சனி, 17 நவம்பர், 2018

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவதான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட் கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குப் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது.

16-06-1929 - குடிஅரசிலிருந்து....

- விடுதலை நாளேடு, 17.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக