வெள்ளி, 6 செப்டம்பர், 2019

திராவிடர் கழகம்' பெயர் சூட்டியதன் காரணம்

திராவிடர் கழகம் என்பது இந்த நாட்டு மக்களது  கழகம். திராவிடர் என்று சொல்லுவதற்கு எவனும் ஒப்புக் கொள்ள மாட்டான். காங்கிரசுக் கட்சிக்காரனும், கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும், தமிழரசுக்காரனும், பார்ப்பானும், எவனும் ஒப்புக் கொள்ளமாட்டான். இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேர வரக்கூடுமாதலாலும், தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென்இந்தியாவில் வதியும் எல்லா மக்களுமே வரக்கூடுமாதலலும், இது தவிர்த்து தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும்  அந்த தலைப்பிலும் தமிழ்ப் பண்பில்லாத தமிழ்க் கலாச்சாரத்துக்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளக் கூடுமாதலாலும், மக்களை இனத்தின் பேராலேயே, கலாச்சாரத்தின் பேராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலும் பார்ப்பனரல்லாதார் கழகத்தை, ஜஸ்டிஸ் கட்சியைத்  திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டி ஏற்பட்டது.

(விடுதலை, 3.5.1954)

- விடுதலை ஞாயிறு மலர், 31 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக