சனி, 14 செப்டம்பர், 2019

மதுரை ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு

பிரிட்டானிய-பிராமணிய அடிமைத்தனத்தை ஒழிப்பதே சுயமரியாதை லட்சியம்


தலைவர் ம.ரெ.திருமலைசாமி விளக்கம்

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 


'ஜி. ஓ' சித்திரவதை


'கேம்யூனல் ஜி. ஒ'வை உயிரோடு வைத்துக் கொண்டே அதைச் சித்திரவதை செய்கிறார்கள். இந்த மந்திரிகள். சமீபத்தில் நியமிக்கப்பட்ட 25 மிருக டாக்டர்களில் 19 பேர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை ஞாபகப்படுத்தும்போது உங்கள் நெஞ்சு எப்படித் துடிக்கும் என்பதை அறிவேன்.

காலேஜ் கமிட்டி பார் கவுன்சில்.


எல்லாவற்றிற்கும் மேலாக, காலேஜ் செலக்ஷன் கமிட்டியை ரத்து செய்ததும், பப்ளிக் பிராசி கியூட்டர் நியமனத்தை 'பார்' கவுன்சில் மூலம் (வக்கீல் சங்கத்தின் மூலம்) தேர்ந்தெடுக்க வேண்டும் என்று செய்துள்ள உத்திரவும் பிராமணரல்லாதாரை நசுக்கிக் கொல்லக் கூடியது. காலேஜ் செலக்ஷன் கமிட்டி இருந்த காலத்தில் பிராமணரல்லாத மாணவர்கள் காலேஜ் வகுப்பில் படித்த மாதிரி இனி அதிகப்படியான பேர் படிக்க முடியாது. ஒவ்வோர் ஊரிலும் பிராமண வக்கீல்களே பன்றிக் குட்டிகளைப் போல் மலிந்திருப்பதால், இனி இந்த 'யூதர் களுக்கு' அடிமையாயிருந்தாலன்றி, சுயமரியாதையுள்ள பிராமணரல்லாத வக்கீல் ஒருவர்கூட பப்ளிக் பிராசிக்யூட் டராக முடியாது.

ஹிந்தி


ஹிந்திப் படிப்பைப் புகுத்துவதைப் பற்றித் தான் என்னென்று நினைக்கிறீர்கள்? தேவநாகரி எழுத்து ஆரியக் கலையைச் சேர்ந்தது. அந்த எழுத்தை ஹிந்தி மூலம் நுழைத்து, செத்துப்போன சமஸ்கிருதத்துக்குப் பிரேத வைத்தியம் செய்து உயிர்ப்பிப்பதற்காகவே ஹிந்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். படித்து வேலையின்றித் திரியும் பிராமணப்பையன்களுக்கு ஜீவனோபாயங் காட்டுவதே ஹிந்தித்திட்டம்.

சம்பள வெட்டு


சம்பளக் குறைப்பு ரகசியந்தானென்ன? எல்லா உத்தியோகஸ்தர் சம்பளங்களிலும் பிடித்தம் செய்யப் படுமென்று முதல் அறிக்கை வந்ததும் பிராமண சமூகமே ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்தது. தோழர் ஆச்சாரி அவ்வளவு தூரம் ரத்த வாஞ்சையற்றவரா? ஆகையால் பிராமண உத்தியோகஸ்தர்களுக்குப் பரிந்து அதை விட்டுவிட்டு புதுப்பாய்ச்சல் பாய்ந்தார். 1937முதல் நியமிக்கப் பட்டவர்கள் சம்பளத்தையே குறைக்கப்படுமென்று திருத்தினார். இதனால் பிராமணர்கள் எவ்வாறு காப்பாற்றப் பாற்றப்பட்டார்கள் என்பதும் பிராமணரல்லாதார் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாதலால் நான் விவரிப்பது அனாவசியம்.

கசகிப்புத் தன்மை?


ஹிந்தி கட்டாயப் பாடமாக வைக்கவேண்டாம் என்று இவ்வளவு காலமாய் எவ்வளவோ நயமாய்ச் சொல்லிப் பார்த்தோம். அதனால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக் காட்டினோம். யாரோ ஹிந்தி படித்த பிராமணர்களுக்கு சோறு போடுவதற்காக இந்த தவறான வழியில் நுழைவதை விட்டு வேறு ராஜபாட்டையில் நுழையும்படியும் கூறினோம். ஊர் ஊருக்குக் கூட்டங்கள் போட்டுச் சொன்னோம். பத்திரிகைகளில் எழுதினோம். மாகாண மகாநாடுகள் போட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தைத் தெரிவித்துக்கொண்டோம். எவ்வளவு நயந்து கூறியும் நமது கூக்குரல், செவிடன் காதில் ஊதியசங்காக முடிந்தது. எதேச்சாதிகாரமில்லாமல், வாஸ்தவமாகவே ஜனநாயக முறைப்படி இந்த சர்க்கார் நடக்குமானால் நமது அபிப்பிராயத்தைத் தழுவி நடந்திருக்கும். என்ன செய்யலாம்! வெற்றி மமதையும், மெஜாரிட்டிக் கொழுப்பும் தென்னாட்டு யூதர்களின் கண்களில் காதுகளில் - நெஞ்சில் தடித்தனம் ஏறி நிற்கிறது. நமது சகிப்புத் தன்மை எவ்வளவுண்டோ அவ்வளவும் காலியாகிவிட்டது. சகிப்புத்தன்மை காலியானால் அதற்கும் பின் எஞ்சியிருப்பவை தான் நம்மிடம் மிஞ்சியிருக்கின்றது. இதையும் தோழர் ஆச்சாரிக்கு நேச முறையிலேயே தெரிவித்து விடுவோம்,

6 மாதகாலப் படிப்பினை


இந்த 6 மாத அரசாங்க வாழ்வில் நம் நாட்டு ஓட்டர் மகாஜனங்களுக்கும் தகுந்தபடிப்பினை ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ்காரருக்குப் பெட்ரோலும் மோட்டாரும் கொடுத்துதவிய லேவாதேவிக்காரன் விவசாயக் கடன் நிவாரண மசோதாவைப் பெற்றான்.

கடைகளை மூடி காங்கிரசுக்கு ஒட் சேகரித்த ஜவுளிக் கடைக்காரனும் மில் சொந்தக்காரனும். தன் துணிக்கு வரி விதிக்கப் பட்டான்.

மஞ்சள் பெட்டியை மகத்துவமாகக் கருதிய விவ சாயிக்கும், மிராசுதாரருக்கும் கோர்ட்டு கட்டணமும், ரிஜிஸ்டர் கட்டணமும் அதிகமாக்கப்பட்டன,

நாட்டு வைத்தியர்கள் ரூபாய் கட்டி லைசென்ஸ் பெறும்படி உத்திரவு பிறப்பிக்கப்பட்டர்கள்.

கள்ளுக்கடை மூடுவதன் பேரால், தங்கள் பிள்ளைகள் படித்துவந்த பள்ளிக்கூடங்களை எடுத்துவிட்ட பலன் தான் கிராமவாசிகளுக்குக் கிடைத்தது.

திறந்திருக்கும் ஆஸ்பத்திரிகளும் மூடப்படப் போகின்றன. பிரத்தியக்ஷ பலன் இதுவாயிருக்கும்போது இதுவரை காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாய் ஆதரித்து வந்தவர்கள் இனி ஒருக்காலும் அப்படி தவறு செய்து தவிக்கப் போவதில்லை. ஒருவனை ஒருவன் ஒருதடவைதான் ஏமாற்ற முடியும்; பலரை ஒருவன் பலகால மும் ஏமாற்ற முடியாதென்பது அனுபவ உண்மையாயிருக்கும் போது, காந்தி நிழலிலும் கதர் மறைவிலும் புகைக்கண்ணாடித் திரையிலும் ஆச்சாரி வர்க்கம் பொதுமக்களை ஏமாற்றி நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது.

தோள் தட்டி எழுங்கள்!


ஆகையால் தோழர்களே எழுங்கள்! உலக சரித்திரத்தில் தான் சொன்ன சீர்திருத்தம் தன் காலத்திலேயே செயலில் நடப்பதைப் பார்த்து மகிழும் பெருமை எவருக்கும் இருந்ததாக நாம் படித்ததில்லை. அப்படியிருந்தும் தாம் நேற்று சொன்னதை இன்று மக்கள் பின்பற்றி நடப்பதை கண்ணாறக் கண்டு அந்த உற்சாகத்திலேயே திகழ்ந்து இன்னும் திடமுடன் வேலை செய்யும் தோழர் ஈ.வெ.ரா. நம்மிடம் இருக்கும்போது சூழ்ச்சியே உருவான எத்தனை ஆச்சாரிகள் தோன்றினாலும், எவ்வளவு இன்னங்கள் விளைத்தாலும், அவற்றைக் கண்டு அஞ்சாது எதிர்த்து, நொறுக்கி, தூளாக்கி நமது கடமையை செய்துகொண்டுதான் மேலேறிப் போகப்போகிறோம் எண்ணற்ற சோதனை காலங்களிலெல்லாம் நம்மை ஆதரித்த மக்கள் நம்முடன் இருக்கிறவரை, நாம் எதைக்கண்டும் ஏங்கி நிற்கப் போவதில்லை. நமது சமூக நாகரீகத்தைக் குழி தோண்டிப் புதைக்கத் தோன்றிய பிராமணியத்திற்குச் சாவுமணி அடித்தாகிவிட்டது. சீர்திருத்தப் பிரயாணத்தில் எத்தகைய தியாகத்துக்கும் ஈடு செய்து கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராய் இருக்கிறோம் என்பதையும், தலைவர் ஆக் ஞைப்படி எப்பேர்பட்ட அக்கினிப் பரீக்ஷைக்கும் நாம் ஆளாகத் தயாராயிருக்கிறேம் என்பதையும், நமது தலைவர் ஈ.வெ.ரா. அவர்களுக்கு உங்கள் பெயரால் உறுதி கூறிவிடுகிறேன். இனி நமது ஆவியை அன்னாரது கையில் ஒப்படைப்போம்.  தோழர்களே, தோள் துடைத்து, புஜங்குலுக்கி, தொடை தட்டி வாழ் வோமாக.

- விடுதலை, 16.3.1938

விடுதலை, 11.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக