோடு வெங்கட்ட ராமசாமி பெரியார் 1879ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் வணிகருக்கு  மகனாகப் பிறந்தார். பின்னர் தந்தையின் வணிகத்தையும் தொடர்ந் தார். 1919ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.பின்னர்அக்கட்சியில்பார்ப் பனர் ஆதிக்கம் இருப்பதை கண்டு, காங்கிர சிலிருந்து விலகினார். அதன்பிறகு தனி இயக்கத்தைத் தொடங்கினார். திராவிடர் கழகத்திலிருந்து அதன் கொள்கைவழியில் தமிழின் பெருமைகளை பாலமாகக்கொண்டு  அரசியல் கட்சிகள் தோன்றின.

பெரியாரின்  அரசியல் என்பது என்ன?

பெரியாரின் சிந்தனைகள், தத்துவங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் அவரு டைய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாகவே இருந்தது. மதக் கருத்துகள், பழக்கங்கள் பெயரால் அனைத்து பிரிவினரையும் பார்ப் பனர்கள் ஜாதியின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றார். பகுத்தறிவு கருத்துகளை எடுத்துரைத்து, இந்து மத மூட நம்பிக்கைகளை விமர்சித்தார்.

சமூக சமத்துவத்துக்கான அளவுகோல்

சமூக அநீதி மற்றும் சமத்துவமின்மையை ஒழிப்பதற்காக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். மத சடங்குகள், பார்ப்பனர்கள் இல்லாத திருமண முறையை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். கர்ப்பத்தடையின் அவசியம், தேவதாசி முறை மற்றும் குழந்தை மணமுறை ஒழிப்புக்காக பரப்புரை செய்தார்.

பார்ப்பனர்களின்

ஆதிக்கத்துக்கு எதிராக...

தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் திருக் குறளில் மட்டுமே எல்லோரும் சமம் என்றும், கடவுள் கருத்து இல்லை என்றும் கூறினார்.

கீழ்ஜாதிமக்களாகஇருப்பவர்கள்பார்ப் பனர்களின்ஆதிக்கத்திலிருந்துவிடுபடவேண் டுமானால், இசுலாம் மதத்துக்கு மாறிவிடலாம் என்றும், இந்த மதத்தைவிட அதில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.

பார்ப்பனர்களின் கருத்துகள் மற்றும் மத நடைமுறைகளை முற்றிலுமாக மறுப்பதை ஏற்காத காந்தியையும் பெரியார் எதிர்த்தார்.

பெரியார் இயக்கங்கள்

1924 ஆம் ஆண்டில் கேரளாவில் தாழ்த்தப் பட்ட வகுப்பு மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்.   கோயில் பகுதி களில் தாழ்த்தப்பட்டவர்கள் தெருக்களில் செல்வதற்கான உரிமை கோரி போராடினார். தாழ்த்தப்பட்ட கீழ்ஜாதி மக்களுக்கான தலை வராக பரவலாக அறியப்பட்டார்.

சுயமரியாதை இயக்கத்தின் வாயிலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கவுரவத்துக்காக பெரிதும் பாடுபட்டுவந்தார்.

தமிழ்நாட்டில்இந்திகட்டாயம்என்பதை எதிர்த்து போராடினார். தென்னிந்தியாவில் இந்திக்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னோடி பெரியார். தமிழர்கள்மீது பார்ப் பனர்களின் ஆதிக்கத்தை செலுத்துவதற்காகவே இந்திதிணிக்கப்படுகிறதுஎன்றார்.இந்தி யாவிலேயே ஜாதி ஒழிப்புக்கான அடை யாளமாக பெரியார் உள்ளார்.

பாஜகவிலும் பெரியாரின் தாக்கம்

இன்றும், தமிழ்நாட்டின் அரசியலில் பெரி யாரை ஏற்காத எந்த அரசியல் கட்சியாலும் வெற்றி பெறமுடியாது. பாஜகவில்கூட, பெரி யாரின் தாக்கம் சிறிதளவில் வெளிப்பட்டு வருகிறது. அக்கட்சியில் தமிழக அரசிய லில் பெரியாரை எதிர்ப்பவர்கள் எந்த வாய்ப் புகளையும் பெற்றிட முடியாது.
- விடுதலை நாளேடு, 14.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக