சனி, 14 செப்டம்பர், 2019

திராவிடர் கழகத் தொண்டு

7.10.1944  குடிஅரசிலிருந்து...

இளைஞர்களே!

தென் இந்தியர் நல உரிமை சங்கம் என்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், மற்றும் தமிழர் கட்சி என்றும், பல பெயர் களால் அழைக்கப்பட்டு வந்த நமது ஸ்தாபனத்திற்கு சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் கொடுக்கத் தீர்மானித் தபடியும் அந்தப் பெயரால் அங்கத்தினர்கள் சேர்த்து ஸ்தாபன அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்த படியும் அவை பற்றி இந்த ஒரு மாத காலம் தமிழ்நாட்டில் தக்க தொரு எழுச்சி ஏற்பட்டி ருக்கிறது; அது குறித்தும் ஆங்காங்கு மாநாடுகள் நடை பெறுவது குறித்தும் தீவிரமாய் அங்கத்தி னர்கள் சேர்க்கப்பட்டு கழகங்கள் நிறுவப் படுவது குறித்தும் நமது கட்சி, கவலையும், பொறுப்பும் உள்ள மக்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடையாமலிருக்க மாட் டார்கள்.

இன்று வரை தமிழ்நாட்டில் 3000க்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் சேர்க்கப்பட் டிருக் கிறார்கள். (திருச்சி ஜில்லா 1000 அங்கத்தினர்களைச் சேர்த்து விட்டது. தஞ்சை ஆயிரத்துக்கு நெருங்குகிறது) என் றும் அந்த அங்கத்தினர்களைக் கொண்டு சுமார் 100 கழகங்கள் வரை புதுப்பித்தும் புதிதாய் அமைக்கப் பட்டும் இருக்கிற தென்றும், செயற் குழுவினர் பெயர் களுடன் தகவலும் தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்ற சேதியைக் கேட்ப தானது மேலும் மகிழ்ச்சிக்குறியதும் பாராட்டக் கூடியதுமானாலும் இதன் பயன் நம் எதிரிகளுக்கும், எதிரிகளின் கூலிகளுக்கும், சுயமரியாதைப் போர்வை போர்த்துக் கொண்டு சமய வெறியர் களாகவும், சமய சஞ்சீவிகளாகவும், உள்ளே இருந்து கொண்டே கேடு செய்யக் கருதி நல்ல  பிள்ளைகள் போல் நடித்து வெளியே விஷயம் வெளியானதும் நெட்டித் தள்ளப் பட்டவர்களாகவும், உள்ளவர்களுக்கும் மற்றும் கழகத்தின் பேரால் இனி பிழைக்க முடியாமல் போய்விட்டதே என்று கருதிய சில கட்சி வயிற்றுப் பிழைப்பாளர்களுக்கும் இதைப் பார்த்தும் கேட்டும் வயிற்று உழைச்சல் ஏற்படவும் அதன் காரணமாய் கண்டபடி உளறிக் கொட்டவும் வசை புராணம் பாடி, எதிரிக்குக் கொடுத்துக் கூலி பெறவுமான காரியங்கள் செய்யாமலிருக்க முடியாதது மான நிலை ஏற்பட்டு விட்டது. இது ஒருபுறமிருக்க, இன்று திராவிடர் கழகத்துக்கு ஏற்பட்ட பரபரப்பு உணர்ச் சிக்கும், ஆயிரக் கணக்கான மக்கள் அங்கத்தி னர்களாகச் சேர்வதற்கும், அமைப்புகள் ஆங்காங்கு அமைவதற்கும் புதிய கார ணங்கள் இல்லாமல் இல்லை. தென் இந்தியர் சங்கம் ஷி.மி.லி.தி. (ஜஸ்டிஸ் கட்சி) என்றால் ஜமீன்தார், மிராசுதார், அரசியல் விளம் பரத்தால் பதவி பணம் பெற தவிக்கும் வியாபாரிகள், பெரிய வக்கீல்கள், கட்சியின் பேரால் வயிறு கழுவும் மக்கள் ஆகியவர்கள் கட்சி என்று மக்கள் கருதும் படியாக இருந்து வந்து அதனால் கட்சி பொது மக்களின் ஆதரவற்று கட்சி ஆளு களும், கட்சிக் கூட்டமும், கட்சி நடவடிக் கைகளும் அரண்மனைகளிலும், மாளிகை களிலும், பத்திரமான மண்டபங் களிலும், இருந்து கொண்டு இருந்த காலத்தைவிட இன்று திராவிடர் கழகமாக பெயர் கொண்ட உடன், இன்று (ஜஸ்டிஸ் கட்சி) மரத் தடியிலும் மந்தை வெளியிலும் இருந்து கொண்டு பொது மக்களும் சிறப்பாக பல தடவை சிறை சென்றவர்களும் பட்டம் பதவி ஏன், வயிற்றுத் பிழைப்புகூட இதன் பேரால் விரும்பாதவர்களும், பலர் செய்த துரோகங்களுக்கும் விஷமத்தனமான பழிச் சொல்லுகளுக்கும் ஏன்? அடிக்கும் உதைக் கும் காலித்தனத்துக்கும் கூட கடுகளவு கலங்காத வாலிபர்களும், பட்டிக் காடு முதல் பட்டணங்கள் வரை உள்ள திராவிடர்களில் பெரும்பாலோருடைய மனதைக் கொள்ளை கொள்ளும்படி உண் மையை எடுத்துக் கூறியாவர் உள்ளத்திலும், திராவிடவுணர்ச்சி பொங்கி எழும்படி செய்ய உடனடியும் உள்ளத்தையும் கொடுத்து உண்மையாய் தொண்டாற்றும் பட்டதாரிகளான பல இளைஞர்களும் ஆன மக்களிடத்தில் வந்துவிட்டதால் தனது குலத்தில் அய்யப்பட வேண் டியவன் தவிர மற்றவர்கள் யாவரும் ஏதாவதொரு விதத்தில் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. அல்லாமலும் திராவிடர் நலத்தைக் காட்டி கொடுத்துப் பயன் பெற வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் முழு கட்டுப் பாடாய்ச் சிலர் செய்து வரும் விஷமத் தனங்களைக் கண்டு அப்படிப்பட்ட அவர்களுக்குத் தகுந்த  பதில் கொடுக்க வேண்டும் என்கின்ற அளவில் தனித்தனி முறையில் பொது மக்களே முயற்சி எடுத்துக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிட்டது. ஆனால், இதுவே போதும் என்று நாம் கருத வில்லை. இனி தான் நாம் செய்ய வேண்டிய வேலை இருக் கிறது. தமிழ் நாட்டில் சேலம் தீர்மானப்படி குறைந்தது 10000 அங்கத்தினரும், 100க்கு குறை வில் லாத  கழக அமைப்புகளுமாவது கூடிய சீக்கிரம் ஏற்பட்டால்தான் திராவிட நாட் டின் மற்ற பாகங்களையும், தமிழ் நாட்டைப் பின்பற்றச் செய்ய வாய்ப்பாய் இருக்கும். இதுவரை 10000 அங்கத்தினர்கள் சேர்க்கும் இரசீதுகளுக்கு மேலாகவே தலைமைக் காரியால யத்தில் இருந்து பல இடங்களுக்கும் அனுப்பப் பட்டிருப்பதாக தெரிகிறது. அனுப்பப்பட்டவர்களுக்கு 2, 3 ரிமைண்டர், ஞாபகப்படுத்தும் குறிப்புகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த மாதத்தில் அனேகமாய் இந்த 10000 பேர்கள் சேர்க்கப்பட்டாகி விட்டால் தான் தலைவரும் மற்றவர்களும் வேறு காரியங்கள் பார்க்க முடியும்.

நம் மாகாணத்தின் மற்ற இடங்களி லிருந்து சேலம் மாநாட்டுத் தீர்மானங் களைப் பாராட்டியும் தங்கள் நாட்டில் வந்து தமிழ்நாட்டைப் போலவே வேலை துவக் கும்படி வருந்தி அழைத்தும் தலைவ ருக்குப் பல  கடிதங்கள் வந்த வண்ண மிருக்கின்றன.

மற்றொரு மகிழ்ச்சிக்கு உரிய சேதி என்னவென்றால் சேலம் தீர்மானத்தை பற்றி நம் எதிரிகளும் நம் துரோகிகளும் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாய் அவற்றைப் பத்திரிகைகளில் கண்ட வெளி மாகாணத் தார் பஞ்சாப், லக்னோ முதலிய மாகாணங்களில் உள்ள சில தோழர்களால் தங்கள் மாகாணங்களுக்கும் வந்து கழகங்கள் அமைக்கும்படியும் திராவிடர் கழகத்தோடு சேர்த்துக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். திருவாங்கூர், கொச்சி முதலிய சமஸ் தானங்களிலிருந்தும் தாங்களும் திராவிடர்கள் என்றும் தங்களையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கடிதங்கள் வந்திருப்பதாகவும் தெரிகிறது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய மாகாணத்தையும் மகாராஷ்டிரர் உள்ள மற்ற பாகத்தையும் சேர்த்துக் கொண்டால் நலமாக இருக்குமென்றும், அவர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது வாசகர்கள் அறிந்ததேயாகும்.

அய்க்கிய மாகாண டாக்டர் மூஞ்சே அவர்கள் திராவிடர் கழகத்தின் சமயம், சமுதாயம் ஆகியவை சம்மந்தமான எல்லாத் தீர்மானங்களையும், ஏற்றுக் கொள்வ தாகவும், வேண்டுமானால் இந்து மகாசபை மகாநாட்டில் வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகவும் இந்தியா பூராவுக்கும் திராவிடர் கழகம் வேலை செய்ய தாம் ஒத்துழைப்பதாகவும் கூறி இருக்கிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவைகளையெல்லாம்விட மற்றொரு அதிசயம் என்னவென்றால் தோழர் எம். என்.ராய் அவர்கள் சுமார் 2 வருஷங்களுக்கு முன்பாகவே திராவிடர் கழக சமய சமுதாய தீர்மானங்களைப் பாராட்டி ஏற்று தனது கட்சியுடன் இக்கொள்கைகளையும், திராவிட நாடு பிரிவினையையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்யச் செய்கிறேன் என்றும் சொன்னதோடு, பல இடங்களில் அந்தப்படி செய்தும் இருக்கிறார். ஆகவே நமது கட்சி நமது கொள்கை நமது திட்டம் ஆகியவைகள் இன்று எல்லா இந்தியாவி லுள்ள மற்ற முக்கியக் கட்சிகள் கவனிக் கவும், பின்பற்றவும், பங்கு கொள்ள ஆசைப்படவும் செய்திருக்கிறது என்பதற்கு இது போதுமான ஆதாரங்களாகும்.

நம் எதிரிகளின் எதிர்ப்புப் பிரசாரமும், நம் துரோகிகளின் விஷமப் பிரசாரமும் ஒரு அளவுக்கு நமக்கு இந்த நிலை ஏற்பட உதவி செய்திருக்கிறது என்பதும் மனமார ஒப்புக் கொண்டு ஒளிக்காமல் சொல்ல வேண்டிய காரியமாகும். ஆகவே, ஆர்வமும் ஆற்றலும் எழுச் சியும் உள்ள தமிழ்நாட்டு வாலிப இளை ஞர்களே உங்கள் கடமை சேலத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்த தோடு நின்றுவிடவில்லை என்றும், இம் மாதத்திற்குள் நிபந்தனையை நிறைவேற்றிக் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை என்றும், இம்மாதத்திற்குள் நிபந்தனையை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டிய பொறுப்பிலும், கடமையிலும் இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அங்கத்தினர் சேர்க்கும் இரசீது புத்தகத் திற்கு தலைமை காரியாலயத்துக்கு  எழு துங்கள்.  எழுதுகிறவர்கள் முதலில் அங்கத் தினராகச் சேர்ந்து விட்டதாக ரிப்ளை கார்டில் எழுதி விட்டு இரசீதுகளுக்கு எழுதுங்கள்.

- விடுதலை நாளேடு, 7 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக