புதன், 4 செப்டம்பர், 2019

பார்ப்பனீயத்தை ஒழிப்பதே நமது லட்சியம் காங்கிரஸ் மத ஸ்தாபனமான கதை

தோழர் அண்ணாதுரை விளக்கம்




(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


30.8.2018 அன்றைய தொடர்ச்சி


காங்கிரஸ் புதிய மதமான விதம் வெள்ளையரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்யப் போவதாகச் சொன்ன காங்கிரஸ், அதே சமயத்திலே மெல்ல மதமாயிற்று; பாரத மாதா சிருஷ்டிக்கப்பட்டாள்; மகாத்மா ஏற்பட்டார். அவர் ஒரு கரத்தில் கீதையும் மற் றொரு கரத்தில் கைராட்டையும் எடுத்துக்கொண்டு, காட்சி அளிக்க ஆரம்பித்தார். உபவாசம், ஆராதனை, அந்தராத்மா முதலியன அவருடைய அரசியல் வாழ்க்கையிலே ஒளிவிட்டுப் பரிமளிக்கத் தொடங்கின.

மதச் சடங்குகளையொட்டிய தேசீய சடங்குகள் துவக்கப் பட்டன. மதத்தின் பேரால் எவ்வளவு கொடுமைகள் ஏற்பட்டாலும் மதத்தை சுயநலக்காரர்கள் எந்த வகையிலே உபயோகித்துக் கொண்டாலும், குற்றங்களை எடுத்துக் கூறுவது, பாவம்; அவன் மதத் துரோகி என்ற மனப்பான்மை வளர்க்கப் பட்டதோ அதே விதத்திலே காந்தீயம் வளர்ந்தது. பழமை. விரும்பிகள் அதிலே சொக்கி விட்டனர். வர்ணா சிரமத்தின் கொடுமையை உணர்ந்தவர்களும், காந்தியார் கூறியதாலே வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கவும், வர்ணாசிரமத்தையே அடிப்படையாகக் கொண்ட பழங்கால ஆட்சிமுறையை உயிர்ப்பிக்கவே பாடுபடுவதாகவும் பகிரங்கமாகக் கூறலாயினர். இது மதத்திலே இதுகாறும் தரகர்களாக இருந்து வகுப்பு ஆணவத்தை நிலைநாட்டிய பிராமணர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பமாயிற்று. பிராமணீயத் தின் கட்டுத் தளரும் சமயத்திலே காந்தீயமாகக் கவசம் கிடைத்தது. இது பிராமணீய மதத்திற்குப் பெரிதும் பயனளித் தது. பெரியவர்' எனப் பெயரெடுத்தவர் எதைக் கூறினும் - அது அறிவிற்கும் சரித்திரத்திற்கும் எவ்வளவு மாறுபட்ட தாக இருப்பினும் - அவர் சொல்கிறார், ஆகவே அதன்படி நடப்பதே சரி என்ற பிராமணீயம் அரசியலிலே முக்கியமான அம்சமாகிவிட்டது. மதமென்றால் அதன் மூலமாகவே மனிதன் வாழ்க்கை உயரும் என்று நம்பியே ஏமாந்த போதி லும், அந்த நம்பிக்கையில் சிறிதும் சந்தேகம் கொள்ளாதிருப் பது எப்படி பிராமணீயத்தால் ஆதிகால முதற்கொண்டு போதிக்கப்பட்டு வந்ததோ, அதே முறையிலே காங்கிரஸ் உபதேசங்கள் போதிக்கப்பட்டு வந்தன. ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, உப்பு சத்தியாக்கிரகம் முதலிய காங்கிரஸ் முறைகள் தோற்றனவே என்று மக்கள் எண்ண ஆரம்பித்த உடனே, மகாத்மா இருக்கிறார், காங்கிரஸ் இருக்கிறது, அதை நம்புங்கள், நமது நாட்டிற்கு விமோசனம் உண்டு என்று கூற ஆரம்பித்தனர். இது புதிய மதப்பிரச்சாரத்தைக் தவிர வேறு என்ன?

மற்றைய அரசியல் கட்சிகளும் காங்கிரசும்

காங்கிரசுக்கு தெய்வீக சபை என்ற அடைமொழியைக் காரணத்தோடுதான் அதன் சூத்ரதாரிகள் சூட்டினார்கள். மற்றையக் கட்சிகளிலே, வைதீகர்கள், மதக்கிறுக்கர்கள் உண்டு.பழனியப்பனின் பாலாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு களிப்பதிலே 'பிரேமை' கொண்ட ஐஸ்டிஸ் மந்திரிகள் உண்டு. சுயமரியாதை இயக்கத்தின் தீவிரம் பிடிக்காத பழமை விரும்பிகளும் ஜஸ்டிஸில் உண்டு. அவர்களை நாம் கடந்த தேர்தலில் ஆதரித்தோம். ஏன்? அதைத்தான் நமது எதிரிகள் திரித்துக் கூறுவது வழக்கம். ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களில், மதக் கிறுக்கர்களும், வைதீகர்களும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியில் அரசியல் வேலை மதமாக மாற்றப்படவில்லை. அது பாரத மாதாவற்ற, மகாத்மாவற்ற, ஜெபந்திகளற்ற ஒரு சாதாரண அரசியல் கட்சி. அதை ஆதரிப்பதன் மூலம் நாம் வைதீகத்தை ஆதரித்ததாகக் கூற முடியாது. அது வெறும் அரசியல் காரியங் களையே செய்து வந்ததே தவிர, அடிமை மனப்பான்மையை வளர்க்கும் விதத்திலே மதமாக்கப்படவில்லை. அத்துடன் அக்கட்சி, வைதீகக் கோட்டையின் காவலர்களான பிராமணர்களின் அரசியல் ஆதிக்கத்தை அழித்தது. ஆகவே அந்த அள விற்கு, நமது அன்பிற்குப் பாத்திரமாயிற்று.

இன்றைய நிலைமை

இனி நாம் அரசியலிலே புகுந்து நமது சமூக சீர்திருத்தப் பணியையே செய்வோமென்றால் இன்றைய நிலையில் புரோகித் ஆட்சி ஏற்பட்டுப் புதிய மதம் போதிக்கப்பட்டு அதற்கான பூசாரிகள் பக்தர்களைக் கசக்கிப் பிழிந்து காணிக்கை வாங்கிப் பிழைப்பதை எப்படிக் கண்டிக்காம லிருப்பது என்று கேட்கிறேன். சென்னை மந்திரி சபையின் போக்கிற்கேற்றபடி அதன் தலைவருக்கு ஆச்சாரியார்' என்ற குலப்பட்டம் இருக்கிறது. உங்கள் ஜில்லாவிலே அவரை அரசமர்த்து சாமி' என்று அழைப்பதுண்டாம். மதக் கட்டளைப்படி. 'ஆச்சாரியார்' இடும் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நடப்பதே பரம பாகவத சிரோமணியின் கடமை. அதைப்போலவேதான் காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினரும், பத்திரிகை உலகும், காங்கிரஸ் அன்பர் களும் 'ஆச்சாரியார் திருவடிகளே சரணம்' என்று காலட் ஷேபம் செய்து வருகின்றனர்.

நடப்பது காங்கிரஸ் ஆட்சியன்றோ, இதிலே "வெள்ளை யரை" விரட்டும் வேலையல்லவா நடக்க வேண்டும், ஏகாதி பத்தியத்தை, எதிர்க்கும் வேலைதானே நடக்க வேண்டும், புதிய சில திருத்தத்தைத் தாக்கும் வேலைதானே நடக்க வேண்டும், அதற்கு மாறாக ஆச்சாரி மந்திரி சபை கவர் னருடனும் கலக்டருடனும் விருந்துண்பதும், திட்டங்கள் போடுவதும், அதிகாரவர்க்கத்தைப் புகழ்வதுமாக இருக் கிறதே என்று கேட்டால் உடனே ஆச்சாரியாருக்கு எல்லாம் தெரியும் காங்கிரசை நம்புங்கள் என்று கூறப்படுகிறது. இது மதமான பாணியைத் தவிர வேறு என்ன என்று கேட்கிறேன். மகத்தான நன்மைகளைச் செய்யப் போவதாகச் சொல்லி அமைக்கப்பட்ட மந்திரிசபை இது என்பதையும் இதற்கு 'அசைக்க முடியாத மெஜாரிட்டி இருப்பதையும் மறந்து விடலாகாது. இப்படிப்பட்ட சபையின் ஆட்சியிலே,

தமிழ் நலம் பேணும் தகவுடைச் சான்றீர்!


வணக்கம், தொண்டு, தமிழ், முன்னேற்றம் எனும் உயரிய குறிக்கோளோடு 1911இல் தொடங்கப் பெற்ற எம் கரந்தைத் தமிழ்ச் சங்கம் இன்றளவும் நூற்றாண்டைக் கடந்து சிறப்பான முறையில் தமிழ்ப் பணியாற்றி வருவது தாங்கள் அறிந்ததே.


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்து முதற்றலைவராக முப்பது ஆண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அப்போதே 1937இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஹிந்தி மொழிக் கண்டனக் கூட்டம் நடத்தி அதில் அவர் ஆற்றிய வீர முழக்கத்தின் செய்திகளை தொகுத்து கடந்த 09.08.2019ஆம் நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மிக முக்கியமான இச் செய்தியினை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது. தற்போது இதனை வெளியிட்டு உதவிய விடுதலை ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கி.வீரமணி அவர்களுக்கு சங்கச் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்றி


- ச.இராமநாதன்
செயலாளர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்
கரந்தை, தஞ்சாவூர்-2

 

'பிற்போக்காளர்' குறைந்ததைவிட அரைச் சல்லியும் மேற்கொண்டு குறையவில்லை. பிற்போக்களார் கடன் வாங்காது சர்க்காரை நடத்த, இந்த தெய்வீக சபையின் மூத்த மகன் ஆரம்பத்திலேயே ஒன்றரைக் கோடி கடன் வாங்கி ஆகிவிட்டது. வெள்ளைக்காரர் ஓடவில்லை, வெள்ளைக் காரர் சம்பளம் குறையவில்லை, மந்திரிகளின் சம்பளம் குறைக்கப்பட்டதே தவிர் மந்திரிசபையின் செலவோ, சர்க்காரின் ஏகதேசச் செலவோ குறையவில்லை. வாழ்த்தி வரவேற்கப்பட்ட இந்த ஆட்சியிலே மது விலக்கு எல்லா மாகாணங்களிலும் வராது என்பது விளக்கமாகக் கூறப்பட்டு விட்டது.

இந்த ஆட்சியிலே கவர்னர் குறுக்கிட்டால் என்ன செய்வது என்ற குளிர் அடிக்கடி ஏற்பட்டுவிட்டது. தேசியக் கொடியை, காங்கிரஸ் கொடி என்றதும், வைத்தியக் கல்லூரிக்கு வெள்ளைக்காரரை நியமித்ததும், மாரடோரியம் மசோதாவை வீழ்த்தியதும், இக்குளிர் காரணமாகத்தான். இந்த ஆட்சியிலே, தொழிலாளர் வேலை நிறுத்தம் 144, 124 ஏ பிரிவின் படி தண்டனை, சமதர்மிகளுக்கு நெருக்கடியான நிலைமை, தடியடி, பத்திரிகை ஜாமீன், வீடு சோதனை போன்ற அடக்கு முறைகள், ஒன்றுகூட பாக்கியின்றி நடந்தேறி விட்டன. "தமிழர் எதிர்த்தாலும் பொருட்படுத்த மாட்டேன், இந்தியைக் கொண்டு வந்தே தீருவேன்" என்ற பிடிவாதம், எதேச்சதிகாரம், இட்லரிசம், இந்த ஆட்சியிலே காண்கிறோம். இந்த ஆட்சியிலே துரோகி களுக்குப் பரிவும், உழைப்பவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கிறது. இந்த ஆட்சியிலே நிர்வாகத்தின் அழகு சென்னை கார்ப்பரேஷன் ஊழல் படலத்திலேயே விளக்கப்பட்டு விட்டது. இவ்வளவு அவலட்சணம் பொருந்திய ஆட்சியைக் குறைகூற, கண்டிக்க யாரேனும் வந்தால் அவர்கள் தூற்றப்படுகிறார்கள், சந்தேகிக்கப்படுகிறார்கள் என்றால், அது, எதை விளக்கிக் காட்டுகிறது என்றால், காங்கிரஸ் ஒரு புதிய மதமாக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

சமுதாயத்திலே கோளாறுகளை உற்பத்தி செய்தது போல, அரசியலிலும், அதன் மூலமாக சமுதாயத்திலும் புதிய மதம், கேடுகளையே விளைவிக்கும். இந்த ஒரு முக்கிய காரணம் பற்றியே நமது இயக்கம் இனி இந்த மதப் பிரசாரத்தையும் இதனாலேயேற்படும் கேடுகளை யும் எடுத்துக் கூறி, மதப்புரட்டர்களை ஒடுக்கியது போலவே, அரசியல் புரட்டர்களையும் ஒடுக்க வேண்டும். இரண்டும் ஒன்றாகவே இன்று காட்சியளிக்கிறது. ஆகவே அப்புரட்டை வெளிப்படுத்தும் பிரச்சாரத்திற்கான வழிகளைப் பலப் படுத்தவும் கிராமாந்திரங் களிலே நமது பிரச்சாரம் செல்லும் விதத்தையும் மகாநாட்டினர் ஆராய்ந்து ஆவன செய்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மறுமுறை இக்கௌரவத்தை எனக்களித்த உங்களுக்கு என் வந்தனத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்'.

நிறைவு

- விடுதலை, 13.12.1937

-  விடுதலை நாளேடு, 2.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக